இயேசுகிறிஸ்துவின் பிறப்பு
Fri Aug 02, 2013 10:55 pm
*** இயேசுகிறிஸ்துவின் பிறப்பு ***
தற்செயலாய் நடைபெற்ற ஒரு சம்பவம் அல்ல. அவரது பிறப்பு பழைய ஏற்பாட்டிலே முன்னறிவிக்கப்பட்ட ஒன்றாகும். பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாயிலாக பங்குபங்காகவும் வகைவகையாகவும் தேவன் திருவுளம் பற்றினார் என்று எபி.1:1இல் வாசிக்கிறோம். தீர்க்கதரிசனங்களாகவும் வாக்குத்தத்தமாகவும் உரைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு காலம் நிறைவேறினபோது ஒவ்வொன்றாக நிறைவேறியது.
இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் பலவிதமான சொற்களை வேதாகமத்திலே நாம் பார்க்கிறோம். “கொடுக்கப்பட்டார்”(ஏசா.9:6) என்றும், “வந்தார்”(1தீமோ.1:15) என்றும். “பிதா அவரை அனுப்பினார்”(கலா.4:5) என்றும், “பிரசன்னமானார்”(2தீமோ.1:10) என்றும், “வெளிப்பட்டார்”(எபி.9:26) என்றும், “தோன்றினார்”(எபி.7:14, லூக். 7:16) என்றும், “உதித்தார்”(எண்.24:17, லூக். 2:11) என்றும் இவ்விதமாக பலவிதங்களில் அவரது பிறப்பு விளக்கப்பட்டிருப்பதை வேதாகமத்திலேப் பார்க்கிறோம். இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் இச்சொற்களெல்லாம் அவர் முன்பு பரலோகத்தில் வாசமாய் இருந்ததையும், பிதாவோடு இருந்ததையும் குறிக்கிறது. அவர் முன்பிருந்த தனது மேலான நிலையை விட்டு, கீழான மனிதனுடைய நிலைக்கு இறங்கி வந்தார் என்பதை அவரது பிறப்பு நமக்கு எடுத்துரைக்கிறது. அவரது பிறப்பைக்குறித்து விளக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அர்த்தத்தையும் சத்தியத்தையும் உடையதாக காணப்படுகிறது.
ஏரோது சாஸ்திரிகளின் வாயிலாக இயேசுவின் பிறப்பை கேள்விப்பட்டபோது, வேத பாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள் வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்துபார்த்து, யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் (மத்.2:4,5) என்று அவனுக்கு விளக்கினார்கள். இவ்வாறு இயேசுகிறிஸ்துவின் பிறப்பு பழைய ஏற்பாட்டில் மறைபொருளாகவும் இரகசியமாகவும் நிழலோட்டமாகவும் எழுதப்பட்டுள்ளது. ..
நன்றி: பால் பிரபாகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum