அறிஞர்களின் வாழ்வில் நகைச்சுவை....
Fri Jul 19, 2013 9:05 am
அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன்தான்,
பூமிக்குப் புவிஈர்ப்பு சக்தி இருக்கிறது
என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அதற்காக நோபல் பரிசு பெற்றவர்.
இவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார்.
அவர் அங்கிருந்த அறைக் கதவில் வட்டமாகப் பெரியதும் சிறியதுமான இரண்டு துவாரங்கள் இருந்ததைப் பார்த்தார்.
“அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கிறீர்களே அது எதற்கு” என்று நியூட்டனிடம் கேட்டார் அவர்.
அதற்கு விஞ்ஞானி சொன்னார்:
“நான் சிறியதும்,
பெரியதுமான
இரண்டு பூனைகள் வளர்க்கிறேன்.
நான் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டால்
பெரிய துவாரம் வழியாகப் பெரிய பூனையும்,
சிறிய துவாரம் வழியாகச் சிறிய பூனையும்,
அறைக்குள் வருவதற்காகவே
இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்” என்று.
“இதற்கு இரண்டு துவாரங்கள் தேவை இல்லையே?
பெரிய துவாரம் வழியாகவே இரண்டு பூனைகளும்
வந்துவிடலாமே”
என்று நண்பர் கூறியதும்,விஞ்ஞானி திடுக்கிட்டார்.
“ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
எனக்கு இந்த யோசனையே தோன்றவில்லையே”
என்றவர் சிறிய துவாரத்தை அடைத்தார்.
-உடுமலை.சு.தண்டபாணி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum