கர்த்தரின் சத்தம்
Thu Aug 01, 2013 11:47 pm
****** கடவுளின் குரல் ******
ஒரு படகில் பல பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அதில் ஒரு ஞானியும் இருந்தார்.அவரைப் பார்த்து மற்ற பயணிகள் கேலியும்,கிண்டலும் செய்து வந்தனர்.அவர் தியானத்தில் அமர்ந்தார்.இந்நேரம் அவர் எதுவும் செய்ய மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட மற்றவர்கள்,அவரை இஷ்டம் போல அடித்தனர்.அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.
அவர் கண்களிலிருந்து அன்பு, கண்ணீராய் வந்து கொண்டிருந்தது.அப்போது ஆகாயத்தில் ஒரு ஒலித்தது. ''அன்புக்குரியவனே, நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்! ''அப்போதும் அந்த ஞானியின் தியானம் கலையவில்லை. அடித்தவர்கள் இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தார்கள். விளையாட்டு வினையாயிற்றே என்று நினைத்து அவர்கள்ஞானியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.
ஞானியின் தியானம் முடிந்தது.சுற்றிலும் அச்ச உணர்வுடன் மற்றவர்கள் நிற்பதைப் பார்த்தார். ''கவலைப்படாதீர்கள்,'' என்று அவர்களிடம் கூறிவிட்டு ஆகாயத்தை நோக்கி வணங்கி, ''என் அன்பான கடவுளே, நீ ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறாய்? நீ விளையாட வேண்டும் என்று விரும்பினால் இந்த மக்களின் புத்தியை மாற்று.அதை விட்டுவிட்டு படகைக் கவிழச்செய்வதால்
என்ன பயன்? ''என்று கேட்டார். ஆகாயத்திலிருந்து பதில் வந்தது, ''நான் மகிழ்ச்சி அடைந்தேன்.நீ சரியான உண்மையை அறிந்து கொண்டாய்.முன்னால் ஒலித்தது என் குரல் அல்ல. எவன் ஒருவன் சாத்தானின் குரலை அறிந்து கொள்ள முடியுமோ.அவனால்தான் என் குரலையும் உணர முடியும்.''
எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். யோவான் 10:27
நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum