தன்னம்பிக்கை ...
Sat Jun 29, 2013 8:08 am
தன்னம்பிக்கை வளர்க்கும் வகுப்பில் மூவர் கலந்து கொள்கின்றனர்.
மூவரிடம் ஒரே கேள்வி கேட்கப்படுகிறது.
"சவப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டு குடும்பத்தார் வருத்தத்துடன் சூழ இருக்கும் போது, உங்களை பற்றி என்ன சொல்லவேண்டும் என்று விரும்புவீர்?"
முதலாம் மனிதர் = இதோ இங்கே கிடப்பவன் உலகில் சிறந்த மருத்துவன் மட்டுமில்லை, நல்ல குடும்பஸ்தனும் கூட"
இரண்டாம் மனிதர் = "நான் ஒரு சிறந்த ஆசிரியர், என்னால் பல பல வெற்றிகரமான மாணவர்கள் உருவாக்கப்பட்டனர் என்று சொல்ல வேண்டும்."
மூன்றாமவர் = "அதோ பாருங்கள், அவன் அசைகிறான்"
(தன்னம்பிக்கைன்னா இப்படித்தாங்க இருக்கனும்..)
யானையின் பலம் தும்பிக்கை
மனிதனின் பலம் நம்பிக்கை
நன்றி: தமிழ்
Re: தன்னம்பிக்கை ...
Thu Jul 25, 2013 6:59 pm
சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.
அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர்.
அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால்,
எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.
தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.
via Nirosha Naren

Permissions in this forum:
You cannot reply to topics in this forum