நீரிழிவு நோய்-விளக்கம்
Sat Jul 27, 2013 8:51 pm
உடலுக்குள் உணவை ஆற்றலாய் மாற்றும் ரசாயன செயல்பாடுகளில் நிகழும் மாற்றம் காரணமாய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோயாகும். இவ்வாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எகிறச் செய்பவை மூன்று விஷயங்கள்:
1) இன்சுலின் குறைவாக சுரத்தல்.
2) உடல் திசுக்கள் இன்சுலினை குறைந்த அளவிற்கு பயன்படுத்துதல்.
3) அதிகப்படியான சர்க்கரை உற்பத்தி. நீரிழிவு நோய் இரு விதங்களில் ஏற்படுகிறது. இவற்றின் அடிப்படையில் இதை நீரிழிவு நோய் வகை 1 மற்றும் வகை 2 என்று இரு வகைகளாய் பிரிக்கலாம்.
நீரிழிவு நோய் வகை 1
நாம் உண்ணும் உணவிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கு ரத்தம் அதை அணுக்களில் கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு அணுவும் சர்க்கரை மூலம் ஆற்றலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று கொள்வோம். அணுக்களுக்குள் சர்க்கரை நுழைவதற்கு அவற்றைத் திறக்கும் ஒரு சாவியைப் போன்றதே இன்சுலின். இந்த இன்சுலின் என்பது கணையத்திலுள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஹார்மோன் ஆகும்.
நீரிழிவு நோய் உருவாக இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்த இன்சுலின் எனப்படும் சாவி தொலைந்து போய் விடுகிறது. அதனால் செல்களைத் திறந்து உட்புக முடியாமல் ரத்தத்திலேயே சர்க்கரை தேங்கி விடுகிறது (சென்னையில் மழைக்காலங்களில் தெருவெங்கும் நீர் தேங்குவது போல்). இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இதன் விளைவாக ஏற்படுவதே நீரிழிவு நோய் வகை 1.
நீரிழிவு நோய் வகை 2:
அணுக்களின் கதவைத் திறப்பதற்காக இன்சுலின் இருந்தும், பூட்டு பழுதாகி விடுகிறது என்று கொள்வோமே. இப்போது இன்சுலின் தேவையான அளவுக்கு இருந்தும் அதனை பயன்படுத்தி சர்க்கரை அணுக்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது. மற்றொரு வகையில் சொல்வதனால் இன்சுலின் இருந்தும், அதை பயன்படுத்தி சர்க்கரையை ஆற்றலாக மாற்ற அணுக்கள் மறுக்கின்றன. தொழிற் நுட்ப ரீதியில் இதை ‘அதிகப்படியான இன்சுலின் தடுப்பாற்றல்‘என்கிறோம். இன்னொரு பெயர் நீரிழிவு நோய் வகை 2.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்:
நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் தோன்றாது. அதிக அளவில் சிறுநீர் கழிப்பது, அடங்காத தீவிர பசி, தொடர்ந்த எடையிழப்பு, நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்கென தூக்கம் கலைதல், அதிகாலையில் ஏற்படும் கடுமையான தாகம் ஆகியவை நீரிழிவு நோயாளிகள் எளிதில் உதாசினப்படுத்தி விடக்கூடிய ஆரம்ப கட்ட அறிகுறிகள். ரத்த சர்க்கரை அளவு 400-ஐத் தாண்டும் போது ஏற்படும் அறிகுறிகள் கீழ்வருமாறு:
1 குமட்டல்
2 வாந்தி
3 தாகம்
4 அபரிதமான அளவிலான சிறுநீர்
5 வயிற்று வலி
6 மூச்சு விடுவதில் சிரமம்
7 காய்ச்சல்
8 மாறுபட்ட மன இயக்கம்
9 சோம்பல்
10 மனச் சோர்வு
11 வாய் துர்நாற்றம்
12 தலைவலி
13 உணர்விழந்த முழு மயக்கநிலை (கோமா)
நன்றி: வெப்துனியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum