தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஜெப நடை தேவையா - வேதவிளக்கம் Counter

Go down
avatar
ariyalursam
புதியவர்
புதியவர்
Posts : 23
Join date : 11/03/2013
http://www.freechrismo.wap.sh

ஜெப நடை தேவையா - வேதவிளக்கம் Empty ஜெப நடை தேவையா - வேதவிளக்கம்

Sat Jan 11, 2014 7:58 am
மன்றாட்டு ஜெபம் மற்றும் ஆன்மீகப் போராட்டம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியோடு பட்டணங்களிலும் மாநகர்களிலுமுள்ள தெருக்களைச் சுற்றி அணிவகுத்து நடந்து ஜெபித்துவரும் புதிய பழக்கமும் இப்போது தோன்றியுள்ளது. இது ஜெபப்பவனி அல்லது ஜெப ஊர்வலம் அல்லது ஜெபநடை (Prayer Walk) என்றழைக்கப்படுகிறது. அநேக கிறிஸ்தவருக்கு இது கவர்ச்சியாயிருந்தாலும் இது வேத போதனைக்கு உகந்ததாயிராததால் மற்ற சிலருக்குக் கேள்வியாயிருக்கிறது. இந்த ஜெப ஊர்வலங்கள் இப்போது பல இடங்களில் கூடிக்கொண்டேவருவதால், வேதாகமக் கண்ணோட்டத்தில் இதை அலசிப்பார்ப்பது அவசியமாகியுள்ளது.
இயேசுவைப் பொருத்தவரை, ஜெபமானது பிரதானமாக மறைவிலேயே செய்யப்படவேண்டியதென்பதை முதலாவது சுட்டிக்காட்டப்படவேண்டும். இயேசுகிறிஸ்துவின் காலத்து மார்க்கவாதிகள் சிலர் "வீதிகளின் சந்திகளில்" வேண்டுமென்றே நின்று ஜெபிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். அதை இயேசு வன்மையாய்க்கண்டித்தார். "நீ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் நுழைந்து, உன் கதவைப்பூட்டி, மறைவாயிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு: அப்பொழுது மறைவிலுள்ளதைப்பார்க்கும் உன் பிதா வெளிப்படையாய் உனக்குப் பலனளிப்பார்" என இயேசு போதித்தார் (மத்6:5,6). இரகசிய ஜெபமே சரியானது. ஜெபத்தில் இரகசியம் என்பதே இயேசுவின் கோட்பாடு. பொதுவிடங்களில் இயேசு ஜெபித்ததாய் நாம் வாசிப்பதரிது. மாறாக, இப்புனித ஜெப பயிற்சிக்காய்த் தனிமையான இடங்களைத் தேடிசென்றார். நோயாளிகளுக்காய்க்கூட அவர் ஒருபோதும் பொதுயிடங்களில் ஜெபித்ததாய்த் தெரியவில்லை. அவர்களை பொது இடங்களில் குணமாக்கினார், அவ்வளவுதான். சிற்றூர்களையும், பெருநகர்களையும் நற்செய்திமயமாக்க இயேசு எழுபது சீடரை அனுப்பியபோது "நான் உங்களுக்கு இருளில் சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்: காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின் மேலிருந்து பறை சாற்றுங்கள்" என்றார் (மத் 10:27). அதாவது, ஜெபமானது மறைவிடங்களில் ஏறெடுக்கப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து நற்செய்தியை வெளியிடங்களில் அறிவிக்கப்படவேண்டும். எதிர்ப்பு நிறைந்த பகுதிகளிலும் இம்முறையையே பின்பற்றவேண்டுமென்பது இயேசுவின் போதனை (வச 28).
நகர்களைச்சுற்றி ஜெப ஊர்வலம் வந்ததாக அப்போஸ்தலர் நடபடிகளில் எங்கும் நாம் வாசிப்பதில்லை. ஏதென்ஸ் நகரானது விக்கிரகங்களால் நிறைந்திருந்ததைக் கண்ட பவுலின் ஆவி சினமடைந்தது. உடனே அவன் விக்கிரகாராதனையின் ஆவிக்கெதிராய்ப் போராட ஜெப ஊர்வலமொன்றையும் நடத்திவிடவில்லையே. மாறாக, சந்தைவெளிகளில் தினமும் மக்களோடு தர்க்கித்துப் "பேசினான்" (அப் 17:16,17). பேதுரு சிறையிலடைக்கப்பட்டபோது, விசுவாசிகளெல்லாரும் அணிவகுத்து அல்லேலுயா கோஷமிட்டுக்கொண்டு சிறை மதில்களைச்சுற்றி ஜெபபவனி வரவில்லை. அவர்கள் கதவுகளைப் பூட்டிக்கொண்டு வீடுகளுக்குள்ளிலிருந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். ஆண்டவர் அற்புதமாய்ப் பேதுருவை விடுவித்தார் (அப் 12:5,12,17).
ஜெப ஊர்வலத்திற்கு ஆதாரமாக அடிக்கடி மேற்கோள்காட்டப்படும் வேதச்சம்பவம் இஸ்ரவேலர் ஏழுநாள் எரிகோ மதிலைச்சுற்றி வந்ததாகும் (யோசு 6). ஆனால் இச்சம்பவம் புதிய ஏற்பாட்டு யுகத்திலுள்ளோருக்கு ஆன்மீகப் போராட்ட ஜெபத்தைப் போதிப்பதற்காய் எழுதப்பட்டதல்ல. எபேசியருக்குப் பவுல் எழுதிய நிரூபத்திலேயே இதற்குரிய முழுமையும் முடிவுமான உபதேச முண்டு. அவன் எழுதியுள்ளபடி, பொல்லாத சக்திகளின் முக்கிய இருப்பிடம் "வான மண்டலங்களில்" இருக்கிறது (எபே 6:12). கிறிஸ்து "எல்லாத் துரைத்தனத்திற்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும்.... மேலாய்....... உன்னதங்களில்" உட்கார்ந்திருக்கிறார் (1:20,21). அவர்மீது விசுவாசம் வைத்திருக்கும் நாம் அவரோடு "உன்னதங்களில்" வீற்றிருக்கிறோம் (1:3). இப்படியிருக்க, போராட்டமானது சமதளத்தில் அல்ல. மேலிருந்து நாம் எதிரியைத் தாக்குகிறோம். அமலேக்கியருக்கு எதிராக தேவமக்கள் போர்புரிந்தகாட்சி இத்தத்துவத்தைத் தெளிவாய் விளக்குகிறது. மலை உச்சியிலிருந்த மோசேயும், ஆரோனும், ஊரும் (ஜெபவீரர்களாக காணலாம்) மன்றாட்டு வீரரைக் குறிக்கின்றனர். அமலேக்கியரோடு அடிவாரத்தில் போர்புரிந்த யோசுவாவும், இஸ்ரவேலரும் நற்செய்தியறிவிப்பாளரை குறிக்கின்றனர். (யாத் 17).
ஒரு நகரைக் கைப்பற்றுவதற்காய் ஆண்டவர் கொடுத்த இராணுவத் திட்டத்தை மட்டுமே எரிகோசம்பவம் விளக்குகிறது. அது "துதியின்" சத்தமல்ல, வெறும் முழக்கம்மட்டுமே. கேள்வி கேட்காமல் தம்மை விசுவாசித்து, தமக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதையே தேவன் இங்கு இஸ்ரவேல் மக்களுக்குப்போதித்து அவர்களைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். எரிகோவை "ஆசீர்வதிக்க" அல்ல, சபிக்கப்பட்ட அந்நகரை "அழிக்கவே" அவர்கள் சென்றிருந்தனர்! அது இரட்சிப்புக்கான முகாம் அல்ல, அது அழிவுக்கான முற்றுகை! பெரும்பாலான கிறிஸ்தவருக்குக்கூட திருமறை விளங்காதிருக்கும் இக்காலத்தில், கிறிஸ்தவரல்லாதோர் புறமதஸ்தவர்கள் இவ்வித ஜெப ஊர்வலங்களைக் குறித்துக் கேள்விப்படும்போது அவற்றை தீவிரவாதச் செயல்களாகவே கணிப்பர். அவர்களை சுவிசேஷத்திற்கு நேராக கவருவதற்குப் பதிலாக, அவர்களுக்கு கிறிஸ்தவர்கள்மீது வெறுப்பைத்தான் ஏற்றிவிடுவோம்.
எருசலேமில் இயேசு வெற்றிப் பவனி வந்ததும் ஜெப ஊர்வலத்திற்கு எடுத்துக்காட்டல்ல. "ஓசன்னா" என்றால் "ஆண்டவரே, எங்களை விடுவியும்" என்று பொருள். ரோமரின் கொடுங்கோலாட்சியிலிருந்து தாங்கள் விடுவிக்கப்பட யூதரின் இதயக்கதறல் அது.
அப்படியானால் "புருஷர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்" என்று பவுல் 1 தீமோத்தேயு 2:8ல் எழுதியதின் பொருளென்ன? இந்த வேதப்பகுதி "திருச்சபையில்" ஆண்களும், பெண்களும் எப்படி நடந்துக்கொள்ளவேண்டுமென்பதைத்தான் போதிக்கிறதே தவிர நவீனகால ஜெபநடைகளை ஆமோதிக்கவில்லை (வச9-12). "எல்லா இடங்களிலேயும்" என்ற சொற்றொடருக்கு பொருள் "எங்கெல்லாம் சபை கூடிவருகிறதோ அங்கெல்லாம்" என்பதுதான் (1கொரி 1:2). இந்த குறிப்பிட்ட வேதப்பகுதியின் போதனை திருச்சபையில் இருக்கவேண்டிய அதிகாரம் மற்றும் தலைமைத்துவத்தைப்பற்றியதே தவிர தெரு ஜெபத்தைப் பற்றியதல்ல. பரிசுத்த கரங்களை உயர்த்தி என்பது ஆன்மீக அதிகாரத்தைப் பயன்படுத்துவதையே குறிக்கும். மட்டுமல்ல, இந்த வசனத்தை ஜெப ஊர்வலங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தினால், பெண்களுக்கு இங்கு இடமேயில்லை!
போதுமானளவு நாம் இன்னும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லை என்பதே எனது அபிப்ராயம். விதை விதைப்பதற்கு மாற்று எதுவும் கிடையாது. ஜெபம் எவ்வளவுதான் முக்கியமானதும் வல்லமையானதுமாயிருந்தாலும் கிரமமாய், சோர்ந்துபோகாமல் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அது பதிலானதாகாது (மாற்றாகாது). பெருக விதைக்காமல் சிறுக விதைப்பதே அறுவடை குறைவாயிருப்பதற்கு காரணம் (2கொரி 9:6). ஜெப ஊர்வலங்கள் உற்சாகமாயிருக்கலாம். ஆனால் அது வேலையைச் சாதிக்காது. அன்றைய இரட்சணிய சேனையினர்போல விசுவாசிகள் திறந்தவெளிப் பிரசங்கத்திற்காய்த் தைரியமாகப் புறப்பட்டு செல்லவேண்டும். ஜெப ஊர்வலமல்ல, சுவிசேஷப் பவனியே இன்றையத் தேவை. உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் "பிரசங்கம்பண்ணுங்கள்" என்றுதான் இயேசு சொல்லியிருக்கிறார் (மத் 16:15) "எந்த பட்டணத்தில் நுழைந்தாலும்... பிரசங்கியுங்கள்" என்றார் இயேசு (மத் 10:7, லூக் 10:8,9). எழுபது சீடர் "பிரசங்கிக்கும்படி" அனுப்பப்பட்டனர். அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கையிலேயே சாத்தான் கீழே விழுவதை இயேசு கண்டார். (லூக் 10:18). (பிசாசு விழ இங்கு தனிஜெபம் செய்யவில்லை என்பதை கவனிக்கவும்).
தனிநபர்களாகவும், குழுக்களாகவும் நம் சமுதாயங்களுக்குள் ஊடுருவிச்சென்று நற்செய்தியைப் பகிர்ந்துக்கொள்வோம். கிறிஸ்துவின் உபதேசத்தினால் பட்டணங்களை "நிரப்புவோம்" (அப் 5:28). நாடுகளிலும் கண்டங்களிலுமுள்ள "யாவரும்" சுவிசேஷத்தைக் கேட்டுவிடும்படி மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இடையறாது நற்செய்தியை அறிவித்துக்கொண்டேயிருப்போம் (அப் 19:10). வீடுகள்தோறும் சந்திப்பு ஊழியம் செய்ய விரைவோம் (அப் 20:20). இப்படி ஓர் இடம் விடாது அறிவித்துக்கொண்டேயிருந்தால்தான் "உலகத்தைக் கலக்குகிறவர்கள்" எனும் பட்டப்பெயர் நமக்குக்கிடைக்கும் (அப் 17:6). இது கடினமெனினும் இது ஒன்றே வழி. வேறெதும் பகட்டாயிருக்கும், பரவசமாயிருக்கும், ஆனால் பயனளிக்காது. கிறிஸ்தவரல்லாத ஒருவரிடம் நமது வாயைத்திறந்து சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொள்வதையோ, இல்லந்தோறும் நற்செய்தியறிவிப்பதையோவிட ஜெப ஊர்வலங்களில் கலந்துக்கொள்வது எளிது. எதிலுமே எளிதானதையே தெரிந்துக்கொள்வதில் கிறிஸ்தவர்களாகிய நாம் கெட்டிக்காரர்கள். ஜெப ஊர்வலங்களில் கலந்துக்கொள்ள வெறுமனே ஓர் உற்சாகமிருந்தால்போதும். ஆனால் நற்செய்தியவிறிப்புப் பணியில் திறம்படச் செயல்பட வேண்டுமானால் ஆவியின் அபிஷேகம் இன்றியமையாதது.
கால்மிதிக்கும் தேசமெல்லாம் கிடைக்குமென்பது பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட தேசியவாக்குத்தத்தமாகும். அது பூகோள சம்பந்தப்பட்டது. (உபா 11:24, ஆதி 13:14,15). இந்த நற்செய்தி யுகத்தில் நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது இடங்களல்ல, இனங்களே. "எங்கெல்லாம்" என்றல்ல, "எவரெல்லாம்" என்பதே (யோசு 1:3, மாற் 16:16). மக்களிடம் செல்லும்போதும் அல்லது நாம் சந்திக்கும் (எவரும்) நமது செய்தியை ஏற்றுக்கொண்டு விடமாட்டார்கள். அப்படிப்பட்ட வாக்குத்தத்தம் எதுவும் கிடையாது. விசாலமான வழிக்குப்பதிலாக நெருக்கமான வாசலை வெகுசிலரே தெரிந்துக்கொள்வர்.
உலகை கிறிஸ்தவமயமாக்க அல்ல, நற்செய்திமயமாக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
"கிறிஸ்துவுக்கு இந்தியா" என்பது வறட்டு கூச்சல். "இந்தியாவிற்கு கிறிஸ்து" என்பதே அர்த்தமுள்ள கோஷம்.
ஜெப ஊர்வலங்கள் தேவையற்றவை என்றே நான் சொல்லுவேன். அந்தந்த இடங்களில் ஜெபித்தாலும் அறைகளிலிருந்து ஜெபித்தாலும் ஒன்றுதான். "நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரே 23:23). நமது இருதயங்கள் தேவனுடைய இருதயத்தோடு எவ்வளவு நெருங்கியிருக்கின்றன. அழியும் மாந்தருக்கான அவரது பாரதத்தை நாம் எவ்வளவு பகிர்ந்துக்கொள்கிறோம் என்பதே காரியம் (ரோ 9:1-3).
ஜெப பவனிகள் அல்லது ஊர்வலங்கள் நடத்தச்செலவிடும் நேரத்தையும், பலத்தையும் தீவிர நற்செய்தியறிவிப்பு முயற்சிகளில் செலவிட்டால் கிறிஸ்துவின் பேராணையை வெகுசீக்கிரம் நிறைவேற்றி விடலாம். ஜெப ஊர்வலங்கள் நடத்திய நகர்களில் ஏற்பட்ட ஆன்மீக அசைவைக்குறித்து சில பிரசங்கிமார் சாட்சி கூறலாம். ஆனால் ஆன்மீக வஞ்சகம் பிரவாகித்துவரும் இக்காலங்களில் திருமறையில் தெளிவாகப் போதிக்கப்படாத செயல்பாடுகளில் நாம் ஈடுபடாதிருப்பதே பாதுகாப்பு. ஜெப ஊர்வலங்களைப் பொருத்தவரை, இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி, ஜெபத்தைக்குறித்த அடிப்படையான சில வேதாகமத் தத்துவங்கள் தள்ளப்பட்டுள்ளன.
குறிகள் நியமித்து மும்முரமாய் நற்செய்தியறிவிப்பில் ஈடுபடாதபடி நம்மை திசை திருப்புவதற்கான பிசாசின் தந்திரங்களில் (?) இதுவும் ஒன்றாயிருக்கலாம்.
நாம் விழிப்பாயிராவிடில் போராட்டத்தில் தோல்வியடைந்து "செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளையே செய்துவந்தோம்" என்று அறிக்கையிட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்!.
(குறிப்பு: சகோ.R.ஸ்டான்லி அவர்கள் எழுதிய இந்த அர்த்தமுள்ள கட்டுரையை மட்டும் தேவையானோர் போட்டோகாப்பி எடுத்து ஜெப ஊர்வலத்துக்குபோக ஆசைப்படும் நபர்களுக்கு கொடுத்து ஊர்வலத்துக்கும் - ஊழியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள உதவுங்கள்).
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum