இரட்சிப்பின் வழி இயேசுவே
Wed Aug 07, 2013 6:42 am
இயேசு என்ற பெயரை கேட்டதும் பலர் வெறுப்பது உண்டு. இயேசு என்பது நம் நாட்டுப் பதம் இல்லையே என்கிறார்கள்.
கவனியுங்கள், இயேசு என்ற பதம் கிரேக்க பாஷையில் இருந்து வந்தது. அதற்கு "பாவத்திலிருந்து இரட்சிக்கிறவர்"என்று அர்த்தம்.அதையே தான் வேதமும் மத்தேயு 1:21-ல் சொல்கிறது "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."
இந்திய நாட்டு தேவ பக்தர்கள் பலர் தங்கள் பாக்களில்"குரு"என கூறியிருக்கிறார்கள். "கு"என்பதற்கு இருள், அஞ்ஞானம், பாவம் என அர்த்தம். "ரு"என்பதற்கு ஒழித்தல் என அர்த்தம். இயேசு என்ற கிரேக்க பெயரும், குரு என்ற இந்திய மொழி பெயரும் ஒரே பொருள் உடையனவே.ஆகையால் தான் இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.(மத்தேயு 23:10)எனக் கூறியிருக்கிறார்.
இயேசுபிரானுடைய மார்க்கத்தை வெள்ளைக்காரர்கள்தானே இந்தியாவுக்கு கொண்டுவந்தார்கள். வெள்ளைக்காரர்கள் மார்க்கம் நமக்கு வேண்டாமே என்கிறார்கள். கிறிஸ்தவம் வெள்ளைக்காரர்கள் மார்க்கம் அல்ல.நம் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளது.
இயேசு நமது ஆசியாக் கண்டத்தில் இந்தியாவிற்கு வட மேற்கே அன்றைய பலஸ்தீனாவில் பிறந்து வளர்ந்தார்.
நம் இந்திய நாட்டு தபோதனர்கள், ரிஷிகள் ,பக்தர்கள் முதலியோர் தங்கள் தவத்தில் அறிந்த இலட்சணங்களை உடையவராய் அவதரித்தார் இயேசு.
சில உதாரணங்கள்
குருவுருவங் கொண்டிக் குவலயத்துள் தோன்றிப்
பருவரலை நீக்கும் பரன்.
-ஒழிவிலொடுக்கம்
(பொருள்: கடவுள் குரு உருவம் எடுத்து, இவ்வுலகில் வந்து பாவ துன்பத்தை நீக்குவார்)
வேதமும் அப்படியே சொல்கிறது.யோவான் 1:29-ல் யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
பந்தமெல்லாம் தீரப் பரஞ்சோதி நீ குருவாய்
வந்த வடிவை மறவேன் பராபரமே
-தாயுமானவர் பராபரக்கண்ணி
(பொருள்: மனிதரைப் பாவ கட்டிலிருந்து விடுதலையாக்க, ஜோதிக் கடவுளாகிய நீ குருவாக வந்த வடிவத்தை மறவேன்)
வேதமும் அப்படியே தான் சொல்கிறது.யோவான் 8:12-ல் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
- இரட்சிப்பின் வழி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum