படுக்கையைப் பார்த்தால்
Thu Apr 25, 2013 9:53 am
*** படுக்கையைப் பார்த்தால் பயம் இல்லையா? ***
கடலில் கப்பல் போய்க் கொண்டிருந்தது.திடீரென வந்த புயல் கப்பலை பலமாக
ஆட்டியது.பயணிகள் அனைவரும் பயந்து கூக்குரலிட்டனர். ஆனால் கப்பலின் கேப்டன்
மட்டும் எந்த சலனுமுமின்றி தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பயணிகள் அந்த கேப்டனை பார்த்து, ''உங்களுக்கு பயமாய் இல்லையா?'' என்று கேட்டனர்.
கேப்டன்: பயமா?எனக்கா? என் தந்தை ,என் பாட்டனார் அனைவரும் கடலில்தான் இறந்தார்கள்.
பயணி:உன் குடும்பத்துக்கு சாவைக் கொடுத்த இந்தக் கடலைப் பார்த்து உனக்கு பயமில்லையா?
கேப்டன்:எதற்காகப் பயப்பட வேண்டும்.எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே? உன் தந்தைஎங்கு இறந்தார்?
பயணி: என் தந்தை படுக்கையில் தான் இறந்தார்.
கேப்டன்:அப்படியானால் உனக்கு படுக்கையைப் பார்த்தால் பயம் இல்லையா?
பயணி: இல்லை.படுக்கை பாதுகாப்பான இடமாயிற்றே.
கேப்டன்:இருக்கலாம்.கடவுள் இல்லாத இடமே கிடையாது.அவர் அருள் கடலிலும்
இருக்கலாம்;படுக்கையிலும் இருக்கலாம்.உன் தந்தை படுக்கையில் இறந்தும் கூட
உனக்கு படுக்கையைப் பார்த்து பயமில்லை என்றால் எனக்கு ஏன் கடலைப் பார்த்து
பயம் ஏற்படப் போகிறது?
அதனால் வீணாக பயபடாமல் கடவுள் மேல்
நம்பிக்கை வைத்து அமைதியாய் இருங்கள், நாளைய தினம் விடியும் போது நாம்
பத்திரமாக இருப்போம் என்றார்.
ஆம் நண்பர்களே, எதை குறித்தும்
கலக்கம் இல்லாமல் நம்மை காக்க ஒரு தெய்வம் உண்டு என்று எப்பொழுதும் நம்
சிந்தையில் வைத்துக்கொண்டு சமாதானமாய் வாழ்வோம்.
"சமாதானத்தை
உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக்
கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக்
கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.(இயேசு)"
யோவான் 14:27
"கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" மத்தேயு 6:27
"உன்னை காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை" சங்கீதம் 121:4
"அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்." சங்கீதம் 91:3
"உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது." சங்கீதம் 91:7
"கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்." சங்கீதம் 34:7

Permissions in this forum:
You cannot reply to topics in this forum