குழந்தைகள் உலகம்
Fri Jul 19, 2013 1:09 pm
கல்லூரி ஒன்றில் வகுப்பு ஆரம்பமானது.
ஆசிரியர் கரும்பலகையில் ஒரு புள்ளியைவரைந்தார்.
பின்னர் மாணவர்களிடம், "இது என்ன?" என்று கேட்டார்.
மாணவர்கள் சிரித்தனர்.
ஒருவர் எழுந்து, "அது ஒரு புள்ளி" என்றார்.
ஆசிரியர், "அவ்வளவு தானா?" என்று கேட்டதும், மாணவர் கொஞ்சம் சிந்தித்தார்.
பின்னர், "ஓகே, அது கரும்பலகையில் சாக்பீசால் வைக்கப்பட்ட ஒரு புள்ளி" என்று கூறினார்.
தான் சரியான, தெளிவான பதிலைச் சொல்லிவிட்டதாக மாணவர் பெருமையுடன் புன்னகைத்தார்.
ஆசிரியர் மாணவர்களிடம், "இது மிகவும் சரியான, பொருத்தமான பதில்.
ஆனால், நேற்று இதே கேள்வியை நான் குழந்தைகள் வகுப்பில் கேட்டேன்.
உடனே அங்கிருந்த குழந்தைகள் 'இது ஒரு சிட்டுக் குருவியின் கண், மழைத்துளி, விண்மீன், இரவில் தூரத்தில் வரும் இரயிலின் முன் விளக்கு' என்று 50க்கும் அதிகமான பதில்களைச் சொன்னார்கள்" என்றார்.
ஆசிரியர் இவ்வாறு சொன்னதும், கல்லூரி மாணவர்களிடையே அமைதி நிலவியது.
ஆசிரியர் வைத்த புள்ளிக்கு மிகச் சரியான, பொருத்தமான பதிலை மட்டுமே தங்களால் தர முடிந்தது.
ஆனால், குழந்தைகளோ அந்தப் புள்ளியைத் தாண்டி, பொருளுள்ள பதில்களைத் தந்தனர் என்பதை அந்த மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் வழியாக நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் பல உள்ளன.
ஆனால், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டியது பெரியவர்களே என்று நாம் தீர்மானித்து விட்டதால், குழந்தைகளிடமிருந்து வரும் மிக அருமையான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
அவ்வப்போது நமக்குள் வாழும் குழந்தை மனங்களுக்குச் செவி சாய்த்தாலே பல அற்புதமானப் பாடங்களைப் பயில முடியும்..
- selected --

Permissions in this forum:
You cannot reply to topics in this forum