ஒரு பொருளுக்கு எவ்வாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
Thu Aug 01, 2013 3:14 pm
அனைவருக்கும் வணக்கம். நாம் ஏதாவது ஒரு பொருள் வாங்க கடைக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு ஒரு பேனா வாங்க கடைக்கு செல்கிறோம். கடைக்காரரிடம் பேனா கேட்கிறோம். அவர் அதன் விலை பத்து ரூபாய் என்கிறார்., என்றால், நாம் கடைக்காரருக்கு பத்து ரூபாய் கொடுத்தால்தான் அவர் அந்த பேனாவை நமக்கு தருவார் இல்லையா? ஆக., அந்த பேனாவின் மதிப்பு பத்து ரூபாய் என்றாகிறது அல்லவா.? பேனாவிற்கு மட்டுமல்ல கடையிலுள்ள அனைத்து பொருட்களுக்குமே ஒரு விலை அல்லது மதிப்பு இருக்கும் அல்லவா? சரி இந்த விலை அல்லது மதிப்பு., ஒரு பொருளுக்கு எதன் அடிப்படையில் தீர்மானம் செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா நண்பர்களே? அதிகம் யோசிக்க வேண்டாம் நண்பர்களே., இன்றைய பதிவினூடாக நாம் அதைப்பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.!
ஒரு பொருளுக்கு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது அல்லது எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு ‘சமூகம் (Society)’ என்றால் என்ன? ‘பொருளாதாரம் (Economics)’ என்றால் என்ன? என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாததாகிறது. சமூகம் மற்றும் பொருளாதாரம் என்றால் என்ன., என்பதுபற்றி உரிய மற்றும் சரியான விளக்கம் தரமுயற்சித்தால் ‘பக்கம் பக்கமாக’ எழுதவேண்டியதிருக்கும், இந்த பதிவிற்கு அது தேவையில்லாதது., ஆகையால் இரத்தின சுருக்கமாக அதனை பற்றி பார்ப்போம் வாருங்கள்.!
“உலகில் ஒவ்வொரு நாளும், நாம் உயிரோடு வாழ்வதற்கு ‘நம் கற்பனைக்கும் எட்டாதா அளவிற்கான’ மனிதர்களின் உழைப்பு தேவைப்படுகிறது” என்பதை உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே? அதெப்படி நான் எனது சொந்த காலில்தானே நிற்கிறேன்.., என் சொந்த உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தில்தானே சாப்பிடுகிறேன் என்கிறீர்களா? உங்களை பொறுத்தவரை அது உண்மையாக இருக்கலாம்., ஆனால் உண்மை அதுவல்ல.! ஏனெனில்., நீங்கள் உழைத்து., உங்களுக்குரிய பொருளை ஈட்டுவதற்கு., ஒரு நாளில் எத்தனையோ விதமான பொருட்களையும் இன்னபிறசாதனங்களையும் பயன்படுத்துகிறீர்கள்தானே? அவை அனைத்தும் உங்கள் உழைப்பில் உருவானவையா நண்பர்களே? ஆக நமக்கு தேவையான அத்தனை பொருட்களையும் நாமே தயாரித்துக்கொள்ள இயலாதுதானே நண்பர்களே? இப்போது சிந்தித்து பாருங்கள்., நாம் வாழ எத்தனை பேரின் உழைப்பு தேவைப்படுகிறது என்பதை.!சிந்தித்துபார்க்கவே இயலாது என்பது புலனாகிறது அல்லவா? இதுபோலவே பிறர்வாழ நாமும் தினந்தோறும் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். சங்கிலி தொடராய் நீளும் இந்த மிக நீண்ட பட்டியலை உள்ளடக்கியதே ‘சமூகம்’ என்றழைக்கப்படுகிறது. ஒருவர் தயாரிக்கும் பொருள் இன்னொருவருக்கு தேவைப்படவில்லையெனில் உலகில் நாம் அனைவரும் ‘தனித்தே’ இயங்கிகொண்டிருப்போம்.
அந்தவகையில் நாம் அனைவரையும் ஒன்றிணைக்கும் அந்த பொருள் (goods) அல்லது பண்டத்தின் (Commodity).., ‘உற்பத்தி (Production), விநியோகம் (distribution), நுகர்வு (consumption) ஆகிய மூன்று காரணிகளை பற்றி அலசும்.., சமூகம் சார்ந்த அறிவியலையே பொருளாதாரம் (Economics) என்கிறோம்.
இங்கே கூர்ந்து கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவென்றால் பொருள் (goods) என்பதற்கும் பண்டம் (Commodity) என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பொருள் எனப்படுவது என்னவெனில்; உற்பத்தி செய்யப்படும் பொருள் இன்றியமையாததாக இருந்தாலும் கூட அவை விற்பனைக்காக சந்தைக்கு வரவில்லை எனில் அது ‘பொருள் (goods)’ என்றே அழைக்கப்படும், விற்பனைக்கு என்று சந்தைக்கு வந்தால் மட்டுமே அது பண்டம் (Commodity) என்றாகிறது.
உதாரணத்திற்கு.., நாம்., நம்முடைய வீட்டில் மாவரைத்து இட்லி சுட்டு சாப்பிடுகிறோம் என்று வைத்துக்கொண்டால், இங்கே ‘இட்லி’ என்பது ஒரு பொருள்தான். ஆனால் அதுவே உணவகங்களில் விற்பனைக்கு என்று வந்துவிட்டால் அது பண்டம் (Commodity) என்றாகிவிடும்.!
ஒற்றிவரியில் கூறுவதென்றால் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்தும் பண்டம் எனப்படும்.
அப்படி தயாரிக்கப்படும் ஒவ்வொரு பண்டத்திற்கும் விலை நிர்ணயம் அல்லது மதிப்பீடு செய்ய மூன்று வகையான வழிகளை வகுத்துள்ளார்கள் பொருளாத மாமேதைகள்., அவையாவன.!
1.) பயன் மதிப்பு (Use Value)
2.) பரிவர்த்தனை மதிப்பு (Exchange Value)
3.) மதிப்பு (Value)
இதில் பயன் மதிப்பு (Use Value) என்பது, ஒரு பண்டம் எதற்காக பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பயன்பாட்டின் அடிப்படையில் அந்த பண்டம் மதிப்பிடப்படுவதையே ‘பயன் மதிப்பு’ என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘தண்ணீர்’ குடிக்க பயன்படுகிறது, ‘புத்தகம்’ படிக்க பயன்படுகிறது, ‘பேனா’ எழுத பயன்படுகிறது., இவ்வாறு ஒரு பண்டம் அதன் பயன்பாட்டைப் பொருத்து மதிப்பிடப்படுவது பயன் மதிப்பு எனப்படும். நான் முன்னரே சொன்னது போல் பயன்பாடு இல்லாத எந்த ஒரு பொருளும் பண்டமாக உருப்பெறுவதில்லை.
ஒரு பண்டத்திற்கு சந்தையில் இருக்கும் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) விதியைப் பொருத்து மதிப்பிடப்படுவதையே பரிவர்த்தனை மதிப்பு (Exchange Value) எனப்படுகிறது. ஒரு பண்டத்திற்கு மக்களிடையே தேவை (demand) அதிகமாக இருக்கும்போது சந்தையில் அந்த பண்டத்தின் மதிப்பு அல்லது விலை அதிகமாக இருக்கும், அதுவே அந்த பண்டம் தேவைக்கு அதிகமாக சந்தைக்கு வந்துவிட்டால் அதாவது அளிப்பு (supply) அதிகமாக இருந்தால் அந்த பண்டத்தின் மதிப்பு அல்லது விலை சரிந்துவிடும். (ஆனால் எந்த ஒரு பண்டமும் அதன் உண்மையான மதிப்புக்குகீழ் விற்கப்படுவதில்லை என்பதே உண்மை – இதனை அடுத்தடுத்து நாம் பார்க்கலாம்)
'பயன்மதிப்பு' மற்றும் 'பரிவர்த்தனை மதிப்பு' இவை இரண்டும் இல்லாமல் ஒவ்வொரு பண்டத்திற்கும் தனியே ‘மதிப்பு (Value)’ என்று ஒன்று உண்டு. உதாரணத்திற்கு., இருவேறு மாறுபட்ட மதிப்பு கொண்ட தங்கம் (Gold) மற்றும் செங்கல் (Red Bricks) ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம்; இதில் தங்கத்தின் மதிப்பு ஏன் அதிகமாக இருக்கிறது, செங்கல்லின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது என்று யோசித்து பார்த்ததுண்டா நண்பர்களே?
நான் முன்பு சொன்னது போல் பயன்பாட்டை பொருத்து பண்டத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்றால் உலகில் தங்கத்தை விட., தண்ணீர்தான் அதிக பயன்பாடு கொண்டது என்றால் தண்ணீரின் விலைதான் தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லையே, தங்கத்தின் விலைதானே அதிகமாக இருக்கிறது?
உண்மையில், ஒரு பண்டத்தின் மதிப்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால்., அந்த பண்டத்தை உற்பத்தி செய்வதற்காக அதன்மீது செலவிடப்பட்ட மனித உழைப்பின் அளவை கொண்டுதான் நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி ஒரு செங்கலை உற்பத்தி செய்ய அதன்மீது செலவிடப்பட்ட மனித உழைப்பை குறைவு.! தங்கத்தை உற்பத்தி செய்ய அதன்மீது செலவிடப்பட்ட மனித உழைப்பின் அளவு அதிகம்., இதன்காரனமாகே தங்கத்தின் மதிப்பு என்பது செங்கல்லின் மதிப்பை விட அதிகமாக உள்ளது. ஒருவேளை., நாளையே யாராவது, புதிய ரசவாதத்தால் செங்கலை தங்கமாக மாற்றுகிறார் என்றால், தங்கத்தின் மதிப்பு செங்கல்லின் மதிப்புக்கு இறங்கிவிடும். எனவே ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவைப் அடிப்படையாக கொண்டே மதிப்பிடப்படுகிறது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
சரி., இப்போது ஒரு பண்டத்திற்கு அதன் விலையை நிர்ணயம் செய்ய, அந்த பண்டத்தை தயாரிக்க/உருவாக்க அதன்மீது செலவிடப்பட்ட மனித உழைப்பை அளவிடவேண்டும் அல்லவா? அதனை எவ்வாறு கண்டறிவது?
உழைப்பின் அளவு என்பது அதன் கால அளவை பொருத்தது. அதாவது, அந்த பண்டத்தை தயாரிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை பொருத்தது.
சரி.., இப்போது அந்த பண்டத்தை தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரம் / கால அளவும் நமக்கு தெரிந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், இதை மட்டுமே வைத்து அந்த பண்டத்துக்கு எப்படி விலை நிர்ணயம் செய்வது? உண்மையில் ஒரு பண்டத்தின் மதிப்பு அல்லது விலை என்பது தனியானதல்ல, அதாவது அந்த பண்டத்திற்கு மட்டுமே உரித்தானது இல்லை, அது ஒரு ஒப்பீட்டு வடிவம் ஆகும்.
உதாரணத்திற்கு., ஒரு புத்தகம் செய்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகிறது என்றால், இதை மட்டும் வைத்துக் கொண்டு அந்த புத்தகத்திற்கு ‘இவ்வளவுதான் விலை’ என்று மதிப்பிட்டுவிட முடியாது. ஒரு பண்டத்தின் மதிப்பை கண்டறிய அதற்க்கு முற்றிலும் மாறான இன்னொரு பண்டத்தின் துணையும் அதற்க்கு தேவைப்படும்.
உதாரணத்திற்கு.,
ஒரு பேனா செய்வதற்கு ஒரு மணிநேரம் ஆகிறது. ஒரு புத்தகம் செய்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால் இதில்.., ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது இரண்டு பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்று கூறலாம் அல்லவா? இவ்வாறு மதிப்பிடுவதைத்தான் ‘ஒப்பீட்டு வடிவம்’ என்று அழைக்கிறார்கள். உலகில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பையும் இப்படித்தான் நாம் அளவிட முடியும். இப்படித்தான் அளவிடப்படுகிறது.
இதில் ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது இரண்டு பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மணிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் மதிப்பில் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை தேவைக்காக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரிமாறிகொள்ளும்போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இவற்றை தவிர்ப்பதற்கு எல்லாவற்றிற்கும் பொதுவான மதிப்பு கொண்ட ஒரு பண்டம் தேவைப்பட்டது. அந்த பண்டமாக நம் முன்னோர்களால் உருவகப்படுத்தப்பட்டதுதான் தங்கம் (Gold).!
உதாரணத்திற்கு.,
ஒரு புத்தகம்
இரண்டு பேனா
நான்கு பெண்சில்
ஒரு தட்டு
இரண்டு வளையல்
இருநூறு மில்லி கிராம் தங்கம்
- இது எல்லாவற்றையும் உருவாக்க இரண்டு மணிநேர மனித உழைப்பு தேவைப்படுகிறது என்றால், இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சமம் அல்லவா?.
இன்னும் விளக்கமாக சொல்வதென்றால்.., ஒரு புத்தகம் என்பது 200 மில்லி கிராம் தங்கத்தின் மதிப்பிற்கு சமமானது.., அதுபோலவே..,
2பேனா = 200 மில்லி கிராம் தங்கம்
4 பெண்சில் = 200 மில்லி கிராம் தங்கம்
1 தட்டு = 200 மில்லி கிராம் தங்கம்
2 வளையல் = 200 மில்லி கிராம் தங்கம்
இங்கு தங்கம் என்பது எல்லா பண்டத்திர்க்குமான மதிப்பை/விலையை நிர்ணயம் செய்யும் பொது பண்டம் அல்லது பொது சமானியாக கருதப்பட்டது. ஆரம்பத்தில் பண்டமாக மட்டுமே இருந்த தங்கம், பொருட்களை பரிமாற்றம் செய்யும் பொது ஏற்பட்ட இடையூறுகளை களைய பொது சமானியாக உருவகப்படுத்தப்பட்டது. திருடர்கள் பயம் மற்றும் இன்னபிற காரணங்களால், காகிதம் கண்டறியப்பட்ட பின்பு, தங்கத்தின் பதிப்பிற்கு சமமான அச்சடிக்கப்பட்ட காதிதங்கள் அதாவது பணத்தை கொடுத்து பொருட்களை பரிமாற்றிக்கொள்ளும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை. காகிதப்பணம் என்பது தங்கத்தின் மதிப்புக்கு இணையாக அரசால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் வெத்து காகிதம்தான், உண்மையில் உலகம் முழுவதும் தங்கம்தான் பணம். இது பண்டைய காலத்திலிருந்தே பின்பற்றபட்டு வரும் ஒரு வழக்கம்தானே ஒழிய, தங்கம்தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதையெதையோ வைத்துப் பார்த்து எதுவுமே சரியாகவராமல் இறுதியாக தங்கத்தை பொது சமானியாக அல்லது பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
நன்றி: வேர்ல்டு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum