உழக்கு - பண்டைய கால அளவு
Sat Jun 29, 2013 9:25 am
உழக்கு என்பது பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும். இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.
பண்டையத் தமிழர் பயன்படுத்திய முகத்தல் அளவைகள்:
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி அல்லது நாழி
8 படி = 1 மரக்கால் (குறுணி)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
இவ்வாய்ப்பாட்டின் படி:
1 உழக்கு
=10 செவிடு
=2 ஆழாக்கு
=1/2 உரி
= 1/4 படி
= 1/16 மரக்கால் ஆகும்.
நன்றி: சுபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum