கழுதை நற்செய்தி
Thu Aug 01, 2013 11:41 pm
****** கழுதை நற்செய்தி ******
ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர், "ஞானத்தில் சிறந்த ஞானம் எது?" என்று கேட்டார்.
"இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதுதான் மெய் ஞானம்" என்றார் ஞானி.
வந்தவர், விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனின் கழுதையை காட்டி இதை காலையிலும் மாலையிலும் பார்த்தால் உமக்கு புரியும் என்றார்.
ஞானி கூறிய படியே அவர் காலையும், மாலையும் கழுதையை கவனித்தார்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடம் கேட்டார். ஞானி விளக்கினார், இந்தக்கழுதைக்கு, "காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை" இயேசு சுவாமி கழுதையின் மேல் ஏறி சென்ற காரணத்தை நான் சிந்தித்து கொண்டிருக்கும் போது நான் இத்தகைய ஞானம் பெற்றேன் என்றார்.
துன்பத்திலும், இன்பத்திலும் துவளாமல் இருப்பதே சிறந்த ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த நபர்.
இயேசு நாதர் சிலுவையில் அடிக்கப்படப்போக இருந்த சில நாட்களுக்கு முன்பு, தான் கொடியவேதனைகளை அனுபவிக்கப்போகிறோம் என்ற பதட்டம் இல்லாமலும் பாடுகளுக்கு பின்பு மகிமையடைய போகிறோம் என்ற கர்வம் இல்லாமலும், சாந்தமாய் ஒரு கழுதையை கொண்டு வர சொல்லி அதின் மேல் ஏறி சென்று நமக்கு ஒரு பாடம் கற்றுகொடுதிருக்கிறாரே.
“தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.” பிலிப்பியர் 4:12

நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum