தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
2 Posts - 40%
பார்வையிட்டோர்
சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

on Fri Oct 30, 2015 8:10 am
சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 12189766_925143414231965_5948990226621391642_n

CIBIL SCORE..?

சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

கடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது. வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது சிபில் ஸ்கோர். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

சிபில் என்றால்..? 

சிபில் என்பது Credit Information Bureau (India) Ltd என்பதன் சுருக்கம். சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். இதனால் கடன் வாங்கு பவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். 

ஏன் சிபில்?

இன்றைய காலகட்டத்தில் பலரும் கடன் வாங்கியே தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இப்படி வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் அடுத்து அவர்களுக்கு கடன் கிடைக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனை ஒருவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், அடுத்து வங்கியிலோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் கடன் வாங்க நினைப்பவர் அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தவிர, கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை எனில், வங்கியின் வாராக் கடன் அதிகரித்துவிடும். எனவே, வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் ஸ்கோர்!

கடன் வாங்குபவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படுகிறது. அதாவது, எந்தவிதமான கடனை வாங்கியிருந்தாலும், கடனுக்கான இஎம்ஐ தொகையை சரியான தேதியில் திரும்பச் செலுத்துகிறார்களா என்பதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

எந்த வகையான கடன்?

நீங்கள் வாங்கும் கடனின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, சொத்து உருவாக்குவதற்காகக் கடன் வாங்கும்போது அதற்கான வெயிட்டேஜ் அதிகமாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்கியவர் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், சொத்துகளை முடக்க முடியும். எனவே, வங்கிக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. வீட்டுக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன் போன்றவை இதில் அடங்கும். அதே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்கள் சொத்து உருவாக்க உதவாது. எனவே, இதற்கான வெயிட்டேஜ் குறைவாக இருக்கும். இதில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லையெனில், வங்கிக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடனின் கால அளவும், தொகையும்!

கடன் கால அளவின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, வீட்டுக் கடன் நீண்ட காலத்தில் இருக்கும். எனவே, இஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் வருமானம் உயரும்போது எளிதாகக் கடனை அடைக்க முடியும்.

கடன் தொகையின் அளவானது கடன் வாங்குபவரின் சம்பள தொகையில் அதிகபட்சம் 60% அளவுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும்போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரிதிபலிக்கும். மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்திவிட்டு, பில் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது முற்றிலும் தவறு. நீங்கள் எப்போதுமே கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கும்.

அடுத்தடுத்து கடன் வாங்கக் கூடாது! 

கடன் தேவைப்படுவர்கள் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து அங்குக் கிடைக்க வில்லை என்றால் உடனே அடுத்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வது தவறு. அதேபோல, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பம் செய்வதும் தவறு. ஏனெனில் கடன் கிடைக்காது எனத் தெரிந்தும் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றே வங்கிகள் எண்ணும். இதனால் உங்களுக்குக் கடன் கிடைக்காமல் போவதுடன், கிரெடிட் ஸ்கோரும் குறைய வாய்ப்புள்ளது. வங்கிக் கடன் அல்லது கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து ஆறு மாதம் கழித்துத்தான் அடுத்தக் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கடனை முடித்தபிறகு!

வங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சிபில் ரிப்போர்ட் எடுப்பது. கடனை கட்டி முடித்த 3 - 6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தாமல் அல்லது முன்கூட்டியே கடனைக் கட்டி முடித்து இருப்போம். எனவே, அந்தச் சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்குத் தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற இயலாது. ஒருவேளை வங்கியின் கவனக்குறைவு அல்லது வேறு காரணங்களினால் சிபில் ரிப்போர்ட்டில் தகவல்கள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கடனை முடித்தவுடன் சிபில் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்து, அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை வங்கியுடன் பேசி திருத்த முயற்சிக்கலாம்.

எதற்கு, எவ்வளவு வெயிட்டேஜ்?

கடனை திரும்பச் செலுத்தும் முறையில், உங்களின் நடவடிக்கைக்கு 30 சதவிகிதமும், எந்த வகையான கடன், கடனின் கால அளவு ஆகியவைக்கு 25 சதவிகிதமும், சம்பளத்துக்கும், கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசத்துக்கு 25 சதவிகிதமும், கடன் வாங்க முயற்சி செய்யும் முறை, கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவிகித தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு 20 சதவிகிதமும் வெயிட்டேஜ் இருக்கும்.

ஸ்கோர் மற்றும் இண்டெக்ஸ்!

சிபில் அமைப்பு தற்போது CIBIL TransUnion Score 2.0 என முறையில் ஸ்கோர் வழங்குகிறது. இந்த முறையில் இதுவரை கடன் வாங்காதவர்கள், கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது அவர்கள் குறித்த விவரம் சிபில் அமைப்பில் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு NA அல்லது NH எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். 

1-5 வரை இண்டெக்ஸ் உள்ளது. இது கடன் வாங்கியவரின் கடந்த 6 மாதக் கடன் வரலாறு அடிப்படையில் இருக்கும். இண்டெக்ஸில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பவர்கள் குறைந்த ரிஸ்க் உடையவர்கள் என்றும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிக ரிஸ்க் உடையவர்கள் என்றும் குறிப்பதாகும்.

சிபில் ஸ்கோர் 300 - 900 வரை இருக்கும். இதில் அதிக மதிப்பெண் வைத்திருந்தால், குறைவான ரிஸ்க் உடையவர்கள் என்பதைக் குறிக்கும். ஆனால், வங்கிகள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்க முடியும். இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கேஒய்சி ஆவணங்களையும் சமர்பித்தால், 7 வேலை நாட்களில் உங்களின் மெயில் ஐடிக்கு சிபில் ரிப்போர்ட் வரும்.

சிபில் ஸ்கோர் படிவத்தை
https://www.cibil.com/faq/credit-score-and-loan-basicsஇணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். 

#CIBIL
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

on Fri Oct 30, 2015 8:12 am
Radhakrishnan Tirunelveli


எந்தக்கடனையும் முழுமையாக திருப்பி செலுத்தியிருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் உடனே ஒரு NO DUE CERTIFICATE ம், கடன் கணக்கின் முழுமையான STATEMENT OF ACCOUNT ஒன்றையும், வங்கி அதிகாரியின் கையெழுத்தோடு கேட்டு வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக PREPAYMENT செய்து முடிக்கப்படும் கடன் கணக்கு சம்பந்தபட்ட விவரங்களை பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் CIBIL க்கு முறையாக அப்டேட் செய்யாமல் கணக்கு LIVE ல் இருப்பதாகவே காட்டும்... இந்த விஷத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தின் அசட்டையான போக்குகள் மிக மிக மட்டமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு வருட MARCH 31 முடிந்ததும் அதுவரையுள்ள 12 மாத STATEMENT OF ACCOUNT ஐ வாங்கி பத்திரப்படுத்திக்கொள்வது நலம். ஏனென்றால் பெரும்பாலும் இப்போது ECS மூலமாகவே தவணைகளை வசூலித்து விடுவதால் வங்கி SB ACCOUNT ஸ்டேட்மெண்ட் தவிர வேறு ரசீது கிடையாது. எனவே லோன் ஸ்டேட்மென்ட் தனியாக வாங்கும் போது அசல் மற்றும் வட்டி எவ்வளவு செலுத்தியிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

on Fri Oct 30, 2015 8:15 am
Ayyapa Raj Renga


 CIBIL என்பது தனி நபரின் கடன் வாங்கும் தகுதி மற்றும் திருப்பி செலுத்தும் சக்தியை நிர்ணயம் செய்யும் அளவீடாக உள்ளது .அந்த வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஒரு அரணாக விளங்குகிறது . ஆனால் இது முழுக்க முழுக்க வங்கிகளுக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டு சராசரி நடுத்தர மாதந்திர வருமானம் பெரும் நபர்களை பெரும் குற்றவாளிகளாக சித்தரித்து வருகிறது . அவர்களது அநியாய வட்டி விகிதம், அக்கிரம பகல் கொள்ளை ஆகிய அனைத்திருக்கும் RBIமற்றும் SBI ஆசியுடன் நடைபெறும் நிறுவனம்தான் இந்த மக்கள் விரோத கபட பூனைக்கு மணி கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை .
Sponsored content

சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum