தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்:- Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்:- Empty ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்:-

Sat Mar 23, 2013 12:45 pm
ஆன்லைன் ஷாப்பிங் தான் இப்போதைய ட்ரெண்ட். கிட்டத்தட்ட நமக்கு தேவையான
அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் நமக்கு விற்கின்றன.
நிறைய தளங்கள், நிறைய பொருட்கள். எதை நம்புவது? எப்படி வாங்குவது போன்ற
விசயங்களை இன்று பார்ப்போம்.



1. Return Policy

ஆன்லைன் மூலம் வாங்கும் போது இது மிக அவசியமாக கவனிக்க வேண்டிய ஒரு
விஷயம். ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை
திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி நமக்கு இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வாங்கிய பொருள் வீண் தான்.

இதற்கு என்ன
விதிமுறைகள் என்பதையும் அறிதல் அவசியம். பெரும்பாலும் பொருள் உங்களுக்கு
பிடிக்கவில்லை என்றால் வாங்கிய அன்றே அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டி
இருக்கும். அதே சமயம் நீங்கள் அதை சேதாரப் படுத்தி இருக்க கூடாது.

2. Shipping Cost and Time

இது மிக மிக அவசியமாக கவனிக்க வேண்டிய விசயம். காரணம் பெரும்பாலான
தளங்கள் இப்போது ஒரு டிவி வாங்கினால் கூட இலவசமாக Ship செய்கிறார்கள். இந்த
சமயத்தில் shipping க்கு என்று தனியாக பணம் கட்ட சொன்னால் அந்த தளங்களை
தவிர்த்தல் நலம்.

இதில் eBay மட்டும் விதிவிலக்கு, காரணம் அது
ஒரு சந்தை. பொருட்களை விற்பது பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனவே விலை
குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, Shipping க்கு கட்டணம் கேட்கவும்
வாய்ப்பு உள்ளது.

பல நேரங்களில் சிறு நகரங்கள். கிராமங்கள்
போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தளம் பொருளை நேரடியாக அனுப்ப முடியாத போது அதை
Registered Post வாயிலாக அனுப்புகிறார்கள­ா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான தளங்கள் இதற்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.


அடுத்து Shipping Time. அதிகபட்சம் 15 நாட்கள் தான் எந்த ஒரு பொருளுக்கும்
Shipping Time, அதற்கு மேல் காத்திருக்க சொன்னால் நீங்கள் வேறு தளத்தில்
சென்று வாங்கலாம். பெரு நகரங்கள் என்றால் 4-5 நாட்களுக்குள் பொருட்கள்
கிடைத்து விடும்.

உங்களுக்கு வரும் மின்னஞ்சல் உறுதிச்
செய்தியில் Expected Delivery Time என்பதை விட முன்னதாகவே பொருள்
உங்களுக்கு வந்து சேர வேண்டும், இல்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை
நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை Tracking மூலம்
செக் செய்யும். இன்னும் Order Ship செய்யப்படவே இல்லை என்றால் Cancel
செய்து விட்டு நேரடியாக கடையில் சென்று வாங்கி விடுங்கள்.

3. Cash Back

ஒரு பொருளை ஆர்டர் செய்த உடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும்
அல்லது வேறு ஒரு பொருளை வாங்க தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள்
ஆர்டர் செய்த பொருளை கான்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு
வழங்குகிறதா என்று கவனியுங்கள்.

அதோடு முழுப்பணமும் உங்களுக்கு
வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7
நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.

4. Product Quality & Customer Review

பெரும்பாலான தளங்கள் உண்மையான நிறுவன பொருட்களையே வழங்குகின்றன. எனவே
பிரபலமான தளத்தில் வாங்கும் போது போலி பொருளோ என்ற பயம் உங்களுக்கு தேவை
இல்லை.

பல தளங்கள் உற்பத்தியாளர் வாரண்டி (Manufacturer
Warranty) உடன் தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை
விலையை விட மிகக் குறைவாக இருந்தால் அந்த தளம் Manufacturer Warranty
தருகிறதா என்று கவனித்து வாங்குங்கள். சில தளங்களில் Seller Warranty என்று
இருக்கும், இதனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பொருளை விற்றவரிடம் தான்
செல்ல வேண்டி இருக்கும். eBay தளத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.


குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள்­ என்றால் அந்த
பொருள் எந்த அளவிற்கு உபயோகமானது, அது எப்படிபட்டது போன்றவற்றை அறிய பல
தளங்கள் Customer Review வசதியை கொடுத்துள்ளன. இதில் அந்த பொருளை வாங்கிய
பலர் அதன் நிறை, குறைகளை பற்றி சொல்லி இருப்பார்கள். அதை கவனித்து வாங்க
வேண்டும்.

குறிப்பிட்ட தளத்தின் சர்வீஸ் பற்றி அறிய இணையத்தில் தேடலாம், அல்லது ஏற்கனவே வாங்கிய அனுபவம் உள்ள நண்பர்களிடம் கேட்கலாம்.

eBay தளத்தில் பொருளை விற்பது யாரோ ஒருவர் என்பதால், குறிப்பிட்ட
விற்பனையாளருக்க­ு வந்துள்ள Positive Feedback - ஐ பொறுத்து பொருளை
வாங்கவும். இது Seller Info பகுதியில் இருக்கும்.

5. Payment Options

ஆன்லைன் மூலம் வாங்கும் போது தற்போது பல வகையான Payment வசதிகள் உள்ளன.
ஆர்டர் செய்யும் போதே Credit Card, Debit Card (ATM Card), Net Banking
மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. இதில் நீங்கள் Secured ஆகத் தான்
பணம் செலுத்துகிறீர்க­ளா என்பதை கவனியுங்கள்.

பணம் செலுத்தும்
பக்க URL "HTTPS" என்று ஆரம்பித்து இருக்க வேண்டும். இது உங்கள் பாதுகாப்பை
உறுதி செய்யும்.வெறும்­ HTTP என்று மட்டும் இருந்தால், ஆர்டர் செய்வதை
தவிர்க்கவும்.

இதில் பயம் உள்ளவர்கள் Cash On Delivery வசதி
இருந்தால் அதை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் பொருள் உங்களுக்கு வந்து
சேரும் நாளன்று நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.

EMI மூலம்
வாங்கும் போது, பல தளங்கள் Processing Charge என்று ஒன்றை வசூலிக்கும்.
அப்போது மற்ற தளங்களில் குறிப்பிட்ட பொருளின் விலை மற்றும் EMI - யில்
Processing Charge இல்லாமல் வருகிறதா என்று பாருங்கள். இதனால் உங்களுக்கு
பணம் மிச்சம் ஆகும்.

6. மற்ற விஷயங்கள்

பொருளுக்கு
வரும் இலவசங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஆர்டர் குறித்து உங்களுக்கு
வரும் மின்னஞ்சல்களை Delivery ஆகும் வரை டெலீட் செய்யாமல் வைத்து இருங்கள்.


இவையே ஆன்லைன் ஷாப்பிங் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum