தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த Empty உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த

on Mon Aug 08, 2016 6:22 pm
முடி:

 முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.


கண்: 

கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க பெள்ளரிக்காய் யூசை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்..


உதடு: 

உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர்,பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரினால் கழுவி விடவும்.

முகம்: 

உருளைக்கிழங்கை துவைத்துச் சாறுபிழிந்து சமமாகத் தேன் கலந்து முகத்தில் பூசிவர முகம் அழகு பெறும்.

முகச் சுருக்கம் நீங்க: 

முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள் சொறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.

கருமை நீங்க:

கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசிவர முகம் மலரும்.

முகத்தின் எண்ணெப் பசை நீங்க: 

முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூண், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

கரும்புள்ளி மறைய:

 முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய ஜாதிக்காயை அரைத்து பூசவும்.  


முகப்பரு நீங்க: 

பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் முகப் பருக்கள் மறையும்.

முக வறட்சி நீங்க: 

பச்சை கொத்தமல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.

வாய் நாற்றம் நீங்க:

 புதினா கீரையைக் காய வைது பொடிசெய்து பல்துலக்குவதால் வாய் நாற்றம் நீங்குவதுடன் பற்களும் பளிச்சென்று இருக்கும்.

வெண்மையான பற்கள்: 

இரவு நேரத்தில் பச்சை கெரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன் வெண்மை பெறும்.

உதடு:

 உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் மினுமினுப்பாக இருக்கும்.

கை: 

பாத்திரம் தேய்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து நசித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாக இருக்கும்.

நகம்: 

நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களுக்கு பூசி விடவும்.

மார்பகங்களைப் பாதுகாக்க: 

வெள்ளைக் குண்டுமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக் அரைத்து மார்பகங்களில் மீது பூசிவர தளர்ந்த மார்பகங்கள் சரியான வடிவம் பெறும்.


உடல் பருமன் குறைய: 

பப்பாளிக் காயை பொரியலோ, குழம்பு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

பாதம்: 

பாதத்தில் உள்ள (பித்த வெடிப்பு) வெடிப்பு நீங்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை, ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சம் சாறு மூன்றையும் கலந்து வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் வைத்து ஊறிய பின் பூசிவர வெடிப்பு நீங்கும்.


வியர்வை நாற்ற அகல: 

ஆவரசம்பூவை நிழலில் உலர்த்தி சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குழித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

கூந்தல் அடர்த்தியாக வளர: 

செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 

கூந்தல் நல்ல கருமையாக: 

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான 
நிறத்துடன் வளரும்.

முடி வளர: 

கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சை கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.


பேன் தொல்லை நீங்க:

 வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற விட வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

பொடுகு நீங்க: 

வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

தலைமுடி பளபளப்பாக: 

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் (சக்கை) தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். 

முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க: 

கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். அதன் பின் காய்ந்ததும் கழுவவும். 

முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்ற: 

தோடம்பழச் சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்


முகத்தில் வியற்குரு, கொப்பளங்கள் மறைய: 

பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்

பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க:

 எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்த கலவையால் பல் துலக்குங்கள்.

இமைமயிர் வளரவும் செழிப்பாக தோற்றமளிக்கவும்: 

தினமும் படுக்கைக்கு போகுமுன் ஆமணக்கம் எண்ணையை பூசி தேய்த்து விடுங்கள். 

காது அல்லது மூக்கு துளைகளில் புண் மாற: 

தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால்; பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க: 

முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும். 

தோல் சொர சொரப்பு நீங்க: 

சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும். 

தோல் சுருக்கம் நீங்க:

 தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். 

நகம் வெட்டும்போது: 

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். 

எடை குறைய: 

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும். 


தேவையிலாத முடிகளை நீக்க: 

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். 

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற,

 முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். 

முகம் பளபளப்பாக: 

தோடம்பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் கம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். 

தோல் பளபளப்பாக: 

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். 

முகம் பளபளப்பாக: 

முகம் பளபளப்பாக முட்டை வெள்ளை கரு கொஞ்சம் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் சென்ற பின் கழுவினால் முகம் இயற்கை பளபளப்புடன் இருக்கும் 

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற: 

கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். 

சருமம் நிறம் மாற: 

கேரட்ஆரஞ்சு சாறுடன் சிறிது பால் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் நிறம் மாறும்

தலை முடி செழித்து வளர: 

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும் 

முகம் எப்போதும் இளமையுடன் இருக்க: 

கனிந்த பப்பாளி பழத்தை தோலுடன் அரைத்து முகத்தில் பூசிவந்தால் சுருக்கமும் தொய்வும் இன்றி முகம் எப்போதும் இளமையுடன் இருக்கும் 

சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறைய: 

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்

கண்கள் பிரகாசமாக இருக்க: 

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்

கருவளையம் நீங்க: 

ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்

கருமை நிறம் மாற‌: 

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

முகம் மிருதுவாக‌:

 கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

வியர்வை நாற்றம் போக:

 வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.  இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும். 

இன்னுமொரு குறிப்பு : 

2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும். 

உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருந்தால்: தினமும் குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10நிமிடம் வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும்.
செலவே இல்லாமல் உங்கள் முகமும் பளிச் என ஆகிவிடும். கல் உப்பு ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து உடம்பில் ஸ்கிரப் செய்யலாம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த Empty Re: உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த

on Mon Aug 08, 2016 6:22 pm
உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.

- கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

- முகத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமானால், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

- பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.

-கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளியுங்கள். இவ்வாறு செய்தால் தோலுக்கு நல்ல நிறமும் தோற்றமும் கிடைக்கும்.

- கற்கண்டு, தேன், கரட் சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும்.

- தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயை இமையில் தேய்த்தால் இமை நன்றாக வளரும்.

- முகத்தில் பால் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடு நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்.

- தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த Empty Re: உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த

on Wed Aug 10, 2016 7:59 am
காலணிகளையும் கவனிங்க!


உயரத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் காலம் இது. குறைந்தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். உயரக் குறைவுப் பிரச்னைக்கான அழகியல் தீர்வாக முதலில் ஹீல்ஸ் செருப்புகள் அறிமுகமாயின. இவற்றால் ஏற்படும் 'பின்’ விளைவுகள் குறித்து இப்போதுதான் விழிப்பு உணர்வு ஏற்படத் தொடங்கி இருக்கிறது. 

பெண்கள் தங்களை உயரமாகக் காட்ட ஹீல்ஸ் அணிய வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஹீல்ஸ் உள்ள செருப்புகளின் உயரம், அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து என்று பல காரணிகளின் அளவைத் தீர்மானிக்கிறது. அழகாகக் காட்டுவதற்காக, அதிக உயரம் உள்ள ஹீல்ஸ் செருப்பை அணிவதால், உடல்நலம் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகும், பாதத்துக்குப் பங்கம் விளைவிக்காத செருப்பு எது என்பன பற்றி, பாத வல்லுனர் டாக்டர் டி.வி.ராஜா விரிவாகச் சொல்கிறார்.

''முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் காலுக்குக் கொடுப்பது இல்லை. தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் நாம் ஒரு முறையாவது, பூமி மேல் அழுந்திப் பதியும் பாதத்தைப் பார்க்கிறோமா? அதேபோல், செருப்புகளை உங்கள் கண்கள் தேர்வு செய்யக் கூடாது. காலணிக்காக உங்கள் கால்கள் இல்லை; உங்கள் கால்களுக்காகத்தான் காலணி. எனவே உங்கள் கால்தான் அதற்கேற்ற செருப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்று காலுக்குப் பொருந்தாத செருப்பை வாங்கக் கூடாது' என்று அறிவுரை தந்த மருத்துவர், காலுக்கு உகந்த செருப்பைத் தேர்வு செய்வது பற்றிக் கூறினார்.''இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். திருமணம், பார்ட்டி போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது ஹீல் உயரம் ஒன்றரை இன்சுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அணிந்தால் காலுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

பெரிய ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நின்று பணிபுரிபவர்களை 'புரஃபஷனல் ஹசார்ட்’ (Professional Hazard) பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் என்பார்கள். இவர்களுக்குக் கால் பெருவிரலில் வீக்கம் (Bunion) ஏற்படும். ஒருகட்டத்தில் காலின் வடிவமே மாறிவிடும். அதிக நேரம் நின்று பணிபுரிபவர்கள், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிவது நல்லது. இல்லை எனில் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

நடிகைகள், மாடல்கள் உயரத்தைக் கூட்டுவதற்காக பாயின்டட், பென்சில் ஹீல்ஸ்களை அணிகின்றனர். ஆனால், தற்போது, பத்து வயது நிரம்பும் பெண் குழந்தைகள்கூட ஹீல்ஸ் போடுகிறார்கள். பாயின்டட் ஹீல்ஸ் மற்றும் பென்சில் ஹீல்ஸைத் தொடர்ந்து அணியும்போது, உடல் எடையைத் தாங்கி நிற்கும் பாதத்திலும், குதிகாலிலும் வலி ஏற்படும். இடுப்பு மற்றும் பின்பக்கத்தில் சதை போடும். ஸ்டூல் போன்று செருப்புகள் வந்துவிட்டன. பக்கிள்ஸ் வைத்த ஸ்டூல் செருப்பு பாதுகாப்பானதோடு, உயரமாகவும் காட்டும்.ஹீல்ஸ் இல்லாமல் முழுவதும் தட்டையாக உள்ள செருப்புகளை இளம் வயதினர் அணியலாம். பாதிப்பு இருக்காது. ஆனால், வயது ஏற ஏற இதுபோன்ற செருப்பு அணிவதைத் தவிர்க்க வேண்டும். நம் காலின் வளைவிற்கு ஏற்ற செருப்பையே அணியவேண்டும்.

நம் சீதோஷண நிலைக்கு ரப்பர் செருப்புதான் பெஸ்ட். ரப்பர் செருப்பில் காற்று புகக் கூடியது (Breathable),  காற்று புகாதது (Non-breathable)  என இரண்டு வகைகள் உண்டு.  இதில் காற்று புகக்கூடிய செருப்புதான் மிகவும் நல்லது. இந்த வகைச் செருப்பில் காற்று, காலின் அடிப்பாதம் வரை செல்லும்.  முன்பு தயாரிக்கப்பட்ட செருப்பின் அடிப்பகுதி மட்டும் பி.வி.சி (PVC)-யில் இருந்தது. ஆனால், தற்போது சில செருப்புகளில் மேல்பகுதியிலும் பி.வி.சி-தான் இருக்கிறது.  இந்த வகைச் செருப்புகளை அறவே தவிர்க்கவும். சிலருக்குத் தோல் செருப்பு சௌகரியமாக இருக்கும். ஆனால், அதையே தொடர்ந்து அணியவும் கூடாது. பாதம் காற்றோட்டம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகும்.

சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் ஷூ, செருப்பு அணிவதற்கு முன்பு காட்டன் சாக்ஸ் அணியலாம். வியர்வையைக் காட்டன் உறிந்துகொள்ளும். காட்டன் அடுக்கு ஒன்று சேர்த்தே செருப்புகள் விற்கின்றனர். அது உங்கள் காலுக்குப் பொருந்தினால் வாங்கலாம்.

அதிக எடை உள்ள செருப்பை அணிந்தால், கால் வலி, காய்ப்பு வரும். அதிக எடை இல்லாத செருப்பை அணியுங்கள். வேலைக்குத் தகுந்த மாதிரியான செருப்பை அணிவது நல்லது.'' என விளக்கமாகச் சொன்ன மருத்துவர் கால்களின் பாதுகாப்புக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய டிப்ஸ் ஒன்றையும் குறிப்பிட்டார்.

''இரவு படுக்கைக்குப் போகும் முன், பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள்.''

- வ.விஷ்ணு,
Sponsored content

உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த Empty Re: உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum