தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அறிந்துகொள்வோம் அமெரிக்காவின் சிறப்புகள்:- Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அறிந்துகொள்வோம் அமெரிக்காவின் சிறப்புகள்:- Empty அறிந்துகொள்வோம் அமெரிக்காவின் சிறப்புகள்:-

Tue Jul 30, 2013 8:07 pm
வாஷிங்டனை தலைநகராக கொண்டு செயல்படும் அமெரிக்கா, பொதுவாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America or USA or USA) என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்க கண்டத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இந்நாடு, கிட்டத்தட்ட 9.83 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பரபப்பளவை பொருத்தமட்டில் உலகின் நான்காவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட இத்தேசம், ஐம்பது மாநிலங்களையும் ஒரு ஐக்கிய மாவட்டத்தையும் (Federal District) தன்னகத்தே கொண்டது. அமெரிக்காவின் கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைக்கு விமானத்தில் பயணப்பட்டால் தோராயமாக ஐந்து மணி பிடிக்கும் இதனை கொண்டே அமெரிக்கா எவ்வளவு பெரிய நிலப்பரப்பை கொண்ட தேசம் என்பது நாம் அறியலாம், அதுமட்டுமின்றி அதன் வடக்கு எல்லையிலிருந்து தெற்கு எல்லைக்கு செல்ல கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகும். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களிலிருந்து மேற்கு பகுதி நகரங்களுக்கு விமானத்தில் சென்றால் கடிகாரத்தில் மூன்று மணி நேரத்தை கூட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமெரிக்க நாடு கிழக்கு மேற்காக பரந்து விரிந்துள்ளது. நம் நாட்டிலிருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோவிற்கு செல்பவர்கள் சிங்கப்பூர் வழியாக சென்றால் பயண தூரம் குறைவு.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பத்து பெரிய நகரங்களில் ஒன்று சான்பிரான்சிஸ்கோ. இது ஒரு தீவு நகரம். இந்த நகரின் வீதிகளில் வளம் வரும் கேபிள் கார்கள் இந்நகரின் போக்குவரத்தை எளிமையாக்குகின்றன. உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத இந்த கேபிள் கார்கள் 1873-ம் ஆண்டு முதல் இங்கு இயங்குகின்றன. இந்த கார்கள் தனிப்பட்ட சக்திகள் மூலம் இயங்கவில்லை, மாறாக மையப்படுத்தப்பட்ட ஒரு இடத்திலிருந்து இயக்கப்படுகிறது. ஒவ்வொரு கேபிள் கார்களிலும் இரெண்டு ஊழியர்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்திவிட்டு கேபிள் கார்களில் நகரை சுற்றி வரலாம். ஒரு முறை செலுத்தும் கட்டணம் அந்த நாள் முழுவதிற்கும் போதுமானது.

அமெரிக்காவில் உள்ள நகரங்களில் நியூயார்க் நகரம் மட்டுமே 24 மணிநேரமும் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கும் நகரம், நம்ம மதுரையை போல. கடல் வழி, நில வழி, ஆகாய வழி என்று மூன்று வழிகள் மூலமாகவும் மக்கள் வெள்ளம 24 மணி நேரமும் நுழைந்து கொண்டிருக்கிறது. சாலையில் பல மை தூரத்திற்கு நீண்டு செல்லும் மேம்பாலங்கள் ஆற்றின் உள்ளே போடப்பட்டு இருக்கும் சுரங்கப் பாதைகள், தரைக்கு கீழே செல்லும் ரயில் பாதைகள் நகரை சுற்றி ஓடும ஹட்சன் என்னும் நதியில் இயங்கும் பெரி எனப்படும் சிறு கப்பல்கள் இப்படி நகர முழுவதும் போக்குவரத்து வசதிகள் வியக்கும் வகையில் அமைந்துள்ளதால் சாலைகளில் ‘ட்ராபிக் ஜாம்’ பிரச்சனைகள் எல்லாம் அங்கு அறவே கிடையாது.

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் உயர உயரமாய் கட்டிடங்களை கட்டுவதால் என்னவோ இயற்கையன்னையும் அவர்களுக்கு உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான நயாகராவை பரிசாக கொடுத்து இருக்கிறாள். நயாகரா என்ற சொல்லின் அர்த்தம் ‘நீரின் இடியோசை’ என்பதாம். பணி மலைகளில் உருகிப் பெருகும் நீர் ‘இரிக்’ என்ற ஏரியிலிருந்து ‘ஓண்டாரியோ’ என்ற ஏரிக்கு பாய்வதுதான் இந்த நயாகரா நீர் வீழ்ச்சி. நீர் விழும் பகுதி குதிரை லாட வடிவில் இருப்பதால் இந்நதியை ‘ஹார்ஸ் ஷீ பால்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள். தண்ணீர் விழும் உச்சபச்ச உயரம் 170 அடி, இது அமெரிக்க எல்கையில் 1075 அடி அகலமும், கனடா நாட்டின் எல்கையில் 2200 அடி அகலத்திலும் விரிந்து அருவியாய் கொட்டுகிறது.

கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு அழகான நகரம். சினிமா உலகத்தின் தலைநகரமாக விளங்கும் ஹாலிவுட் என்னும் கனவு நகரம் இங்குதான் அமைந்துள்ளது. இங்கு தான் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டூடியோ உள்ளது. 420-ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஸ்டூடியோவில் உலகத்தையே இன்னும் சொல்லப் போனால் இந்த அண்டத்தையே அடக்கியுள்ளார்கள் என்று சொன்னால் மிகையாகாது. பொது மக்கள் உள்ளே சென்று சுற்றி பார்க்கலாம், நுழைவு கட்டணம் 45-டாலர், நம் நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்.

ஸ்டூடியோவை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். யுனிவர்சல் ஸ்டூடியோவில் குப்பைகளை போட ஆங்காங்கே கூடைகள் வைத்திருக்கிறார்கள். யாரவது இரெண்டு பேர் ஓரிடத்தில் நின்று ஏதாவது தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களை நோக்கி குப்பை கூடை நகர்ந்து வந்து ‘என்னை உபயோகித்து கொள்ளுங்கள்’ என்று குரல் கொடுக்கும். அவர்கள் குப்பையை போட்டதும் குப்பை கூடைகள் நகர்ந்து மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பிவிடும். சுற்றுலா பயணிகள் இருக்கும் இடத்தை தூரத்திலிருந்து கண்காணிக்கும் துப்புரவு தொழிலாளிகள் ரிமோட் மூலம் அந்த குப்பைக் கூடைகளை இயக்குகிறார்கள்.

சான்பிரான்சிஸ்கோ நகரம், நம் குஜராத்தை போல் ஒரு பூகம்ப பூமி. 200-ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் அப்போது அந்நகரமே முற்றிலும் அழிந்து நாசமாகிவிட்டது. இரண்டாவது பூகம்பம் 1889-ல் ஏற்பட்டது. அதில் 1800-கட்டடங்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன. இதனால் இங்குள்ள மக்கள் பூகம்பத்திற்கு பயந்து கான்கிரிட் வீடுகளை அமைப்பதை தவிர்க்கிறார்கள். மரங்களை உபயோகித்து தான் வீடுகளை காட்டிக் கொள்கிறார்கள். வீடு முழுக்க மரம் என்பதால் தீக்குச்சி பற்ற வைத்தால் கூட உடனே அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் சென்சார் கருவிகள் அமைத்திருக்கிறார்கள். வீடுகளில் ட்யூப்லைட் உபயோகிப்பதில்லை, எல்லாம் டேபிள் லேம்ப்தான்.

அமெரிக்க டாக்ஸி டிரைவர்களில் 99% பேர் நாணயத்தோடு நடந்து கொள்பவர்கள். அவர்கள் தங்கள் பயணிகளை ஏமாற்றுவதில்லை. நம் ஊரில் ஒரு டாக்ஸியில் ஏறிக்கொண்டு இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் வேண்டுமென்றே பல இடங்களை சுற்றிவிட்டு கடைசியாக நாம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தது நம் கைகளில் உள்ள பணத்தை கறந்து விடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் டாக்ஸி டிரைவர்கள் தங்களிடம் உள்ள ரோடு மேப்பை காட்டி இந்த வழிகளில் சென்றால் பயணக் கட்டணம் குறைவு என்று சொல்லி அறிவுறுத்திய பின்பே பயணத்தை தொடர்கிறார்கள்.

நம் நாட்டில் சாலை விதிகள் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதேபோல் போதுமான பயிற்சி இல்லாமலேயே வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம். காரணம் இங்குள்ள R.T.O-எனப்படும் விட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணம் கொடுத்தால் போதும் உரிமம் உடனடியாய் கிடைத்துவிடும். அமெரிக்காவில் நம்மூர் R.T.O-வைப்போல D.M.V இருக்கிறது, D.M.V-என்றால் DEPARTMENT OF MOTOR VEHICLES. இங்கு ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டுமென்றால் மோட்டார் வாகன சட்டம் என்ற புத்தகம் ஒன்றை முழுமையாய் படித்து ஒரு பரிச்சை எழுத வேண்டும்.

அந்த பரிச்சையில் தேறியவர்கள் இரெண்டு மாத காலம் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து வாகனம் ஓட்டப் பழக வேண்டும். பின்பே சோதனை ஓட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். D.M.V-யின் சோதனை ஓட்டத்தில் 36-திறன்களை மதிப்பீடு செய்வார்கள். இதில் 6 - தவறுகள் இருக்கலாம் 30-ஐ நாம் சரியாய் செய்தால் மட்டுமே லைசென்ஸ் தரப்படும், நம்மூரை போல் பணம் கொடுத்து லைசென்ஸ் பெறுவதெல்லாம் இங்கு கனவிலும் நடக்காத செயல். பொதுவாக அமெரிக்காவில் உள்ள போலீஸ் காரங்களுக்கு லஞ்சம் கொடுக்க நீங்க முயற்சித்தால் விசாரனையே இல்லாமல் உங்களுக்கு சங்குதான்.


நன்றி: வேர்ல்டு வைல்டு...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அறிந்துகொள்வோம் அமெரிக்காவின் சிறப்புகள்:- Empty Re: அறிந்துகொள்வோம் அமெரிக்காவின் சிறப்புகள்:-

Tue Jul 30, 2013 8:12 pm
அமெரிக்காவில் ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டுமென்றால் “சில கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது” அவற்றை பின்பற்றியாக வேண்டும் என்று முந்தைய பாகத்தில் பார்த்தோம். அங்கிருக்கும் சில கடுமையான விதிமுறைகள் காரணமாக அமெரிக்கர்களுக்கு பொதுவாக சாலை விதிகள் பற்றி அதிகமாக வழிப்புணர்வு ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே அமெரிக்காவில் நம் நாடுகளில் நடப்பது போல் அதிக அளவு சாலை விபத்துகள் நடப்பது இல்லை. தப்பித் தவறி விபத்து நடந்து விட்டால் அடுத்த நிமிடமே ஆம்புலன்ஸ் வந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து காப்ஸ் என்று சொல்லப்படும் காவலர்கள் வந்து விடுகிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு வரும் காவலர்கள் அங்கு இருப்பவர்களை பார்த்து கேட்கும் முதல் கேள்வி “நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? பயப்பட வேண்டாம் உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?”.

நம்ம ஊரில் விபத்து நடந்த இடத்திற்கு வரும் காவலர்கள் முதல் கேள்வி (விபத்தில் அடிபட்டவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும் இருந்தாலும் அவரை உசிப்பி கேக்கும் முதல் கேள்வி) உன்கிட்ட லைசென்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா? என்பதாகத்தான் இருக்கும் இல்லையா நண்பர்களே! 

அமெரிக்காவில் குழந்தைகளை காரில் ஏற்றி செல்வதானால் அவர்களுக்கு தனியாக சீட் இருக்க வேண்டும். பிறந்து ஓராண்டு வரையிலான வயதிற்குட்பட்ட குழந்தைகளை வாகனம் செல்லும் திசையை பார்த்து உட்கார வைக்க கூடாது. காரின் பின்பக்கம் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க வேண்டும். நம்ம ஊரை போல குழந்தைகளை பக்கத்தில் நிறுத்திக் கொண்டோ அல்லது மடியில் வைத்துக்கொண்டோ காரில் பயணம் செய்யகூடாது. இது போன்ற சட்டங்கள் அங்கு இருப்பதால் தான் அங்கு விபத்து நடப்பது குறைவு.

நம் நாட்டிலோ சட்டங்கள் குறைவு, அப்படியே இருந்தாலும் அவற்றை நாம் மதிப்பதில்லை. போக்குவரத்து விதிகளை நம்ம ஊர் போக்குவரத்து அதிகாரிகளே பின்பற்றுவதில்லை பின்னர் எப்படி மக்கள் பின்பற்றுவர். இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தங்கள் உயிரை பற்றியோ அல்லது அடுத்தவர் உயிரை பற்றியோ எந்த பயமும் கிடையாது. சட்டத்தை பற்றியும் பயமில்லை, போலீஸ் பற்றியும் பயமில்லை.

அமெரிக்காவை பொறுத்தவரையில் உலகத்தின் மற்ற நாடுகள் என்னென்ன வழக்கங்களை கையாள்கிறதோ அதற்க்கு நேர்மாறான வழக்கங்களை பின் பற்றுகிறது. உலகெங்கும் வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கம் உள்ளது, இங்கு இடது பக்கம் உள்ளது. நம் நாட்டிலும் சரி உலகின் ஏனைய நாடுகளிலும் சரி சாலைகளில் இடது பக்கம் தான் செல்வது வழக்கம், ஆனால் அமெரிக்கர்கள் வலது பக்கமே செல்கிறார்கள். பூட்டுகளை பூட்டும் போது நாம் மேல் நோக்கி பூட்டுகிறோம், திறக்கும் போது கீழ் நோக்கி திறப்போம் ஆனால் அமெரிக்கர்கள் இதற்கு நேர்மாறாக பூட்டும் போது கீழ் நோக்கியும், திறக்கும் போது மேல் நோக்கியும் திறப்பார்கள். அதே போல் மின் விலக்கு தலைகீழ் மற்றம் தான் மேலே அழுத்தினால் மின் விளக்கு எறியும் கீழே அழுத்தினால் மின்விளக்கு அணையும்.

பொதுவாக அமெரிக்காவில் அபார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள்தான் அதிகம், பொதுவாக அங்கு ஒரு அபார்ட்மெண்ட்டுகளில் ஆறு முதல் நூறு வீடுகள் இருக்கும். ஒரு படுக்கை அரை கொண்ட வீட்டுக்கு மாதவாடகையாக 1000 டாலர் வரை செலுத்த வேண்டியதிருக்கும். இரெண்டு படுக்கையறை என்றால் 1200-ம் மூன்று படுக்கை அரை இருந்தால் 1300-ம் சராசரியாக இருக்கும். தம்பதியருக்கு குழந்தை இல்லையென்றால் மட்டுமே ஒரு படுக்கையறை கொண்ட வீடு கிடைக்கும் ஒரு குழந்தை இருந்துவிட்டால் அந்த குழந்தைக்காக தனி படுக்கையறை கொண்ட வீட்டைத்தான் வாடகைக்கு எடுக்க முடியும். குழந்தைகள் இரவில் தனியாய்த்தான் படுத்துக்கொள்ள வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத ஒரு சட்டம் ஆகும்.

அமெரிக்காவில் பெரும்பாலும் பிள்ளைகள் அனைவரும் 18 வயது நிரம்பியதும் தம் பெற்றோரை விட்டு தனித்து இயங்க ஆரம்பித்து விடுகின்றனர். கூட்டு குடும்பம் என்பதோ அல்லது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பது என்பதோ அங்கு அபூர்வம். தமது 40 வயதுகளிலேயே பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அந்நியபட்டவர்களாக வாழ்கின்றனர். 60 வயதிற்கு பின்னர் பெரும்பாலான முதியவர்கள் தனிமையிலேயே வாழ்கின்றனர். இதன்காரணமாக அங்கு முதியோர் நலனை பாதுகாப்பதற்கென்றே தனி சட்டம் உள்ளது. அதற்க்கு பெயர் O. A. A (Older American Act). இச்சட்டம் தனிமையில் வாழும் முதியவர்களுக்கு என்னென்ன உதவி தேவை என்பதை அரசாங்கமே அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்க வழி வகை செய்கிறது. 

அனைத்து துறையிலும் நவீனமயத்தையும் செயற்கைகளையும் புகுத்திய அமெரிக்கா இப்போது உணவு விசயத்தில் மட்டும் இயற்கையை நோக்கி தன் பார்வையை திருப்பியிருக்கிறது. இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவிக்கபடும் பொருட்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிப்புகளுக்கு உள்ளாகாத பழவகைகள், தானிய வகைகள், பால் பதனப் பொருட்கள், இறைச்சி கோழி மற்றும் முட்டை ஆகிய உணவு பொருட்களுக்கு அமெரிக்க வேளாண்துறை ஆர்கானிக் (ORGANIC) என்ற முத்திரையை பதித்து விற்பனை செய்கிறது. இதனுடைய விலை அதிகம் என்றாலும் அமெரிக்கர்கள் இந்த ஆர்கானிக் உணவு பொருட்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் தங்கள் முதலாளியைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. இங்கு இருப்பது போல் மேலதிகாரி, தொழிலாளி, முதலாளி ஆகியோர்களுக்கிடையே எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது. நண்பர்களை போலவே சகஜமாய் பழகுவார்கள். அதே போல் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரமும் கடுமையானதாக இல்லை. கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டால் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம். “அவர்களுக்கு வேலை தான் முக்கியமே தவிர வேலை செய்யும் நேரம் அல்ல”

அமெரிக்காவில் பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது அந்நாட்டு சட்டப்படி குற்றமாகும். பெற்றோர் அடித்ததாக செய்தி கிடைத்தால் அடுத்த நிமிடம் அந்த வீட்டில் போலீஸ் ஆஜராகிவிடும். இந்த சட்டத்திற்கு பயந்து குழந்தைகளை அடிக்காவிட்டாலும் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்யும் போது வேறுவிதமாக தண்டித்து விடுகிறார்கள். அதாவது தவறு செய்த குழந்தைகளை ஒரு அறையில் சில மணி நேரம் தனியாக அமர வைத்து விடுகிறார்கள். இப்படி தனியாக அமர வைப்பதால் அக்குழந்தைகள் செய்த தவறை உணர்கிறார்கள். இத்தண்டனைக்கு “TIME OUT’ என்று பெயர். இப்படி தனிமைப்படுத்தல் மூலமாக குழந்தைகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான தவறுகள் ஏதும் செய்யாமல் ஒழுக்கம் மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பது அமெரிக்கர்களின் பொதுவான நம்பிக்கை ஆகும்.

அமெரிக்காவில் கோடைகாலங்களில் அதிகாலை நான்கு மணிக்கே சூரியன் உதயமாகிவிடும். இந்த பகல் பொழுதை அமெரிக்கர்கள் முழுமையாக பயன் படுத்திக்கொள்ள தங்களது கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தை முன்னதாக திருத்தி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் கோடைகாலங்களில் அமெரிக்காவில் ஒரு மணி நேரம் முன்னதாகவே பகல் பொழுது துவங்கி விடுகிறது.



நன்றி: வேர்ல்டு வைல்டு...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum