தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முகமது சிலுவைப்பாடுகளை மறைக்க காரணம் என்ன?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முகமது சிலுவைப்பாடுகளை மறைக்க காரணம் என்ன?  Empty முகமது சிலுவைப்பாடுகளை மறைக்க காரணம் என்ன?

Tue Feb 02, 2016 4:58 am
இஸ்லாத்தை உருவாக்கும் போது ஒரே இறைவன் என்ற கொள்கையை முன் வைத்து யூத மதத்தையும், கிறிஸ்தவத்தையும், அரேபிய பாகன் மதத்தையும் ஒன்றினைக்கிறார் முகமது.

முகமது அவர்கள் கால அரபி மக்கள் பல தெய்வங்களை வழிபடும் மக்களாக இருந்தனர். அரபி மக்களின் தெய்வங்களில் அல்லாஹ் என்ற தெய்வமே பெரிய, சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்பட்டது. வானில் இருக்கும் நிலாதான் அல்லாஹ். அல்லாவின் மனைவி சூரியன். அல்லாவிற்கும் சூரியனிற்கும் லாத், உஸ்ஸா, மனாத் என்ற மூன்று நட்சத்திரங்கள் மகள்களாக பிறந்தனர். இந்த குடும்பத்தை தான் தெய்வமாக அரபி மக்கள் வழிபட்டு வந்தனர். முகமது 'அல்லா தான் தெய்வங்களில் பெரிய தெய்வம்' என்ற அரபி மக்களின் கொள்கையை மாற்றி 'அல்லாஹ் மட்டுமே இறைவன், அல்லாவை அன்றி வேறு தெய்வம் இல்லை' என்கிறார். இதனை கீழுள்ள திருக்குர்ஆன் வசனத்தில் காணலாம்.

"நீங்கள் ஆராதிக்கும் லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான மனாத்தையும் கண்டீர்களா? உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா? அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும். இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது" - திருக்குர்ஆன் 53: 19-23

அரபி தேசத்தில், யூதர்களும் வாழ்ந்து வாழ்ந்து வந்தனர். அல்லாவை யூதர்களின் தெய்வமான கர்த்தரை (யேகோவா) போல சித்தரிக்கிறார் முகமது. தான் யூதர்களின் இறைவனான கர்த்தரிடத்தில் இருந்து வந்த இறைதூதர் என்கிறார். யூத இறைவனின் பெயர் இஸ்லாம் வந்த பிறகு 'அல்லாஹ்' என்றாகிறது. யூதர்களின், கிறிஸ்தவர்களின் வேதங்களில் கர்த்தரை 'அல்லாஹ்' என்ற பெயர் கொண்டு சித்தரித்த இடம் ஒன்று கூட இல்லை. இதனை மறுக்க அல்லாஹ் என்பதற்கு அரபி மொழியில் இறைவன் என்று அர்த்தம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். "நிலாவை வணங்க வேண்டாம்" என்று குரான் கூறும் சில வசனங்களை எடுத்து காட்டுகின்றனர்.

முகமது கால பேகன் மக்களின் நிலாக்கடவுளுக்கும் 'அல்லாஹ்' என்பதே பெயர். முகமது நிலாக்கடவுளான அல்லாவை தான் குறிக்கிறார் என்பதற்கு மேலுள்ள திருக்குர்ஆன் வசனமே சான்று. அல்லாஹ் நிலாக்கடவுள் அல்ல என்பது உண்மையானால் ஏன் காரணமில்லாமல் முகமது லாத், உஸ்ஸா, மனாத்தை அல்லாவின் மகள்கள் என்று கூறாதீர்கள் என்று குர்ஆனில் கூற வேண்டும்? ஏன் இஸ்லாத்தில் நிலா முக்கியமாக கருதப்படுகிறது? நிலாவை வணங்கவில்லை என்றாலும் பிறை நிலா இஸ்லாமின் சின்னமாக விளங்குவது ஏன்? முகமது தன்னை இறைதூதர் என்று நிரூபிக்க நிலாவை வைத்து அதிசயங்களை செய்து காட்டினதாக இஸ்லாமிய நூல்கள் கூறுகின்றனவே அது ஏன்? காபா முகமது அவர்கள் காலகட்டத்தில் அரேபிய பேகன் மத மக்களால் வழிபட்ட இடம் என்ற செய்தி நிலவி வருவது ஏன்? ரமலான் பண்டிகை பிறைநிலாவை கணக்கில் கொண்டு அனுசரிக்கபடுவது ஏன்? ஏன் இஸ்லாத்தில் நிலா ஒரு கணிசமான பங்கை வகுக்கிறது? இன்றும் அரேபிய பேகன் மக்களின் பழக்கவழக்கங்கள் இஸ்லாத்தில் மிஞ்சி உள்ளதை காணலாம்.

இதன் பின், யூதர்களின் இறைவனான கர்த்தரும் ஏசுவும் ஒன்று என்று நம்பிவந்த கிறிஸ்தவர்களின் பக்கம் திரும்புகிறார் முகமது. யூதர்கள் இயேசுவை வெறுத்தனர். இயேசுவை யூத மக்கள் ஒரு நல்ல போதகராக கூட ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் அவரை இறைவனாக போற்றி வந்தனர். இப்பொழுது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மனம் ஏற்குமாறு இயேசுவை இஸ்லாத்தில் அழகான ஓர் இடத்தில் வைக்கிறார் முகமது. அதாவது இயேசு இறைவனல்ல, இறைவனால் யூதர்களுக்கு அறிவுரை சொல்ல அனுப்பப்பட்ட இறைதூதர், இயேசு யூதர்களின் வேதங்களில் உரைக்கப்பட்ட மேசியா தான் என்கிறார் முகமது. இயேசுவை கர்த்தருக்கு இணையாக்காமல் இறைதூதர், மேசியா என்பதால் யூதர்களுக்கு இஸ்லாத்தை ஏற்று கொள்வதில் சிரமம் இல்லை. யூதத்தில் ஏசுவிற்கு இடமே இல்லை என்கிற நிலை இருக்கும் போது ஏசுவிற்கு இறைதூதர், மேசியா என்ற அந்தஸ்து இஸ்லாத்தில் கிடைத்தமையால் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாத்தை ஏற்று கொள்வதில் சிரமமில்லை.

சிந்தியுங்கள். இப்பொழுது அரேபிய பேகன் மக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மனம் ஏற்குமாறு அழகான மதமான இஸ்லாம் உருவாகிவிட்டது! அரேபிய பேகன் மக்களின் பெரிய தெய்வமான அல்லாஹ் இஸ்லாத்தின் தெய்வமாக விளங்குகிறது. அல்லாஹ் தான் யூதர்களின் இறைவனான கர்த்தர் என்பதால் யூதர்களுக்கும் இஸ்லாத்தில் குறை இல்லை. யூதர்களிடம் இருந்து எவ்வித மதிப்பும் மரியாதையும் கிடைக்காத ஏசுவிற்கு 'இறைதூதர், மேசியா' என்ற மதிப்புகள் இஸ்லாத்தில் கிடைப்பதால் கிறிஸ்தவர்களும் ஏற்கும் வண்ணம் இஸ்லாம் அமைந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தை பின்பற்றவோரின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பும் அதிகமாகிறது.

ஆனால் சிலுவைப்பாடு காரணமாகவே கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவனாக போற்றுவதை முகமது நன்றாக அறிந்துள்ளார். இதன் காரணமாக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதை மறைக்கிறார். ஆனால் உண்மையான மேசியா பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்பது யூதர்களின் வேதங்களில் முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இயேசுவின் காலத்து சரித்திரவான்களும் இயேசுவின் சீடர்களும் ஆதி கால கிறிஸ்தவர்களும் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றே எழுதி வைத்துள்ளனர். இதன் காரணமாக, 'இயேசுவை போன்ற தோற்றம் உடைய வேறொரு நபரை அவர் என்று எண்ணி சிலுவையில் அறைந்துவிட்டனர்' என்கிறார் முகமது.

இதன் மூலம் இஸ்லாம் என்ன கூறுகிறது?

இயேசுவின் பெயரில், ஏசுநாதரின் இடத்தில் வேறொரு நபர் பாடுகளை அனுபவித்ததால் அது இயேசு அனுபவித்ததிற்கு சமமாம். அதனால் மேசியாவிற்கு என முன்னுரைக்கப்பட்டவை நிறைவேறிவிட்டன. 

ஏசுநாதரை போன்ற தோற்றம் கொண்ட வேறு நபர் சிலுவையில் அறையப்பட்டதை அறியாமல் இயேசு தான் சிலுவையில் அறையப்பட்டார் என்று நினைத்து ஏசுநாதரின் கால மக்கள் சரித்திரங்களை எழுதிவிட்டனர். அதனால் கிறிஸ்தவ கொள்கைகள் நம்பிக்கைகள் தவறு. 
ஏசுநாதர் சிலுவைப்பாடுகளை அனுபவிக்காததால் அவர் மேல் அன்பும் ஆராதனையும் செலுத்த வேண்டாம் என்பது மறைமுகமாக இஸ்லாம் கூற வரும் செய்தியாகும்.

யூத வேதங்கள் மேசியா தான் சிலுவைப்பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்கிறதே தவிர, மேசியாவின் இடத்தில் வேறொரு நபர் அனுபவிக்கலாம் என்று கூறவில்லை. இதன் மூலம் இயேசுவின் இடத்தில் வேறொரு நபர் அடிக்கப்பட்டதால் மேசியாவிற்கான அடையாளம் நிறைவேறிவிட்டது என்று இஸ்லாம் கூறுவதை ஏற்க முடியாது.

ஆனால், இஸ்லாமியர்கள் மேசியாவிற்கு பதிலாக வேறொரு நபர் அடிக்கப்படலாம் என்று யூதர்களின் வேதத்தில் இருந்து 91ஆம் சங்கீதத்தின் வசனங்களை எடுத்து காண்பிக்கின்றனர். 91ஆம் சங்கீதம், "ஆபத்தில், கர்த்தரை நம்பினவர் அவரை நோக்கி கூப்பிட்டால் கர்த்தர் செவிகொடுப்பார். ஆயிரம் பேர்கள் எதிர்த்து வரினும் நம்பினவரை காக்க தூதர்களுக்கு கட்டளையிடுவார், தூதர்கள் கரங்களில் ஏந்தி நம்பினவரை காப்பாற்றுவர். நம்பினவரின் கண்களுக்கு முன்பாக துன்மார்க்கர் அந்த வேதனையை அனுபவிப்பர், நம்பினவரோ ஆபத்தில் இருந்து தப்பித்துகொள்வார்" என்று கூறுகிறது.

"உம் பக்கம் ஆயிரம்பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது. பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்; உம் கண்ணாலேயே நீர் காண்பீர். ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்; உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்" - 91 சங்கீதம் 7-12 

"அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்" - 91 சங்கீதம் 14-16 

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கர்த்தரை நோக்கி 'உமக்கு சித்தமானால் என்னை இந்த பொல்லாங்கில் இருந்து தப்புவித்தருளும், இருந்தாலும் எனக்காக அல்ல, உம் சித்தம் எதுவோ அதன்படியே ஆகக்கடவது' என்று ஜெபம் செய்தார் என்று பைபிள் கூறுகிறது. இதனையும் 91ஆம் சங்கீதத்தையும் ஒப்பிட்டு இஸ்லாமியர்கள், இயேசு நாதர் கர்த்தரை ஆபத்து நேரத்தில் நோக்கியதால், இயேசு நாதரை இறைவன் சிலுவைப்பாட்டில் இருந்து தப்புவித்து, வேறொரு நபரை இயேசுவின் இடத்தில் அடிக்க செய்தார் என்று கூறுகின்றனர். இதனையே குரானும் கூறுவதால் இயேசு சிலுவையில் அடிபடவில்லை என்று வாதாடுகின்றனர்.

உண்மையே, ஆபத்து நேரத்தில் இறைவனை தேடுவோரை இறைவன் விடுவிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மேசியா முழுவதும் புறக்கணிக்கப்பட்டு, அனைவராலும் கைவிடப்பட்டவராய் பாடுகள் அனுபவிக்கவேண்டும் என்று யூத வேதங்கள் கூறுகின்றன. 91ஆம் சங்கீதம் மேசியாவிற்கு அல்ல. மேசியா பாடுகள் அனுபவிக்கவேண்டும் என்று இயேசு நாதர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னுரைக்கப்பட்ட வசனங்கள் கூறுகின்றன.

"என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன் மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்" - சங்கீதம் 22:1-8 

"அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப் பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப் பண்ணினார்" - ஏசாயா 53:3-6 

"அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்" - ஏசாயா 53:12 

நிறைவேற்றம்:

"மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப் படியே அவரை நிந்தித்தார்கள். ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்" - மத்தேயு 27:42-46

இயேசு சிலுவையில் அடிப்பட்டார். மேசியா அனைவராலும், தேவனாலும் புறக்கணிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு ஒப்புக் கொடுக்க பட வேண்டும் என்பது முன்னுரைக்கப்பட்டது, உண்மையான மேசியாவின் வாழ்வில் நிறைவேறவேண்டியது. அது இயேசுவின் வாழ்வில் நிறைவேறியது.

இப்பொழுது 91ஆம் சங்கீதத்தை ஏசுநாதரின் காலத்தில் அவரது வாழ்வில் இணைத்து அவரை நிந்தித்தது யார் என்று பார்க்கலாம்.

"அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்" - மத்தேயு 4:5-7

பைபிளில் சாத்தானை தவிர 91ஆம் சங்கீதத்தை இயேசுவின் வாழ்விற்கு எடுத்துக்காட்டியது வேறு யாரும் இல்லை. மத்தேயு நற்செய்தி முகமது வருவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. முகமது அவர்கள் தோன்றுவதற்கு முன்பே விளங்கிய மத்தேயு நற்செய்தியின் பிரதிகள் இன்றும் உள்ளன. சாத்தான் ஒருவனே பைபிளில் 91ஆம் சங்கீதத்தை ஏசுவிற்கு ஒப்பிட்டு 'உன்னை இறைவன் காப்பாற்றுவார்' என்றவன்!

ஏசுவிற்கு சிலுவைப்பாடுகள் நேரிடக்கூடாது என்று இயேசுவின் சீடரான பேதுரு விரும்பினார். ஆனால் அதற்கு இயேசு என்ன கூறினார் என்று கீழே காணவும்.

"அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டு போய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக் கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்" - மத்தேயு 16:21-23

தனக்கு சிலுவைப்பாடுகள் நேரிடக்கூடாது என்று விரும்பிய பேதுருவை, ஏசுநாதர் "எனக்கு பின்னாக போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்" என்றார்.

மேசியாவின் பாடுகளால் உலகத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது யூதர்களின் வேதத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடக்கக் கூடாது என்று விரும்பிய அனைவரையும் (இயேசுவின் சீடர் உட்பட) 'சாத்தான்' என்று முகமது அவர்களுக்கு முன்பு எழுதப்பட்ட பைபிள் சித்தரிக்கின்றது.

இயேசு 91ஆம் சங்கீதம் தனக்கு உரியது இல்லை என்பதை கூறி உள்ளார். தானே சிலுவைப்பாடுகளை அனுப்பவிக்க வேண்டும் என்றே ஏசுநாதர் கூறினார்.

"இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்" - மத்தேயு 26:50-54

இயேசு சிலுவையில் அறையப்படவேண்டும், அறையப்பட்டார் என்பது உண்மை. சரித்திரம் இயேசு தான் சிலுவையில் கொலையுண்டார் என்றே கூறுகிறது. ஆதி கால கிறிஸ்தவர்கள் அன்றி, இயேசுவின் சமகால யூதர்களும் ரோமானியர்களும் கூட இயேசு சிலுவையில் கொலையுண்டார் என்றே எழுதி வைத்துள்ளனர். ஏசுநாதரை மக்கள் வழிபடுவதற்கு சிலுவையே காரணமாக இருக்கிறது என்பதை அறிந்தே முகமது 'இயேசு சிலுவையில் அறையப்படவில்லை' என்கிறார். திருக்குரானில் உள்ள மிகப்பெரிய சரித்திர பிழை இது. இயேசு என்ற நபர் சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பது உண்மையானால் 'அவர் சிலுவையில் கொலை செய்யப்பட்டார் என்பது அதை விட உண்மை. குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஓட்டை 'இயேசு சிலுவையில் அறையப்படவில்லை' என்ற சரித்திர பிழையே. உயிர்த்தெலுதலிலும், விண்ணேற்றத்திலும் தான் மக்கள் கிறிஸ்தவர்களை நிந்திக்கின்றனரே அன்றி இயேசு நாதரின் சிலுவை மரணத்தில் அல்ல. ஆனால் இஸ்லாம் சிலுவைப்பாடை அகற்றி விட்டு ஏசுநாதரின் விண்ணேற்றத்தை மட்டும் ஏற்று கொள்கிறது. முகமது இவ்வாறு கூறியதற்கு காரணம் இயேசுவை வழிபட கூடாது என்பதே.

முக்கியமாக, ஏசுவிற்கு 600 ஆண்டுகளுக்கு பின் வந்த முகமது அவர்களால் தனக்கு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஏசுநாதரின் வாழ்வில் சிலுவை மரணம் இல்லை என்று எவ்வாறு கூற முடியும்?

இதற்கு இஸ்லாம், "முகமது தானாய் இந்த செய்தியை கூறவில்லை, அல்லாஹ் 'கபிரியேல்' என்ற தேவதூதனை பூமிக்கு அனுப்பி முகமதிடம், 'இயேசு சிலுவையில் அறையப்படவில்லை' என்று கூறினார், அதன் காரணமாகவே முகமது அவ்வாறு கூறினார்" என்று கூறுகிறது.

முகமது அவர்கள் தோன்றுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பைபிளில் உள்ள காலாத்தியர், கொரிந்தியர் புத்தகங்கள் என்ன கூறுகின்றன?

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன். முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்" - கலாத்தியர் 1:8,9

"எங்களைப் போன்று பணியாற்றுவதாகக் காட்டித் தம் பணியில் பெருமையடைய சிலர் வாய்ப்புத் தேடுகின்றனர். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காதிருக்க நான் இப்போது செய்து வருவதையே தொடர்ந்து செய்வேன். ஏனெனில் இத்தகையோர் போலித் திருத்தூதர்: வஞ்சக வேலையாள்கள்: கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள். இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே ஆகவே அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்" - 2 கொரிந்தியர் 11:12-14

பவுலடியார் இஸ்லாத்திற்கு ஒரு பெரும் தடை. முகமது தோன்றுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர், கள்ளப்போதகர்கள் தோன்றுவார்கள் என்பதை குறித்து திட்டமாய் எழுதி வைத்துள்ளார். மேலும் சாத்தான் தேவதூதன் போல வேடம் தரித்து பொய் கூறுவான், வானத்தில் இருந்து ஒரு தூதன் இறங்கி வேறொரு சுவிசேசத்தை போதித்தால் கூட நம்பவேண்டாம், அந்த தூதன் கூறும் சொற்களை கேட்டு போதிப்பதாக கூறும் போதகர்களையும் நம்பவேண்டாம் என்று முகமது அவர்கள் தோன்றுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துள்ளார். இதன் காரணமாகவே பெரும்பாலான இஸ்லாமியர்கள் பவுலை வெறுக்கின்றனர், பவுலடியாரே அந்திகிறிஸ்து, சாத்தான் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சரி, முகமது அவர்கள் அப்படி ஒரு புதிய மார்கத்தை உருவாக்கி என்ன செய்யப்போகிறார்? அவருக்கு அதில் என்ன லாபம்?

இதற்கு மூன்றே பதில்கள் தான்.

1.அவர் உண்மையைக் கூட கூறியிருக்கலாம் - அவ்வாறு நம்பும் இஸ்லாமியர்களிடம் சில சந்தேகங்களை கேட்டு தான் இந்த பதிவே எழுதப்பட்டிருக்கிறது. மேலுள்ள பதிவை படித்தால் கிறிஸ்தவர்கள் ஏன் முகமது அவர்களை நம்பவில்லை என்பது குறித்து புரியும். 

2. அவர் அப்பாவியான நல்லவராக இருக்க, சாத்தான் தேவதூதன் ரூபம் தரித்து அவரிடம் தோன்றி தவறான போதனைகளை மக்களிடம் கூறுமாறு வஞ்சித்திருக்கலாம். சாத்தானை தேவதூதன் என நம்பி அவர் இஸ்லாத்தை போதித்து இருக்கலாம். இந்த சந்தேகம் குறித்து மேலே விளக்கப்பட்டிருப்பதை காணலாம்.

3. அவர் தன் சொந்த நன்மைக்காக பொய்கள் கூறியிருக்கலாம் - ஒரு மனிதனுக்கு அங்கீகாரமும், பதவியும், வாய்ப்பும் கிடைக்கும் போது தான் அவனது உண்மையான குணம் தெரியும். முகமது அவர்கள் மக்கா நகரில் இருந்தபோது ஏசுவிற்கு நிகராக இருந்தார். 

பெருந்தன்மையான செயல்களும், அன்பும், அமைதியும் அவரிடம் இருந்ததை காணலாம். அன்பால், அறத்தால் இஸ்லாத்தை போதித்து வந்தார். ஆனால் மக்கா நகர மக்கள் அவரை ஏற்று கொள்ளவில்லை. முதன் முதலாக ஒரு சாரார் அவரை இறைதூதராக ஏற்று கொள்கின்றனர். அதனால் அவர் மதீனா நகருக்கு செல்ல விளைகிறது. அங்கே அனேக மக்கள் முஸ்லீம்களாக மாறுகின்றனர். அவருக்கு அவர்களிடம் 'இறைதூதர்' என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. அதன் பிறகு அவரது குணங்கள் முழுவதாக மாறுவதை அவரது சரித்திரத்தை படித்தால் தெரியும். கொலைகள் செய்கிறார், அடிமைகளுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார், வன்முறை போதனைகளை கூற துவங்குகிறார்,

 பல மனைவிகளை கட்டி கொள்கிறார், மகள் முறை வேண்டிய 6 வயது குழந்தையை 50 வயது கொண்ட முகமது அல்லாஹ் பெயரை சொல்லி பெண்கேட்டு மணம் செய்து கொள்கிறார், அந்த குழந்தைக்கு 9 வயது எட்டும் போது அதனுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார், வளர்ப்பு மகனின் மனைவியை அவன் உயிரோடு இருக்கும் போதே அல்லாஹ் பெயரை கூறி தனக்கு மனைவியாக ஆக்கி கொள்கிறார், தவறான போதனைகளை போதிக்கிறார், அல்லாஹ் 'தனக்கு மட்டும் எது வேண்டுமானாலும் செய்துகொள்' என்று அனுமதி அளித்து விட்டதாக கூறுகிறார். ஒரு இறைதூதரின் வாழ்வில் எதெல்லாம் நடக்ககூடாதோ அவை அனைத்தும் முகமது அவர்களின் வாழ்வில் நடக்கின்றன.

ஏசுநாதரின் வாழ்வில் சிலுவைப்பாடுகள் தான் முக்கியம். இயேசுவை இறைவனாக வழிபட சிலுவைபாடுகள் தான் காரணம். இதன் காரணமாகவே இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. இயேசுவை தெய்வமாக போற்ற காரணம் 'இயேசு கிறிஸ்தவத்தின் மைய நபர்' என்ற தவறான கருத்தை இஸ்லாம் கொண்டிருக்கிறது. அது அல்ல, ஏசுநாதரின் சிலுவைப்பாடுகள் தான் காரணம்.


http://ivaryaar.blogspot.in/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum