வில்லியம்கேரி ....
Thu Jul 11, 2013 8:39 am
வங்கமொழியில் வேதாகமம் வெளிவர அரும்பாடுபட்டவர் வில்லியம் கேரி. ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தவரும் அவரே. 1800 இல் செராம்பூர் நகரில் ஒரு இலவசப்பள்ளியை ஆரம்பித்தார்.
வங்காளம், சமஸ்கிருதம், மராத்தி கற்பிக்கும் பேரறிஞராகவும் விளங்கினார்.
உலகப்பிரசித்தி பெற்ற செராம்பூர் பல்கலைக் கழகத்திற்கு நிறுவனர் இவரே. அதிலுள்ள வேத சாஸ்திரக் கல்லூரி, செராம் பல்கலைக் கழகத்தின் மணிமகுடம் போல் விளங்குகிறது.
ஒருநாள் ஒரு அரசாங்க அதிகாரி வில்லியம் கேரியைப் பார்த்து"கேரி, நீர் ஒரு காலத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருன்தவரதானே?" என்று கேட்டார். அகாலத்தில் செருப்பு தைக்கும் மக்களை "செம்மான்" என பெயரிட்டு அவர்களை ஒதுக்கி வைப்பது வழக்கமாய் இருந்தது. ஆகவே அந்த அதிகாரி கேரியை சங்கடத்தில் ஆழ்த்தவே இந்த கேள்வியை கேட்டார்.
அதற்கு கேரி " ஐயா! நான் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருக்கவில்லை. ஓர் மிக சாதாரணமான செருப்பு தைக்கும் செம்மானாகவே இருந்தேன்" என்றார்.
தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்...
உயர்ந்த பின்னும் தாழ்த்துகிறவன் கிரிடம் பெறுவான்...
நன்றி: கதம்பம்
Re: வில்லியம்கேரி ....
Thu May 07, 2015 4:48 am
Barnas Munna with தேவனுடைய சத்தம் and 97 others
கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் இல்லை.....
இராஜ்ய மேன்மைக்காய்
இழந்தவர் யவரும் கஸ்டப்பட்டது இல்லை....
இவர் யார் என்று கட்டாயம் தெரிந்தது கொள்ளுதல் அவசியம்...
பெயர்:வில்லியம் கேரி.,
த/பெ:எட்மண்ட் கேரி.,
பிறந்து:1761ஆம் ஆண்டு...ஆகஸ்ட்17.....
இடம்:நார்த்தாம் டன்ஷயர்...
இங்கிலாந்து
தந்தை நெசவு தொழிலை செய்பவர்....
ஏழ்மையான குடும்பம்,கடினமான வாழ்க்கை சூழல் ....
இயற்கையின் மேலும்..
வீட்டு விலங்குகள் மேலும் பாசம்மிக்கவர்...
புத்தகம் வாசிப்பதில் ஆலாதிபிரியம் கொண்டவர்.....
லத்தின்,கிரேக்கு,ஆங்கிலம், மொழியில் புலமை பெற்றவர்....
வசதிகள் இல்லாததால் பள்ளி படிப்பை நிறுத்தி செருப்பு தைக்கும் வேலை செய்துவந்தார்....
தன் நண்பர் மூலம் இயேசு ஏற்றுக் கொண்டவர்....1781ஆம் ஆண்டு,ஜீன்10ஆம் தேதி...டாரதியை ........
தன் வாழ்கை துனையாக ஏற்றார்......
பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கம் நடத்திய கூட்டத்தில் ......
இந்தியாவில் மிஷனெரி தேவையை அறிந்து...
தன் மனைவியை சமாதனப்படுத்தி...
1793 ஆம் ஆண்டு நவம்பர்9ஆம் தேதி....
தனது மனைவி 4 பிள்ளைகளுடன்.....
கல்கத்தாவில் வந்து இறங்கினார்......
பெங்காளி மொழி தெறியாமல் அவதிப்பட்ட நேரத்தில்
ராம் பாஷி..... என்ற கிறிஸ்தவர் உதவினார் ....
குடும்ப செலவுக்காக நிறைய இடங்களில் வேலை செய்து வந்தார்..
மனமுறிவின் காரணமாக தன் மனைவியை இழந்தார் ......
தான் தத்தெடுத்த இந்தியாவுக்காக 40 ஆண்டுகள் ...
தன் தாய்நாடான இங்கிலாந்து செல்லாமல் இங்கேயே மரித்தார்........
நாம் ஏன் இவரை தெரிந்தது கொள்ள வேண்டும்....?
ஏனெனில் இந்தியாவின் முதல் மிஷனெரி 40 வருடத்தில்............
27 மொழியில் வேதகமத்தை மொழி மாற்றம் செய்த வேதத்தில் இடம் பெறாத இயேசுவின் சீஷன் .....
மேலும் ராமயணம் போன்ற புரண கதைகளை ஆங்கித்தில் மொழி பெயர்த்தவர் ....
*இவர் வேதாகமத்தை மொழி மாற்றம் செய்யும் போது ஒரு முறை தீ பிடித்த போது ஒரு காகிதம் கூட மிஞ்சாமல் தீக்கு இரையாக்கப்பட்ட போதும்.....
மனதலராது
நான் ருசிபார்த்த இயேசுவை இந்தியர்களும் ருசிக்க வேண்டி மீண்டும் வேதத்தை மொழி மாற்றம் செய்த தேவதாசன்........
சாதனைகள்....
------------------
1.இந்தியாவில் முதல் முதலில் செய்தி தாளை வெளியிட்டது.....
2.இந்தியாவில் முதல் முதலில் குழந்தை பலியை நிறுத்தியது......
3.இந்தியாவில் இரயிலில் பணக்காரர்கள் தான் இரயிலில் செல்ல வேண்டும் என்பதை உடைத்து இரயிலில் ஏழைகளும் செல்ல உதவியது.....
4.மருத்துவத்தை பொதுவுடமையாக்கியது
5.ஏழைகள் படிக்க கல்லுரிகளை பொதுவுடமையாக்கியது.இது போல் முதல் முதலில்...
முதல் முதலில் என்று 20க்கும் மேற்பட்ட காரியத்தை நமக்கு வழங்கிய இயேசுவின் சீடன் தான் இந்த .......வில்லியம் கேரி ....
இவரை கர்த்தர் தான் இந்தியாவுக்கு அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசித்தால்......
கட்டாயம்....
இவரை பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் சொல்லுங்கள் ......
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ......
ஆமேன்.....
பர்னாஸ் முன்னா....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum