SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?
Fri Jul 19, 2013 1:27 pm
IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம். எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
- மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
- நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.
- OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன. அதனை அறிய - How to generate OTP
இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.
தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் கீழே உள்ளது போன்ற SMS – ஐ 139 அல்லது 5676714 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
BOOK (Upto 6 passengers) |
உதாரணம்:
BOOK 16232 SBC TPJ 1307 SL Prabu 24 M Prabha 24 F
நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால் உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.
Trans Id: 12345678 Ticket Amount: 460 IRCTC SC: 11.24 Total Amount: 461.24 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS IRCTCUserID to 139 to book ticket. |
இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
PAY IMPS |
உதாரணம்:
PAY 12345678 IMPS 98765432 271089 prabu2710
இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS வரும்.
Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890 Booking Status: Prabu CONFIRM S7 1 WS Prabha CONFIRM S7 4 WS Ticket Amt: 460.0 SC: 11.24 Src: Bangalore CY JN Dst: Tiruchchirapali Date of Journey: 13/07/2013 Sch Dep 19:05 hrs |
டிக்கெட்டை Cancel செய்வது எப்படி?
கஷ்டப்பட்டு புக் செய்த டிக்கெட்டை கான்செல் செய்ய மாட்டீர்கள் இருப்பினும் எப்படி என்று சொல்லி விடுகின்றேன்
1. டிக்கெட் முழுமையாக கான்செல் செய்ய
கீழே உள்ளது போன்று SMS ஐ 139 க்கு அனுப்புங்கள்
CAN <10 Digit PNR> |
உதாரணம்
CAN 10101010 prabu2710
இப்போது கீழே உள்ளது போன்ற ஒரு SMS உங்களுக்கு வரும்.
We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request. |
இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.
Your ticket for with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account. |
2. குறிப்பிட்ட நபர்களின் பயணத்தை மட்டும் கான்செல் செய்ய
சில சமயங்களில் 4/5 நபர்களுக்கு புக் செய்து விட்டு யாரேனும் ஒருவர் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் Ticket – ஐ மட்டும் கூட நீங்கள் கான்செல் செய்யலாம்.
இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி 139 க்கு SMS அனுப்பவும்.
CAN <10 Digit PNR> |
உதாரணம்
CAN 10101010 prabu2710 12 (Upto 6 Passengers)
இதற்கு ஒரு SMS உங்களுக்கு வரும்
We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request. |
இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.
Your ticket for with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account. |
அவ்வளவே :-) . இதை பயன்படுத்திய நபர்கள் கீழே உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் அதையும் குறிப்பிடுங்கள். AIRTEL பயனர்கள் *400# என்று Dial செய்து புக் செய்யலாம் (இது குறித்த பதிவை பின்னர் பார்ப்போம்).
கணினி மூலம் புக் செய்பவர்களுக்கு - IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி
நன்றி: அமர்க்களம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum