make my trip.com ஒரு எச்சரிக்கை!!!
Tue Jul 23, 2013 9:29 am
நேற்றைய தினம் மீண்டும் எதேச்சையதிகார வட நாட்டு வர்த்தகக் கும்பலுடன் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேக் மை ட்ரிப்.காம் எனும் வலைத்தளம் மூலமாக பாங்காக் நகருக்கு தாய் ஏர்வேஸில் மூன்று இடங்களை நான் ரிசர்வ் செய்தேன். இடமும் உறுதி செய்யப்பட்டு ரூ 60000/- அல்லது ரூ 12000/- ஆன்லைன் மூலமாக பணம் கட்டச் சொன்னார்கள்.
ரூ 12000 கட்டினேன்.
கட்டியபிறகு தான் தெரிந்தது! எனக்கு உண்டான டிக்கெட்டும் வரவில்லை, கூடவே என் கணக்கில் இருந்து பணம் எடுக்கப் பட்டும் இருந்தது.
அவர்களின் கஸ்டமர் கேர் எண்ணிற்கு 4 முறை கூப்பிட்டேன். அவர்கள் சரி பார்த்ததில், டிக்கெட் கொடுக்கப் படவில்லை என்றும், பணம் கிடைக்கப் படவில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் பணம் அவர்கள் பெற்றுவிட்டதற்கான ரசீது என் ஈமெயிலுக்கு வந்து விட்டது. அதை அவர்களிடம் அனுப்பினால், பதில் சொல்ல முடியாமல் முழித்தார்கள்!
கஸ்டமர் கேர் தன் பங்கிற்கு ஆற்றும் சிறந்த வழி எது தெரியுமா? பதில் தெரியாவிட்டால் போனை கட் செய்து விடுவதும், மீண்டும் அழைத்தால் வேறு ஒரு நபரிடம் அரைமணி நேரம் என்ன நடந்தது என்று விளக்கவும் வேண்டும். இந்தக் கொடுமைக்கே பலர் பிரச்சனை வரும்போது விட்டு விடுகிறார்கள்.
அவர்களின் வலைத்தளத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய உள்ளூர் அலுவலக முகவரியை பதிந்திருக்கிறார்கள்.
என்னிடம் இருந்த அனைத்து ரசீதுகளுடனும் (என் ipad சகிதம்) நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் ஜிஜி கட்டிட அலுவலகத்தில் உள்ள அவர்களின் கிளை அலுவலகம் சென்று அவர்களிடம் விளக்கினேன்!
அந்த மேலாளர் (அபிஷேக் தமானி) சொன்ன முதல் வார்த்தை, ' எங்களுக்கும் ஆன்லைனுக்கும் சம்மந்தம் இல்லை' என்றார்.
நான் அவரிடம் கேட்ட சில கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல இயலவில்லை. அந்தக் கேள்விகள் ....
1. சம்மந்தம் இல்லையென்றால் ஏன் உங்கள் அலுவலகத்தின் முகவரியை இணைய தளத்தில் கொடுத்திருக்கிறீர்கள்?
2. இதுபோல 100 கேஸ்களில் 3 கேஸ்களுக்கு இது போல தினசரி நடக்கிறது என்றார். ஆகையால் இது ஒன்றும் மிகப் பெரிய விஷயம் அல்ல. உங்கள் பணத்தை 72 மணி நேரத்திற்குள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!
நான்: இது பற்றி முன்கூட்டியே உங்களுக்கு அனுபவம் உண்டென்றால், இதைத் தடுக்க நீங்கள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? 72 மணி நேரம் என் பணம் உங்களிடம் இருக்கிறதே, அதற்குண்டான வட்டியை யார் கொடுப்பார்கள்? இனி என் பணம் திரும்பி வரும் வரை நான் என் டிக்கெட்டிற்காக என்ன செய்ய வேண்டும?
அபிஷேக்: நீங்கள் புதியதாக டிக்கெட் புக் செய்து அதன் முழுத் தொகையையும் உடனே செலுத்த வேண்டும்!
நான்: ஏன் இந்த 12000 ரூபாயைக் குறைத்துக் கொண்டு கட்டுகிறேன்.
அபிஷேக்: அது முடியாது! ?
நான்: ஏன் அது முடியாது?
அபிஷேக்: அந்தப் பணம் எப்போது வரும் என்று தெரியாது?
நான்: 72 மணி நேரத்தில் வரும் என்று சொன்னீர்களே?
அபிஷேக்: வரும்...ஆனா தெரியாது! ஏனென்றால், இது இந்தியா! நீங்கள் இந்தியன், நானும் இந்தியன்....இது நடப்பது இந்தியாவில்....
நான்: இதில் எங்கே இந்தியா வருகிறது? நான் இந்தியன் என்றால் நீங்கள் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? உங்கள் வியாபாரத்திற்கான நேர்மையை இந்தியன் அல்லாதவர்களிடம்தான் காட்டுவீர்களா?
அபிஷேக்: .........
3. டிக்கெட் மாத்திரம் கொடுக்கப் பட்டு பணம் பெறாமல் இருந்ததுண்டா?
அபிஷேக்: ' அது எப்படி? நாங்கள் பணம் பெறாமல் கொடுத்து, அவர்கள் பின்னால் அலைய வேண்டுமா?' -
நான்: சரி, என் டிக்கெட்டின் விலையாவது உறுதி செய்வீர்களா?
அபிஷேக்: அதுவும் முடியாது! டிக்கெட் விலை என்பது சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது.
நான்: படித்த எனக்கே தலை சுற்றும் அளவிற்கு இத்தனை செய்கிறீர்களே, படிக்காதவன் பாடு எப்படி இருக்கும்? இந்த விஷயத்தை நான் என் முக நூல் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா? இதனால் உங்கள் வியாபாரம் பாதிக்கப் படுமே எனும் கவலை இருக்கிறதா?
அபிஷேக்: நீங்கள் தாராளமாக எழுதிக் கொள்ளுங்கள்..... அது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை...
இதுபோல கட்டைப் பஞ்சாயத்து லெவலில் ஆன்லைன் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள வடநாட்டு கம்பெனிகள், வாடிக்கையாளர்களை துரும்பிற்கு சமமாக மதிக்கிறார்கள்.
'இதோ எச்சில் இலையை வெளியே எறிந்திருக்கிறேன், போய் நக்கித் தின்று கொள் நாயே', என்பது போன்ற நடவடிக்கைகளால், என் மனம் அயர்ச்சி அடைகிறது.
இதை நான் நுகர்வோர் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப் போகிறேன்......
இதுபோல மற்றவருக்கும் அனுபவம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், திரு அபிஷேக், இது பற்றி எழுதினால் கவலை இல்லை என்று சொன்னதிற்காகவுமே இந்தப் பதிவு!
-டிமிடித் பெட்கோவ்ஸ்கி

நன்றி: தமிழால் ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum