தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அனுதினமும் ஜெபத்தில் நடத்தும் ஜெபக்குறிப்பு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அனுதினமும் ஜெபத்தில் நடத்தும் ஜெபக்குறிப்பு Empty அனுதினமும் ஜெபத்தில் நடத்தும் ஜெபக்குறிப்பு

Tue Sep 13, 2016 7:57 am
கர்த்தர் என்னை அனுதினமும் ஜெபத்தில் நடத்தும் ஜெபக்குறிப்புகளை நீங்களும் குறைந்தது ஒருமணி நேரமாகிலும் ஜெபத்திலே கர்த்தரோடு தரித்திருக்கும் படியாக தேவ விருப்பத்தை நிறைவேற்றும்படியாக இதோ உங்களுக்காக என் ஜெப அனுபவத்தை பகிறுகிறேன்,.

முதலாவது கர்த்தருக்கு அவரது அதிசய படைப்புகளை நினைத்து கொஞ்ச நேரம் ஸ்தோத்தரியுங்கள் , பின்பு அவரது நாமத்தை உயர்த்தி கொஞ்ச நேரம் ஸ்தோத்தரியுங்கள், அவர் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் செய்து வருகிற நன்மைகளை எண்ணி மற்றும் உங்களைப் பாதுகாத்து வருகிற கிருபைகளுக்காகவும் நன்றி செலுத்துங்கள், ஆவியானவருக்கு உங்கள் ஆவி ஆத்துமா சரிரம் முழுவதையும் பரிசுத்த ஜீவ பலியாக அர்ப்பணித்து ஆராதனை செலுத்துங்கள்..

அதன் பின்பு ஆவியானவர் உங்களை வாக்குக்கடங்கா பெரு மூச்சோடு ஜெபிக்க வைப்பதை நீங்களே உணருவீர்கள். ஒரு மணி நேரமல்ல பல மணி நேரம் அவர் சமுகத்தில் தரித்திருப்பதை  வாஞ்சிப்பீர்கள். அவர் பிரசன்னம் அப்படியே உங்களை மூடுவதாக, தேசத்தின் மக்களின் பாதுகாப்புக்காக ஜெபிக்க உங்களை தேவன் எதிர்பார்க்கிறார். திறப்பிலே நிற்கும் உங்கள் மேல் முத்திரைப் போடுகிறார், அவர் வருகையில் களிகூரச் செய்வார்.ஆமென்….




  •   ஒவ்வொரு தேசத்திற்காக (For Each National)
  •   ஒவ்வொரு மாநிலத்திற்காக (For Each State)
  •   ஒவ்வொரு மாநகராட்சிக்காக (For Each City)
  •   ஒவ்வொரு மாவட்டத்திற்காக (For Each District)
  •   ஒவ்வொரு வட்டத்திற்காக (For Each Taluk)
  •   ஒவ்வொரு கிராமத்திற்காக (For Each Village)
  •   ஒவ்வொரு ஊருக்காக (For Each          )
  •   ஒவ்வொரு தெருக்காக (For Each Street)



இவைகள் ஒவ்வொன்றிற்கும் அரசியல் தலைவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்காகவும் அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப்  பயந்து தங்களை நம்பி வாழ்கின்ற மக்களுக்கு சகல நன்மைகளையும் பகிர்ந்து கொடுக்கிறவர்களாகவும் நீதி, நேர்மை, நியாயம், உண்மை , தூய்மை, எளிமை, மனத்தாழ்மை , குற்றமற்ற அன்பு, மன்னிக்கும் தன்மை, தங்களைப் போல பிறரை நேசிக்கும் மனப்பக்குவம்  உள்ளவர்களாய் செயல்பட தினமும் ஜெபிப்போம்.எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (I தீமோத்தேயு 1:1-4)


ஒவ்வொரு குடும்பத்திற்காகவும்

குழந்தைகள்
சிறுவர்கள்
இளைஞர்கள்
வாலிப சகோதர சகோதரிகள்
வயதான முதியோர்கள் அனைவருக்காகவும்


1. பிள்ளைகள் பெற்றோரை கணம் செய்து எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படியவும். (எபேசியர் 6:1-3)

2. பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாமல் கிறிஸ்துவுக்கு ஏற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்க்கவும். (எபேசியர் 6:4)

3.வேலைக்காரர் வேலைக்காரிகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கள்ளம் கபடற்ற மனதோடும் கீழ்படிய வேண்டும். (எபேசியர் 6:5)

4.அதிகாரிகளையுடையவர்கள் தங்களுக்கு மேல் கர்த்தர் கொடுத்திருக்கும் அதிகாரிகளுக்கு எல்லாவற்றிலும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கள்ளம் கபடற்ற மனதோடும் கீழ்படிய வேண்டும். (எபேசியர் 6:5, I பேதுரு 2:18, கொலோசெயர் 3:22)

 5. எஜமான்களாக, அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்களை நம்பி தங்களிடம்  பணிபுரிவோருக்கு சகல நன்மைகளையும் பகிர்ந்தளிப்போராய் இருக்கவேண்டும் .(எபேசியர் 6:9, கொலோசெயர் 4:1)

6. மாமனார் மாமியாரை உடையவர்கள் அவர்களைத் தங்கள் தாய் தகப்பனைப் போல நேசித்து வாழ வேண்டும்.

7. மருமகன் மருமகளை உடையவர்களும் அவர்களைத் தங்கள் சொந்த குமாரர் குமாரத்திகளைப் போல நேசித்து வாழ வேண்டும்.

8. திருமண வயதுவந்தும் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை கிடைக்கவில்லையே என்று வாடுகிற பெற்றோரைக் கர்த்தர்  சந்தித்து அவர்களுக்கு மனம் இறங்கும் படியாகவும் அவர்கள் தேவைகளைக் கர்த்தர் சந்திக்கும் படியாகவும் ஜெபிப்போம்.

9. திருமணம் முடிந்து பல வருடங்கள் கடந்தும் குழ்ந்தை இல்லையே என்று வாடும் குடும்பத்தினரைக் கர்த்தர் சந்தித்து அவர்களுக்குக் கர்ப்பத்தின் கனியை கொடுக்கவும், கர்த்தருடைய இரக்கம் அவர்களுக்குக் கிடைக்கும் படியாகவும் ஜெபிப்போம். (சங்கீதம் 127:4)

10. ஏழைகள், திக்கற்ற பிள்ளைகள், அனாதைகளா இருப்பவர்கள், பெற்றோரால், பிள்ளைகளால், கணவனால், தாங்கள் நம்பி இருந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் இவர்களுக்கு ஆறுதலோடு கூட இவர்களை தன்னலமற்ற அன்போடு கூட ஆதரிக்கிறவர்கள் பெருகும்படியாகவும், என்றென்றும் மாறாத கர்த்தர் அவர்களை சந்திக்கும்படியும் ஜெபிப்போம். (சங்கீதம் 10:12, சங்கீதம் 12:5)

11. தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்க்காகவோ, திருமனத்திற்க்காகவோ, தொழிலுக்காகவோ, குடும்பத்திலுள்ள நபரின் மருத்துவ செலவுகளுக்காகவோ, வீடு கட்டுவதற்க்காகவோ, நிலம் வாங்குவதற்காகவோ ஏற்பட்ட கடன் சுமை தாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கும் நபர்களை கர்த்தர் சந்தித்து அவர்களை ஆசிர்வதிக்கும் படியாக நாம் ஜெபிப்போம்.

12. தங்களை நேசித்தவர்களையும், தங்களால் நேசிக்கப்பட்டவர்களையும் இழந்து வாடும் குடும்பங்களுக்காக அவர்களின் ஆறுதலுக்காக, கர்த்தரின் ஈடு இணையற்ற அன்பு அவர்களை சந்திக்கும் படியாக ஜெபிப்போம். (சங்கீதம் 94:19, ஏசாயா 51:12, ஏசாயா 57:18)

13. தங்களை நேசித்தவர்களையும், தங்களால் நேசிக்கப்பட்டவர்களையும் (கணவன்-மனைவி, பிள்ளைகள்-பெற்றோர்,..) பிரிந்து வாடும் குடும்பங்களுக்காக அவர்கள் ஓன்று சேர்ந்து வாழ்ந்தி கர்த்தர் கிருபை செய்யும்படி நாம் ஜெபிப்போம்.

14. அன்றாட உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் தவிக்கும் மக்களின் தேவைகளை கர்த்தர் அவர்களை சந்தித்து கொடுக்கும்படியாக ஜெபிப்போம். (லூக்கா 11:3, அப்போஸ்தலர் 14:17)

15. மருத்துவமனையிலும், வீட்டிலும் வியாதியின் நிமித்தம் வேதனையோடு இருக்கிற மக்களை கர்த்தர் சந்தித்து அவர்களை குனமாகும்படியாக, அவர்கள் வேதனை முற்றிலும் நீங்கும்படியாக நாம் ஜெபிப்போம். (ஏசாயா 33:24, மத்தேயு 9:35)

16. ஒவ்வொரு நாளும் (தரைவழி, கடல்வழி, விண்வெளி) பிரயாணத்தில் ஈடுபடும் மக்களை கர்த்தர் கிருபையாய் சந்தித்து பாதுகாக்கும்படியாக நாம் ஜெபிப்போம்.

17. மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், கப்பல்துறை, விமானத்துறை, போக்குவரத்துத் துறை, தொலைபேசி,அலைபேசி நிலையங்கள், பெட்ரோலியத்துறை, மின்சாரத்துறை, கால்நடை மருத்துவத்துறை, காவல் துறை, இன்னும் பலவிதமான அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்க்கும், பயிற்சி எடுக்கும், ஒவ்வொரு விதமான படிப்பில் ஈடுப்பட்டிருக்கும் மற்றும்  ஒவ்வொரு விதமான தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் அனைவரையும் கர்த்தர் சந்திக்கும் படியாகவும், அவர்கள அனைவரும் உண்மை உள்ளவர்களாகவும், நீதி, நேர்மை, இரக்கம், தயவு உள்ளவர்களாகவும் வாழ்ந்திட நாம் ஜெபிப்போம்.

18. படிக்க ஆசை இருந்தும் படிப்பதற்கு பண வசதி இல்லாமலோ, இல்லை அதற்கேற்ற தெளிவு இல்லாமலோ வாடுகிற ஒவ்வொருவரையும் கர்த்தர் சந்தித்து அவர்கள் குறைவுகளை மாற்றி அவர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் மகிழ்விக்கும் படியாக நாம் ஜெபிப்போம்.

19.இடி, மின்னல், மேகம், மழை, காற்று, வெயில், குளிர், நிலநடுக்கம், நிலச்சரிவு, நில அதிர்வு, பனிச்சரிவு, கற்குவியலின் சரிவு, மரக்கட்டைகளின் சரிவு, மரம் முறிந்து விழுகுதல் இவைகளினாலோ,   கடல், குளம், குட்டை, ஆறு, வாய்க்கால், ஓடை, கிணறு, போர்குழாய் இவைகளினாலோ, கெமிக்கல், அசிட் இவைகளினாலோ, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்,விசவாயு, எரிவாயு, தீ இவைகளினாலோ, உணவு, உடைகள்,  உடல் நல மருந்துகள் இவைகளினாலோ, கூர்மையான எந்தவொரு பொருட்களினாலோ, எந்தவொரு இயந்திரங்கள் சம்பந்தமான பொருட்களினாலோ, மின்சாரத்தினாலோ, மின்சாரம் சம்பந்தமான எந்தவொரு பொருட்களினாலோ, மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல் கர்த்தர் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு அருளும் படியாக நாம் ஜெபிப்போம்.

20. வயதான பெற்றோரை மற்றும் தங்களிடம் தங்கி வாழும் வயதானவர்களை  மனதார நேசித்து அவர்களை பிள்ளைகள் நன்றாக கவனிக்க வேண்டும் அதற்காக நாம் ஜெபிப்போம்.

21. பாவங்களிலும், சாபங்களிலும், வியாதிகளிலும், பெலவீனங்களிலும் கட்டப்பட்டு மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் சந்தித்து அவர்களை  அவைகளினின்று விடுவித்து பரலோக ராஜ்யத்தின் பிள்ளைகளாய் நித்திய ஜீவனுக்கு சொந்தமுள்ளவர்களாய் மாற்றும் படி நாம்  அவர்களுக்காக ஜெபிப்போம்.

22. போதை வஸ்துக்களான பீடி,சிகரெட்,தம்பாக்கு,பான்பராக்கு,புகையிலை,கள்ளச்சாராயம், பட்டச்சாராயம்,பீர்,பிராந்தி,ஒயின்,போதை ஊசி, போதை மருந்து இவைகளினால் அடிமைப்பட்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரையும் கர்த்தர் சந்தித்து அவர்களுக்கு மறுவாழ்வு அருளிச் செய்யும் படி நாம் ஜெபிப்போம்.

23. விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், ஏவல்கள், செய்வினைகள், மந்திரங்கள், பூ போட்டு பார்க்குதல், (ஜாதகம்,ஜோசியம்,குறி, நாள் நட்சத்திரம் – பார்க்குதல்,சொல்லுதல்) இவைகளை நம்பி பரிசுத்த தேவன் தரும் பரம ராஜ்ஜியத்தை இழக்கப் போகிறவர்கள் மனம் திரும்பும்படி கர்த்தர் அவர்களை சந்திக்க நாம் ஜெபிப்போம்.(வெளி 21:8, I தெசலோனிக்கேயர் 1:9)

24. கர்த்தருடைய அப்போஸ்தலர்கள், தீர்க்கத்தரிசிகள், மேய்ப்பர்கள், சுவிஷேசகர்கள், போதகர்கள், மிஷனெரிகள், விசுவாசப்பிள்ளைகள் அனைவரையும் கர்த்தர் அவர்களை அழைத்த அழைப்பிற்கு நேராக நடத்தும் படியாகவும், தேவச் சித்தம் இன்னதென்று அறிந்து அவற்றில் முழு மூச்சோடு ஆசையாக பின் தொடருகிறவர்களாகவும், கரை திரை அற்றப் பிள்ளைகளாக எதைச் செய்தாலும் கர்த்தரின் நாமத்திற்கு மகிமையை சேர்க்கும்படி வாழவும் கர்த்தர் கிருபையாக நம்மை நடத்தும் படியாகவும் ஜெபிப்போம்.

25. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எப்பொழுதும் எல்லாருக்காகவும் எல்லாவித வேண்டுதலோடும் ஸ்தோத்திரத்தோடே  ஜெபிக்கிறவர்களாகவும், ஆவியின் கனிகளால் நிரம்பி சகல நற்கிரியைகளையும் செய்கிறவர்களாகவும் இருக்க நாம் ஜெபிப்போம். (I தீமோத்தேயு 1:1-4, தீத்து 2:14,3:14)

26. பிசாசு பிடித்தவர்களை விடுவிக்கவும், வியாதியஸ்தர்களை குணமாக்கவும், குருடர்கள் பார்வை அடையவும், முடவர்கள் சப்பாணிகள் எழும்பி நடக்கவும், ஊமையர்கள் பேசவும், செவிடர்கள் கேட்கவும், ஊனர்கள் சொஸ்தமாகவும், மரித்தோர் எழும்பி நடக்கவும் கர்த்தருடைய வல்லமை வெளியரங்கமாய் அவருடையப் பிள்ளைகளாகிய நம் மூலமாக செயல்படவும், பரலோகத்தின் பிள்ளைகளாய் அநேகர் தெரிந்துகொள்ளப்படவும் அவர் நாமம் இந்த பூமியில் பெருகவும் நாம் ஜெபிப்போம்.(மத்தேயு 10:1,Cool

27. அவருடையப் பிள்ளைகளாகிய நாம் வார்த்தையிலும், நடக்கையிலும், பேச்சிலும், ஆவியிலும், கற்பிலும், அன்பிலும், விசுவாசத்திலும் சாட்சியாக வாழ்ந்திட கர்த்தர் கிருபை செய்யும்படி நாம் ஜெபிப்போம். (I தீமோத்தேயு 4:12)

29. தேவனுடையப் பிள்ளைகளும், ஊழியர்களும் சபை பாகுபாடின்றி, ஊழியப் பாகுபாடின்றி ஒற்றுமையாய் கள்ளம் கபடின்றி ஆத்துமா பாரம் உள்ளவர்களாய் தேவ சித்தம் நிறைவேற செயல்பட நாம் ஜெபிப்போம்.

30. பண சம்பாத்தியத்திற்காகவோ, தங்கள் சுய மகிமைக்காகவோ, தன் பெயர் பிரஸ்தாபத்துக்க்காகவோ ஊழியம் செய்கிறவர்களும், மக்களை கர்த்தரை நம்பி வாழவைப்பதற்க்கு பதிலாக தங்களிடம் ஆத்துமாக்களை திசைதிருப்பி தங்களையும் தங்கள் ஊழியத்தையும் நம்பச் செய்கிறவர்கள் மனந்திரும்ப நாம் ஜெபிப்போம்.

31. கிறிஸ்தவர்கள் என்று மதத்தின் ரீதியாக வாழ்பவர்கள் உண்மையான கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்களாக வாழ்ந்திட நாம் ஜெபிப்போம்.

32. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேதத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்வினை கொண்டுச் செல்ல நாம் ஜெபிப்போம்.

33. ஜாதி, மத, இன, படிப்பு, வசதி, நிறம்,அழகு,  வேறுபாடு இல்லாதவர்களாய் தேவனுடையப் பிள்ளைகளும், ஊழியர்களும் வாழ்ந்திட நாம் ஜெபிப்போம்.

34. தேவனுடையப் பிள்ளைகள் ஆவியில் எளிமை, இருதயத்தில் தூய்மை, நீதியில் பசி, ஆவியின் கனி, நற்கிரியை, தெளிந்த புத்தி, ஒருவரும் எதிர் பேசவும் எதிர் நிற்கவும் கூடாத வாக்கு ஞானம், தேவ கிருபை, மனுஷரின் தயவு, உன்னதங்களிலுள்ள ஆவிக்குரிய சகல ஆசிர்வாதம், ஆவிக்குரிய வரங்கள் நிறைந்து வாழ்ந்திட தேவன் கிருபைச் செய்ய நாம் ஜெபிப்போம்.

35. தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு தம்முடைய வார்த்தையை கொடுக்கும்படியகவும்,தேவ வசனம் செல்லும்படியான வாசல் திறக்கப்படவும், ஒருவரும் எதிர் பேசவும் எதிர் நிற்கவும் கூடாத வாக்கு ஞானம் கொடுக்கப்படவும், சாந்தமுள்ளவர்களாய் உபதேசிக்கவும், எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கவும், உன்னதங்களிலுள்ள ஆவிக்குரிய சகல ஆசிர்வாதத்தால் நிறைந்திருக்கவும், ஆவிக்குரிய வரங்களால் நிறைந்திருக்கவும், கிருபையுள்ள, உப்பால் சாரமேற்றப்பட்ட வசனம் வெளிப்படவும், அதிகாரமுள்ள வசனம் வெளிப்படவும் நாம் ஜெபிப்போம்.



36. அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்:


பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். எபேசியர் 4:27


தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.யாக்கோபு 4:7

வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். மாற்கு 3:15
பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். I யோவான் 3:8

பரிசுத்த வேதாகமத்தில் அடிப்படையில் கிழே குறிப்பிட்டுள்ள பிசாசினுடைய கிரியைகளும், சாத்தானின் தந்திரங்களும், மனுஷிக சுயக் கிரியைகளும், கர்த்தருடைய நாமத்தில் அழியும்படி கட்டளையிடுங்கள். கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். கர்த்தருடையப் பிரசன்னமும், ஆளுகையும்  பூமியை மூடுவதாக, ஆமென்


எல்லாவித கோபங்கள், எரிச்சல்கள்,சூது, பொறாமை,துர்க்குணங்கள், துர்ச் சிந்தனைகள், துர்யோசனைகள், அகந்தைகள், மதியீனங்கள், மதிகேடுகள், வாக்குவாதங்கள், தர்க்கங்கள், பொய்கள், களவுகள், விபச்சாரங்கள், வேசித்தனங்கள், ஆண்புணர்ச்சி, சுயப்புணர்ச்சி, சிற்றின்பங்கள், மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்,  தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம்,செய்வினை,மந்திரம்,பூபோட்டு பார்க்குதல், நாள் நட்சத்திரம் பார்க்குதல், ஜாதகம் பார்க்குதல், ஜாதகம் சொல்லுதல், ஜோசியம் பார்க்குதல், ஜோசியம் சொல்லுதல், கைரேகைப் பார்க்குதல், கைரேகைச் சொல்லுதல், போதை வஸ்துக்களான பீடி, சிகரெட், கள்ளச் சாராயம், பட்டச் சாராயம், பீர், பிராந்தி, போதை ஊசி,சகலவித அநியாயம், துரோகம், பொருளாசை, பண ஆசை, பெண்ணாசை, மண்ணாசை, குரோதம், கொலை வெறி, தற்கொலை, வஞ்சகம், வன்மம்,புறங்கூறுதல், கோள்சொல்லுதல், பிறரை நிந்தித்து பேசுதல், பிறரை துக்கபடுத்தி பேசுதல், பிறரை அவமானபடுத்தி பேசுதல், பிறருடைய மனது காயப்படும்படி பேசுதல்,நடக்குதல், செயல்படுதல், அவதூறு பண்ணுதல், தேவபகை, துராகிருதம்பண்ணுதல், வீம்பு, பொல்லாதவைகளை யோசித்துப்பிணைத்தல், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவைள், உணர்வில்லாத, உடன்படிக்கைகளை மீறுதல், சுபாவ அன்பில்லாதது, தேவனுக்கு இணங்காதது, இரக்கமில்லாதது,

ஜாதிவெறி, மதவெறி, நிறவெறி, மார்க்கபெதகங்கள், களியாட்டுகள், சமயவெறி, மொழிவெறி, தேசியவெறி, மாநில,மாநகராட்சி,மாவட்ட,வட்ட,கிராம,ஊர், தெரு,குடும்ப வெறிகள், பிறருக்குரிய யாதொருவரையும், பிறருக்குரிய எந்தவொருப் பொருளையும் இச்சித்தல், 

தரை,கடல்,விண்வெளிப் பிரயாணங்களில் விபத்துக்கள், வேலை,குடும்ப ஸ்தலங்களில் விபத்துக்கள், ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்து ஏமாற்றுகிற சாத்தானின்  தந்திரங்கள், வஞ்சகங்கள், கள்ளத்தீர்க்கதரிசனங்கள்,மனுஷிக நயவசனிப்புகள், மரணத்தை குறித்த பயங்கள்,எதிர்காலம் குறித்த பயங்கள், வியாதியைக் குறித்த பயங்கள், பிசாசைக் குறித்த பயங்கள், படிப்பு,வேலை,தொழில் குறித்த பயங்கள். கவலைகள், கஷ்டங்கள், கடன்பாரங்கள், வியாதிகள், சாபங்கள்.

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. மத்தேயு 12:28
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. ஏசாயா 6:3

http://heavenlyfather.in/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum