நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்...
Wed May 01, 2013 6:16 am
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!!
"நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும உயிரென்றார் - அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம். "
விளக்கம் :
2 கண்ணிமை=1 கைந்நொடி
2 கைந்நொடி=1 மாத்திரை
2 மாத்திரை=1 குரு
2 குரு=1 உயிர்
6 உயிர்=1 கஷணிகம்
12 கஷணிகம்=1 விநாடி
60 விநாடி=1 நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது, நாள், வாரம், மாதம் என நீண்டுகொண்டே செல்கிறது.
மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.
"நாழிகை ஏழரை நற்சாமந் தானாலாம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் - தோழி
தினமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே"
விளக்கம் :
60 விநாடி=1 நாழிகை
2½ நாழிகை=1 ஓரை
3¾ நாழிகை=1 முகூர்த்தம்
7½ நாழிகை=1 சாமம்
4 சாமம்=1 பொழுது
2 பொழுது=1 நாள்
7 நாள்=1 கிழமை
15 நாள்=1 பக்கம்
30 நாள்=1 திங்கள்
6 திங்கள்=1 அயனம்
2 அயனம்=1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப்பகுப்புகளா?!
இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம்??
மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே!
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே!!
தமிழ் - ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்ற புரிந்துகொள்ள, தற்பொழுது
நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால
அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம் !!
8 சாமம்=1 DAY
2.5 நாழிகை=1 HOUR
1 நாழிகை=0.4 HOUR
2.5 விநாடி=1 MINUTE
1 விநாடி=0.4 MINUTE
1 விநாடி=24 SECONDS
1 கஷணிகம்=2 SECONDS
1 உயிர்=0.3333333333333333 SECOND
1 குரு=0.1666666666666667 SECOND
1 மாத்திரை=0.0833333333333333 SECOND
1 கைந்நொடி=0.0416666666666667 SECOND = 41.66 MILLISECONDS
1 கண்ணிமை=0.0208333333333333 SECOND = 20.83 MILLISECONDS
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்து வருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல... நம் காலத்தையும் தான்...
விழித்துக்கொள்வோம் தமிழர்களே !
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !!
நன்றி: வரலாற்றுப் புதையல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum