செட்டி நாடு சமையல் ஸ்பெஷல்
Wed Jul 24, 2013 7:22 pm
[b style="margin: 0px; padding: 0px;"]முருங்கைப்பூ கூட்டு[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]தேவையானவை:[/b] முருங்கைப்பூ 1 கப், சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 2, பாசிப்பருப்பு கால் கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி முக்கால் டீஸ்பூன்.
[b style="margin: 0px; padding: 0px;"]தாளிக்க:[/b] எண்ணெய் 2 டீஸ்பூன், நெய் அரை ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, கறிவேப்பிலை 1 ஆர்க்கு.
[b style="margin: 0px; padding: 0px;"]செய்முறை:[/b] முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும். அனைவருக்குமே ஆரோக்கியத்தைத் தரும் இந்தக் கூட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
[b style="margin: 0px; padding: 0px;"]கூழ் வற்றல் பொரியல்[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]தேவையானவை:[/b] கூழ் வற்றல் 25, சின்ன வெங்காயம் 1 கப், உப்பு தேவைக்கேற்ப, கடுகு அரை டீஸ்பூன். தாளிக்க: உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, எண்ணெய் 4 டீஸ்பூன்.
[b style="margin: 0px; padding: 0px;"]செய்முறை:[/b] வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து, உப்பு சேர்த்து, அதில் கூழ்வற்றலையும் போட்டு வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்பவற்றை போட்டு, அவை பொரிந்து சிவந்ததும், வெங்காயம் கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி, வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
[b style="margin: 0px; padding: 0px;"]கூழ் வற்றல் செய்யும் முறை:[/b] 5 கப் பச்சரிசியை ஊற வைத்து, கால் கப் உப்பு சேர்த்து, முதல் நாள் மாலை நன்கு நைஸாக ஆட்டி வைக்கவும். மறுநாள் 1 கப் அரிசிக்கு 5 கப் என்ற அளவில் தண்ணீர் வைத்து கொதிக்கும்போது, அரைத்த மாவைக் கலக்கி ஊற்றவும். மாவு நன்கு வெந்ததும், Ôரிப்பன் பக்கோடாÕ அச்சில் வைத்து பிழிந்து விடவும். மறுநாள் உரித்தெடுத்து, நறுக்கிக் காய வைத்து எடுத்து வைக்கவும்.
[b style="margin: 0px; padding: 0px;"]கூழ் வற்றல் மசாலா[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]தேவையானவை:[/b] கூழ் வற்றல் 25, பெரிய வெங்காயம் 2, தக்காளி 1, மிளகாய்தூள் ஒன்றேகால் டேபிள்ஸ்பூன், மல்லித் தூள் அரை டேபிள்ஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, கரம் மசாலா தூள் கால் டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, சோம்பு அரை ஸ்பூன், எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்.
[b style="margin: 0px; padding: 0px;"]செய்முறை:[/b] வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கிலும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கூழுவற்றலை சுடுதண்ணீரில் வேகவைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்துவிடவும். வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும். அருமையான சைட் டிஷ் இது.
[b style="margin: 0px; padding: 0px;"]கூழ் வற்றல் குழம்பு[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]தேவையானவை:[/b] கூழ் வற்றல் 20, பூண்டு 20 பல், சின்ன வெங்காயம் 15, தக்காளி 1, புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி இரண்டரை ஸ்பூன்.
[b style="margin: 0px; padding: 0px;"]தாளிக்க:[/b] எண்ணெய் 7 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.
[b style="margin: 0px; padding: 0px;"]செய்முறை:[/b] கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்). வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும். அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும். கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum