எள்ளு உருண்டை
Mon Sep 12, 2016 8:28 am
எள்ளு உருண்டை
தேவையானப்பொருட்கள்:
எள் - 1 கப்
சர்க்கரை பொடித்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு, நன்றாக வெடித்து பொரியும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும்.
ஆறியபின் மிக்ஸியில் போட்டு 2 அல்லது 3 சுற்றுகள் வரை அரைக்கவும்.
அத்துடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் ஓட விடவும்.
கடைசியில் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து 1 அல்லது 2 சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.
சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டைகளாக பிடிக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|