நன்றியால் துதிபாடு - காணொளி பாடல்
Sat Aug 17, 2013 6:48 pm
நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு - 2
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் - 2
1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் - 2
- நன்றியால் துதி
2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும் - 2
சிலுவையின் நிழல் உண்டு பாடிடுவோம்
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் - 2
- நன்றியால் துதி
3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் - 2
- நன்றியால் துதி
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|