மனித வாழ்வு மாயை ...
Thu Aug 01, 2013 11:28 pm
****** மனித வாழ்வு மாயையே ******
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !
ஒருமுறை நாகர்கோவில் அருகே உள்ள ஒரு ஆற்றின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். எனது கண்கள் ஆற்று நீரை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆ! எவ்வளவு அழகான மீன்கள். அவைகள் அங்கும் இங்கும் நீந்தும் அழகே தனி அழகு. பலவித மீன்களை பார்த்து அதிசயப்பட்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். சில நாட்களில் காலநிலை மாறத் தொடங்கியது. ஆற்றில் தண்ணீர் குறையத் தொடங்கியது.மீனவர்கள் வலை வீசத் துவங்கினர். பறவைகளும் வட்டமிடத் துவங்கியது.பெரிய மீன்களைப் பிடிக்க மீனவர்களும், சிறிய மீன்களைப் பிடிக்கப் பறவைகளும் போட்டியிட்டனர். நாட்கள் நகரத் தொடங்கியது. என்ன ஆச்சரியம்! அங்கு தண்ணீர் வற்றிபோய் மணல் மேடுகள் தெரியத் தொடங்கியது. நான் பார்த்து ரசித்த மனதுக்கு இனிய மீன்கள் ஒன்றும் அங்கு காணவில்லை. எத்தனை ஏமாற்றம்.அன்று கம்பீரமாக இருந்த அந்த ஆறு, பலவித மீன்களால் நிறையப் பெற்றிருந்த அதே ஆறு இன்று பரிதாபமான நிலையில் இருந்தது.
ஆம் நண்பர்களே, மனித வாழ்வும் அப்படியே. நேற்றிருந்தவன் இன்றைக்கு இல்லை, இன்றைக்கு இருப்பவன் நாளை இல்லை. அதனால் தேவனை தேடு. அப்போது பிழைப்பாய். மற்றபடி நீ பிழைத்தால் மணல் மேடாவாய். உன்னை எச்சரிக்கிறேன்.
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்??????
காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய்.
பாவியாய் பிறந்த மானிடன் பாவியாகவே மரிக்கின்றான், என்ன கொடுமை!
மண்ணில் பிறந்த மானிடன் மண்ணுக்கே திரும்புகிறான்.
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். பிரசங்கி 1:2.
நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum