நாத்திகனுக்கு...
Fri Jan 18, 2013 6:55 pm
ஒரு
வயதான தாயார் தன் கண்களை இடுக்கிக் கொண்டு, வேத வசனத்தை படித்துக்
கொண்டிருக்கிறதை தேவ பக்தியற்ற நாத்திகன் ஒருவன் கண்டான். ஏன் இந்த
புத்தகத்தை இவ்வளவு சிரமப்பட்டு படிக்க வேண்டும்? என்றான்.
அந்த தாயோ,
எனக்கு நித்திய ஜீவனைத் தருகின்ற தேவனுடைய வார்த்தைகள் இவை என்றார்கள்.
அது எப்படி இது தேவனுடைய வார்த்தையாகும் என்று நக்கலாக கேட்டான் இவன்.
அவர்களும் விடவில்லை. அதோ அது என்ன? என்று சூரியனை நோக்கி
கைக்காட்டினார்கள். அவனும் அது சூரியன் என்றான். அது சூரியன் தான் என்று
எப்படி நீ சொல்கிறாய் என்றார்கள் இவர்கள். அவனோ அதிலிருந்து வெளிச்சமும்
வெப்பமும் கிடைக்கிறதே என்றான். அந்த தாயாரோ, தம்பி நீ சொல்வது போல என்
ஆத்துமாவிற்கு இந்த வேத வசனம் வெளிச்சமும், தருகின்றது. பாவத்தினால்
குளிர்ந்து போய் கிடந்த என்னை அனல் மூட்டி உயிர்ப்பிக்கின்றது. எனவே இது
தேவனுடைய வார்த்தைகள் தான் என்று முழங்கினார்கள்.
ஆண்டவரே யாரிடத்தில் போவோம். நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே என்று பேதுரு கூறினானே. (யோவான்.6:68.).
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum