விதி - பகுத்தறிவு
Mon Jul 01, 2013 9:15 am
குருவிடம் சென்ற சீடன் ஒருவன்,
''விதி என்றால் என்ன?
பகுத்தறிவு என்றால் என்ன?''
என்று வினவினான்.
குரு சீடனைப் பார்த்து, ''உன்
வலது காலைத் தூக்கு!'' என்றார்.
சீடன் வலது காலைத்
தூக்கியபடி நின்றான்.
''சரி. இப்போது நீ தூக்கிய
வலது காலை கீழே இறக்காமல்
இடது காலையும் தூக்கு!'' என்றார் குரு.
''அது எப்படி முடியும்?''
என்று கேட்டான் சீடன்.
அதற்கு குரு, ''இரண்டு காலையும்
தூக்கினால் விழுந்துவிடுவேன் என்று
தூக்காமல் இருந்தாயே...
இதுதான் பகுத்தறிவு.
இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில்
தூக்கி நிற்க முடியாத நிலை இருக்கிறதே...
இது தான் விதி!'' என்று விளக்கம்
சொன்னார்.
நன்றி: தமிழால் ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum