- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
தந்தானைத் துதிப்போமே....
Tue Jan 15, 2013 9:12 am
பாடல் : வே. மாசிலாமணி
சங்கீதம் 95: 1,2
ராகம் : வே. மாசிலாமணி
பல்லவி
தந்தானைத் துதிப்போமே; திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
இந்துப்
பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்தின் மூன்று
சகோதரர்களும், தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, ஆண்டவரின்
ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, திருச்சபையைக் கட்டும் போதகர்களாக,
முழுநேரப்பணியில் ஈடுபட்டார்கள் என்பது வியக்கத்தக்கதல்லவா? இப்படிப்பட்ட
குடும்பத்தின் மூத்த சகோதரராக விளங்கியவரே வே. மாசிலாமணி ஐயராவார். அவரது
இளைய தம்பி வே. சந்தியாகு ஐயரும், சிறந்த பாடலாசிரியர் மற்றும் இசை
வல்லுனர் என்பதை நாம் அறிவோம்.
மாசிலாமணி ஐயர் திருப்புவனம் என்ற
சிற்றூரின் போதகராகப் பணியாற்றிய நாட்களில், இந்தக் கும்மிப்பாடலை
எழுதினார். ஆண்டவரின் புகழை, அனைவரும் அறியும் வண்ணம், அவரைப் போற்றிப்
பாட, திருச்சபையாகிய கன்னியரை அழைப்பதாக, இப்பாடலை மாசிலாமணி
எழுதியிருக்கிறார். சிறந்த வயலின் வித்துவானாகிய மாசிலாமணி, தனது பாடல்
மற்றும் இசைத் தாலந்துகளை, நற்செய்திப் பணிக்கென முழுவதுமாக அர்ப்பணித்துச்
செயல்பட்டார்.
திருவண்ணாமலையின் வாரச் சந்தை நாட்களில், மாசிலாமணி
தன் நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவார். அப்போது அவரின்
பாடலையும் இசையையும் கேட்க, சந்தைக்கு வந்த மக்கள் கூட்டமாகக்
கூடுவார்கள். அவர்களுக்கு நற்செய்தியைப் பக்குவமாகப் பாடல்கள் வழியாக அவர்
எடுத்துக்கூறி, ஆண்டவரின் அன்பால் அவர்களைக் கவர்ந்திடுவார்.
மாசிலாமணி
எழுதிய “ஆர் இவர் ஆராரோ” என்ற கிறிஸ்மஸ் பாடலும், “வந்தனம் வந்தனமே”,
மற்றும் “ஆனந்தமே ஜெயா ஜெயா” என்ற புத்தாண்டுப் பாடல்களும், கிறிஸ்தவ
சமுதாயத்திற்கு பண்டிகைகளின் மகிழ்ச்சியைக் கூட்டித் தரும் பிரபலமான
பாடல்களாக விளங்குகின்றன. கருத்துச் செறிவுடன் விளங்கும் இப்பாடல்கள்,
நு}ற்றாண்டு காலமாய், திருச்சபை மக்களனைவரும் விரும்பிப் பாடும்
பாடல்களாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் பிரபலமாவதற்கு, அவர் அமைத்த சிறந்த
இசைப்பண்களும் காரணமாகும். இசையும் பாடலின் சொல்லடுக்கும், அருமையாக
இணைந்து வருவதை, “ஆனந்தமே ஜெயா ஜெயா,” என்ற பாடலைப் பாடி மகிழ்வோர் நன்கு
அறிவர்.
நன்றி : SMS
Permissions in this forum:
You cannot reply to topics in this forum