வங்கியில் பணியிடம்
Wed Jun 26, 2013 7:02 am
பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி,இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் பணியாற்ற வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் கனவாக இருந்து வருகிறது. அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தற்போது அதிகாரி (கிரேடு பி) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணி: அதிகாரி (கிரேடு-பி)
மொத்த பணியிடங்கள்: 98
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். அதாவது 02.06.1983 – 01.06.1992- க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். முதுகலை பட்டதாரிகள் 55 சதவிகித மதிப்பெண்களும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ‘டிப்பார்ட்மென்ட் ஆப் எக்கனாமிக் அன்ட் பாலிசி ரிசர்ச்’ பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.400. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணம் செலுத்தும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.rbi.org.in என்ற வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை இரண்டு கணினி நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைன் பதிவு ஆரம்பமான தேதி: 12.06.2013
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2013
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.rbi.org.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
நன்றி: இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum