தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும் Empty இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்

Sat Jul 27, 2013 8:50 pm
இந்த பகுதியில் இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும் என்பது பற்றி பார்க்கலாம்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகத் துறை தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் மரு.நா.மோகன்தாஸ் "இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்" என்பது பற்றி இதோ விளக்குகிறார்.

எ உடலிலுள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதனை உலகிலுள்ள மிகச்சிறந்த சுத்திகரிப்பு உபகரணம் என்று தான் சொல்ல வேண்டும். 
எ உடலின் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவதும், 
எ உடலின் தண்ணீர் தேவையினை ஒழுங்கு படுத்தி உடலை சமநிலையில் பராமரிப்பதும், 
எ எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் இவற்றை சரியான அளவில் வைத்திருக்க கூடிய சக்தியான வைட்டமின் னுயை தருவதும், 
எ சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்ற தாதுப் பொருட்களின் அளவை சரிவிகிதத்தில் தருவது 

என்பது உட்பட பல்வேறு பணிகளை சிறுநீரகம் சிறப்பாக செய்து வருகிறது.

சிறுநீரகத்திலுள்ள ஜெஸ்டா கிளாமருளர் Glomerular என்ற முடிச்சு ரெனின் என்ற சுரப்பியைச் சுரந்து இரத்தக் குழாய்களின் அழுத்தத்தை ரெனின் ஆன்ஜியோ டென்சின் மூலம் (Renin - Angio tension)

இரத்தக் கொதிப்பை சீர் செய்து சமநிலையில் வைக்கின்றது.

சிறுநீரகம் இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்படுகின்றதா? அல்லது சிறுநீரகத்தால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறதா?

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக இரத்தக் குழாய்களில் அடைப்பு என்பன போன்ற காரணங்களால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறது என்பது எவ்வளவு உண்மையோ அது போன்றே அதிக இரத்தக் கொதிப்பினால் சிறுநீரக செயலிழப்பு என்ற பாதிப்பும் உண்மையே!

தொடர்ச்சியாக கை கால்களில் சிரங்கு, தொண்டைப்புண் ஏற்பட்டிருந்தால் அதனுடைய பின் விளைவாக கிளாமருலோ நெப்ரேடிஸ் ழுடடிஅநசரடடிநேயீhசவைளை என்ற சிறுநீரக சுழற்சி பாதிப்பால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். சிறுநீர் சிவந்த நிறத்தில் போதல், குறைவாக போதல் ஆகியவை இதனுடைய அறிகுறியாகும். இதன் விளைவாக கை, கால், முகம் வீங்கி தலைவலி உண்டாகும். இதற்கு உப்பு திரவத்தைக் குறைத்துத் தக்க சிகிச்சையினை மேற்கொண்டால் இரத்தக் கொதிப்பு குறையும். 

வலி நிவாரணி

அடுத்து வலி நிவாரணிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அனல்ஜெசிக் நெப்ரோபதி (Analgesic Nephropathy) என்ற சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இரத்தக் கொதிப்பு வரும். வலி நிவாரணிகள் உடம்பிலுள்ள தண்ணீரையும், சோடியத்தையும் உடம்பிலேயே தங்க வைத்து விடுவதே இதற்கான காரணமாகும்.

பிறவி கோளாறால் சிறுநீரகங்கள் சுருங்கி இருந்தாலும், பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்ற பரம்பரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறுநீர் சிறுநீர்த் தாறை வழியே முழுவதும் வெளியேறாமல் மேல் நோக்கிச் செல்கின்ற ரிப்ளெக்ஸ் நெப்ரோபதியால் (Reflex Nephropathy) பாதிக்கப்பட்டிருந்தாலும் சிறுநீரகம் வீக்கம் மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்தி இருந்தாலும் இரத்தக் கொதிப்பு வரும்.

இரத்தப் பரிசோதனை

புரதம், இரத்தம் எந்த அளவு வெளியேறுகின்றது என்பதையும் இரத்தத்தில் யூரியா, கிரியாடினின், சர்க்கரை, யூரிக் அமிலம், சோடியம், கொலஸ்ட்ரால், பொட்டாசியம் இவற்றின் அளவை தேவைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இரத்தக் குழாய்களில் அடைப்பு தெரிந்தால் ரினோ ஆன்ஜியோகிராபி (Rhino angiography) மூலம் எங்கு அடைப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்து தக்க சிகிச்சையினை மேற்கொண்டால் இரத்தக் கொதிப்பைக் குறைக்கலாம். எனவே சிறுநீரகத்தை நல்ல முறையில் காத்துக் கொண்டு இரத்தக் கொதிப்பை தவிர்க்க வேண்டும்.


நன்றி: வெப்துனியா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum