தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தங்கம் தங்கம் ... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தங்கம் தங்கம் ... Empty தங்கம் தங்கம் ...

Thu Aug 01, 2013 3:15 pm
தங்கமே தங்கம்.. வியத்தகு உலோகம்.. வியத்தகு உலகம்.. - "விழிப்புணர்வு"

துரு பிடிக்காது மற்றும் கருக்காது. வெளிர் மஞ்சள் முதல் ஆரஞ்சு மஞ்சள் வரை வர்ணம் கொண்ட உலோகம். இரசாயனத்தில் அரம் Au எனும் எழுத்துக்களால் குறிக்கப் படும் ட்ரைவேலண்ட் வஸ்து..... வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும்.. இதன் அணு எண் 79. இதன் அடர்த்தி 19.3 அதாவது நீரைப்போல் சுமார் 19 மடங்கு எடையுள்ளது நைட்ரிக் அசிட் மற்றும் சல்ப்யூரிக் அசிட் கலவை (ராஜத் திராவகம்) யால் மட்டுமே 2pH இல் இதை முழுமையாக கரைக்க முடியும்.

மருத்துவ குணம் கொண்ட உலோகம். இதை பஸ்பமாக செய்து உண்டால் மேனி பளபளக்கும். இந்த உலோகம் பாக்டீரியாக்களை எதிர்த்து அழிக்கும் சக்தி கொண்டாது .

வேன் டி கிராஃப் முதலில் இந்த உலோகத் தகட்டைப் பயன் படுத்தி மின் பொறிகளை (electrical charges ) உருவாக்கிக் காட்டினார்.

நல்ல உஷ்ணக் கடத்தி. நல்ல மின் கடத்தி. மிகக் குறைவான மின் தடை குணம் கொண்டது. உலகில் மிகக் குறைந்த நாடுகளில் மட்டுமே கணிமமாகக் கிடைக்கப் பெறுகிறது இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள கோலார் (முடிந்து விட்டது), ஹட்டி, உட்டி மற்றும் ஜார்கண்டில் ஹீராபுத்தினி ஆகிய இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவின் தங்க உற்பத்தி அதன் மொத்தத் தேவையில் 0.4% மட்டுமே. மீதி முழுவதும் இறக்குமதி செய்யப் படுகிறது.

இந்த உலோகம் தங்கம் எனப் படுகிறது.

தங்கம் எனும் உலோகம் முன்னாட்களில் ராஜாக்களால் மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டு வந்தது அவை அலங்காரப் பொருட்களாகவும், நகைகளாகவும், வர்த்தகப் பரிமாற்றக் காசுகளாகவும், உபயோகப் பட்டு வந்தன.

தங்கத்தின் தரம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 24 காரட்டில் செய்யும் தங்க நகைகள் (சொக்கத் தங்கம்) எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர் கஜனி முகம்மது என்ற முகலாய மன்னன் இந்தியாவிற்கு 17 முறை படையெடுத்து வந்து இங்குள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றான் என வரலாறு கூறுகிறது.

இனி தங்கம் பற்றிய மேலும் சில விவரங்கள்....

1. தங்கம் நகையாகவோ நாணயமாகவோ வாங்குவதால் எந்தப் பலனும் இல்லை வட்டி கிடைக்காது. உங்களிடம் இத்தனை சவரன் நகை உள்ளது என்பது மட்டுமே உங்கள் பாரம்பரியக் குறியீடாக இருக்கும்.

2. தங்க ஆபரணங்கள் வாங்குவதோ, செய்வதோ போல ஒரு வீணான செலவு வேறு எதுவும் இல்லை. நீங்கள் வாங்கும் தங்கத்தை உங்களுக்கு20% முதல் 30% வரை கூடுதலாக விலை ஏற்றி தலையில் கட்டுவதுதான் தங்க நகைக் காரர்களின் வியாபார உத்தி.

3. தங்க நகைகளுக்கு சேதாரம் கணக்கிடக் கூடாது. இந்தியாவில் குஜராத் மாநிலம் தவிர ஏனைய இடங்களில் சேதாரம் எனும் பெயரில் 10% முதல் 20% வரை கொள்ளை அடிக்கிறார்கள்.

4. எந்த ஒரு வெளிநாட்டிலும் சேதாரம் எனும் வார்த்தையே கிடையாது. மக்களின் அபரிமிதமான தங்க ஆசையை முதலாக்கி கோடிகளை ஈட்டுகிறார்கள் தங்க நகை வியாபாரிகள். 

5. நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாக நினைத்து இப்போது தங்க பிஸ்கட்டாகவோ, தங்க நாணயமாகவோ, நகையாகவோ வாங்கினால், உங்களால் அதை விற்று பணம் ஆக்க முடியாது. காரணம், இங்குள்ள நகை வியாபாரிகள் உங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் மட்டுமே செய்து கொடுப்பார்கள். விலைக்கு வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு லாபமான தொழில் அல்ல.

காரணம், அவர்கள் ஒரு கிராம் தங்கத்தை (தற்போதைய விலையின் படி) ரூ 1700 க்கு வாங்குகிறார்கள் . தங்க வணிகர்கள் சங்கம் தங்கத்தின் அந்நாளைய விற்பனை விலையை நிர்ணயிக்கிறது..... கவனிக்கவும்....அரசாங்கம் விலையை நிர்ணயிப்பதில்லை..... தங்க வணிகர்கள் அதை நிர்ணயிக்கிறார்கள். ரூ 1700க்கு கொள்முதல் செய்யப் படும் தங்கம் கடைக்கு வரும்போது அவர்கள் விளம்பரப் பலகையில் ரூ 2200 ஆகிறது. இந்த விலையாலும் பேராசை அடங்காத வியாபாரிகளின் அடுத்த கொள்ளை சேதாரம், மற்றும் செய்கூலி.

இது போக இன்னும் வெறி அடங்காத கொள்ளையர்களின் அடுத்த கொள்ளை, தங்கத்தின் மாற்றை குறைத்து விற்பது. இது மிகப் பெரிய மோசடி, யாருக்கும் தெரியாமல் அரங்கேறுகிறது.

வெண்டைக்காய் வாங்கினாலும் முனையை உடைத்துப் பார்த்து வாங்கும் இல்லத்தரசிகளே நீங்கள் வாங்கும் தங்கம் 22 கேரட் என்று எப்படி உறுதி செய்வீர்கள்? ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா? இங்கேதான் நகை வியாபாரிகளின் சாமர்த்தியம் அரங்கேறுகிறது.

தாங்கள் விற் கும் நகைக்கு 22 கேரட் என்று காரண்டி மட்டுமே கொடுப்பார்கள். பில் இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் அவர்களிடம் கேரட்டோமீட்டர் எனும் உபகரணத்தால் தங்கத்தின் மாற்றை அளந்து சொல்லும் கருவி இருந்தாலும் அதை உங்கள் கண்ணில் காட்ட மாட்டார்கள்.

ஒரு பத்து வருடம் கழித்து நீங்கள் நகையை அழித்து மாற்றும்போது அதை உரசிப் பார்த்து தங்கத்தின் மாற்றை 20 கேரட் அல்லது 21 கேரட் என்று சொல்லி சகாய விலைக்கு எடுத்துக் கொண்டு அவர்களின் தங்கத்தை விலை ஏற்றி தலையில் கட்டுவார்கள்.

காரணம் புரியாமல் நீங்கள் விழிக்கும்போது அவர்கள் சொல்லும் ஒரு கூற்று மிகவும் நகைச் சுவையாக இருக்கும் 'கழுத்திலேயே நகையை எப்பவும் போட்டிருந்தால் தேய்மானம் ஆகி மாற்று குறையும்' . இதையும் நாம் நம்புகிறோம்....

உண்மையில் அப்படி ஒன்றும் நடப்பதில்லை. இதெல்லாம் இவர்களின் ஏமாற்று வேலை. காரணம், மக்களுக்கு நகைகள் மீது உள்ள மோகம். இவர்களின் பித்தலாட்டங்கள் வெளியே தெரிவதில்லை 

6. நீங்கள் வாங்கும் போது உங்களிடம் தேன் ஒழுக, கல் நகைகளுக்கு கூடுதல் பணம் கிடையாது என்பார்கள். அதாவது கற்கள் இனாமாம். ஆனால் எடை போடும்போது கல்லின் எடைக்கு நாம் தங்கத்தின் விலையைக் கொடுக்கிறோம். நினைவில் கொள்க ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 2300..... ஒரு கிராம் கல்லின் விலை ரூ 200..... இங்கும் கொள்ளை அடிக்கிறார்கள் இனாம் எனும் பெயரில்.

7. நீங்கள் உங்கள் நகைகளை விற்கும்போது அதன் எடையில் கற்களை கழிப்பார்கள். பின்னர் 10% முதல் 20% தங்கத்தின் மாற்று குறைவு என்று எடையைக் கழிப்பார்கள். பின்னர் அன்றைய தங்கத்தின் விலையில் 90% மட்டுமே விலையாக இடுவார்கள். ஆக, உங்கள் தங்கம் அன்று நீங்கள் விற்பனை செய்யும்போது ரூ 2300 - ரூ 230 - ரூ 230 - ரூ 230 = ரூ 1610 ஒரு கிராமிற்கு என்று மதிப்பு போடுவார்கள் .

ஆனால் நீங்கள் பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்கம் வாங்கும்போது நீங்கள் கொடுக்கும் விலை ரூ 2300 + ரூ 460 (கற்களுக்கு பதில் தங்க விலை) + 10% சேதாரம் ரூ 230 + ரூ 100 செய்கூலி = ரூ 3090...... ஆக மொத்தம் உள்ள வித்தியாசம் ரூ 1480 ஒரு கிராமிற்கு......

இப்போது தெரிகிறதா, ஆலுக்கா மலையாளிகளும், ரத்தின சகோதரர் பலசரக்குக் கடைக்காரர்களும், ஆந்திர செட்டிகளும் தி நகரிலும் புரசை வாக்கத்திலும், மைலாப்பூரிலும் எப்படி தங்க நகை கடைகளையும் கிளைகளையும் திறந்து மக்களை திணறத் திணற கொள்ளை அடிக்கிறார்கள் என்று?

எனவே நகைகளை வாங்காதீர்கள். அதனால் எந்த உபயோகமும் இல்லை. உங்கள் பொருள் பாரம்பரியமாக உங்களிடம் மட்டுமே தங்கி, எந்தவித பொருளாதார உதவியும் செய்யப் போவதில்லை . விற்க நினைத்தாலும் விற்க முடியாத வஸ்து, வங்கிப் பெட்டகத்தில் உறங்கப் போகும் வஸ்து, திருடர்களுக்கு விருப்பமான வஸ்து....... உங்களுக்குத் தேவைதானா?

அதைவிட, மாதாந்திர வட்டி கிடைக்கும் திட்டங்களிலோ, வீட்டு மனைகளிலோ உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். வீடும் நாடும் வளம் பெரும்....... அந்நிய செலாவணி மிச்சமாகி, பெட்ரோல் டீசல் ஒரு லிட்டர் ரூ 20க்குக் கிடைக்கும்........

- டிமிடித் பெட்கோவ்ஸ்கி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum