திருக்குறள் எழுதிய வண்ணம்
Wed May 01, 2013 6:12 am
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் தன் குறளை எப்படி எழுதியிருப்பார் என்று
கற்பனை செய்து பார்த்ததுண்டா? படத்தைக் காணுங்கள். தலை சுற்றுகிறதா?
காலந்தோறும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு
திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்.
தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ்
எழுத்து காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி
எழுதப் பெற்றிருக்கும் என்பதைக் காணுங்கள். அப்படத்தில் உள்ள குறள் கீழே
:-
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.
ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.
தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
தகவல்: ஆசிரியர் பக்கம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum