தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேகமாக தட்டச்சு செய்ய Empty வேகமாக தட்டச்சு செய்ய

on Thu Apr 11, 2019 10:12 pm
எங்கும் கணினிமயம் என்றான பிறகு தட்டச்சு தெரிந்து கொள்வதும், வேகமாக 
தட்டச்சு செய்வதும் அத்தியாவசியம் ஆகும். வேகமாக தட்டச்சு செய்வது ஒரு கலை. இன்று டைப்ரைட்டிங் பயிற்சி பெறுபவர்கள் குறைந்துவிட்டார்கள். ஆனால் கணினியில் வேகமாக பணிபுரிய தட்டச்சுத்திறன் அவசியம். எளிதாக தட்டச்சு பயில சில டிப்ஸ்...

*     முதலில் வசதியான இடத்தில் இடையூறின்றி அமருங்கள். மடியைவிட சற்றே உயர்வான இடத்தில் விசைப்பலகை (கீபோர்டு) இருக்க வேண்டும். வசதிக்கேற்ப இருக்கைகயையும், கீபோர்டையும் நகர்த்தி வைத்துக் கொண்டு தட்டச்சு செய்ய தொடங்குங்கள்.

*   நேராக அமர்ந்த நிலையில், மணிக்கட்டுக்கு இணையாக கீபோர்டு அமைந்திருந்தால் தட்டச்சு செய்ய வசதியாக இருக்கும். இது எல்லா விசைகளுக்கும் விரல்களை சிரமமின்றி நகர்த்த உதவியாக இருக்கும். தலைகுனிந்த நிலையிலோ, கைகளை உயர்த்தியோ தட்டச்சு செய்ய வேண்டிய நிலை இருக்கக்கூடாது.

*   எளிதாக தட்டச்சு செய்ய விரல்கள் சரியான விசைகளில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். தட்டச்சுப் பலகையில் மத்தி வரிசையில் இருக்கும் ஏ,எஸ்,டி,எப் (ASDFJKL;) வரிசையை ‘ஹோம் கீ’ என்பார்கள். இதுதான் தட்டச்சு செய்பவரின் விரல்களின் இருப்பிடமாகும். இடது கை விரல்களை ஏ.எஸ்.டி.எப்.   (ASDF)   விசைகளிலும், வலது பக்க விரல்களை ஜே,கே.எல். மற்றும் ; குறியீடு உள்ள விசைகளிலும் (JKL;) வைத்திருக்க வேண்டும். இடையில் இருக்கும்   GH    விசைகளை ஆள்காட்டி விரல் மூலமாகவே இயக்க வேண்டும். வலது கை கட்டைவிரலை இடைவெளி விசையை தட்டவும், இடது கை கட்டை விரலை ஓய்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே தட்டச்சு தெரிந்தவர்கள் பின்பற்றும் வழக்கமாகும்.

 *   தட்டச்சு படிப்பவர்களும், தெரியாதவர்களும் இந்த வரிசையில் கைவிரல்களை வைத்திருந்து மெதுவாக தட்டச்சு செய்து   பழகினால் விரைவில் வேகமாக தட்டச்சு செய்ய முடியும்.

*    முதலில் ஏ, எஸ்.டி.எப் வரிசைசயை இடது கையால் தட்டிவிட்டு, பின்னர் இடைவெளிக்கு கட்டை விரலை பயன்படுத்தி பிறகு ;,எல், கே, ஜே (;LKJ) என்று தட்டச்சு செய்யுங்கள். 

*   பிறகு கேப்ஸ்லாக்கை ஆன் செய்து கொண்டு இதே வரிசையில் பெரிய எழுத்துகளை (கேப்பிட்டல்) எழுத்துகளை தட்டச்சு செய்து பாருங்கள்.
*   இந்த வரிசை நன்கு வேகமாக அடிக்க முடிந்த பிறகு   zxcvmnb      என்ற வரிசையை இதே வரிசையில் விரல்களை பயன்படுத்தி தட்டச்சு செய்து பகழகவும்.

*   இறுதியில் மேல் வரிசையில் உள்ள qwertpoiuy  தட்டச்சு செய்து பார்க்கவும். (படத்தில் விரல்களுக்குரிய விசைகள் வண்ணங் களால் வேறுபடுத்தப்பட்டு உள்ளது).

*  பிறகு எழுத்துகளை பார்க்காமல் சின்னஞ்சிறு வார்த்தைகளை தட்டச்சு செய்து பழகவும். எழுத்துகளை பார்க்காமல் தட்டச்சு செய்து பழகிவிட்டால் விரைவிலேயே அதிகவேகமாக தட்டச்சு செய்ய முடியும். 

*  இதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து பழகுவதால் நீங்களும் அதிக வேகமாக தட்டச்சு செய்ய முடியும். தட்டச்சுடன், கணினிக்கான குறுக்குவிசைகளையும் கற்றுக் கொண்டால் உங்களால் கணினியை திறம்பட இயக்கி பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum