அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன்
Sat Jul 27, 2013 12:00 am
ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்..
ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்..
இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..
" அய்யா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?"
" அது இயலாது டாம்..
ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்..
அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!"
இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை..
ஒரு யோசனை சொன்னார்..
" அய்யா..
ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..?
உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்..
இன்று உங்களுக்கு பதிலாக,
உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'
ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது.
ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு ஐன்ஸ்டீன் கடைசி
இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஒட்டுநர் மிகுந்த
தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்..
கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று
தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன்
என்று நம்பிற்று.
இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு
பேராசிரியர் வடிவில் கிளம்பியது.
அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட
கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்..
திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..
" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே..
இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில்
அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!"
மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி
வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார்
விளக்கமளிக்க...!
உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அறிஞர்களின் வாழ்வில்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum