தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
வருமான வரி சேமிக்க சூப்பர் திட்டங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வருமான வரி சேமிக்க சூப்பர் திட்டங்கள் Empty வருமான வரி சேமிக்க சூப்பர் திட்டங்கள்

on Sat Jul 30, 2016 1:34 pm
‘‘மாதச் சம்பளக்காரர்களில் பெரும்பாலோர், கடைசி மூன்று மாதத்துலதான் வருமான வரிச் சேமிப்பு பற்றியே யோசிக்கிறார்கள்’’ என்கிறார்கள் முன்னணி ஆடிட்டர்கள். 

உண்மைதான். லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களும் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களும் ஜனவரி முதல் மார்ச் வரையில் பிஸியாக இருப்பதை வைத்தே அந்த முடிவை எடுத்துவிடலாம். 

நடப்பு 2011- 12 ம் நிதி ஆண்டில் வருமான வரியை மிச்சப்படுத்த பல வழிகள் இருக்கின்றன. 

வரி மிச்சம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது 80 சி பிரிவுதான். தற்போதைய நிலவரப்படி இப்பிரிவில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும்.

80 சி பிரிவு  முதலீடுகள்

*  பணியார் பிராவிடன்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்)

தனியார் நிறுவனங்களில் பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12 சதவிகிதம் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. இந்த தொகை மற்றும் அதன் மூலமான வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. தற்போதைய நிலையில் 9.5% ஆண்டுக்கு வட்டி கொடுக்கப்படுகிறது. 
ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு வட்டி கிடைப்பதால், விரும்ப திட்டத்தின் கீழ் கூடுதலாக 12 சதவிகித முதலீட்டை மேற்கொண்டு வரலாம். 
முற்றிலும் பாதுகாப்பான முதலீடு. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது.

*  பொது பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)

இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். ஓராண்டில் அதிகப்பட்சம் ரூ. 1,00,000 வரையிலான முதலீட்டுக்குதான் வரிச் சலுகை கிடைக்கும். இதுவும் முற்றிலும் பாதுகாப்பான முதலீடு
முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் என்பதும் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட வட்டி (8.6%தான்) குறைவு என்பதும் பாதகமான அம்சமாக இருக்கின்றன. அதே நேரத்தில், நிரந்தரப் பணியில் இல்லாதவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு ஓய்வு காலத்துக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்று. 

*  ஃபிக்ஸட் டெபாசிட்

ஐந்தாண்டு லாக் இன் பிரீயட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். வட்டி 9.25 t0 9.5% மூத்த குடிமக்களுக்கு 0.25&0.5% கூடுதல் வட்டி.
குறைந்த லாக் இன் பிரீயட் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அதே நேரத்தில், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது பாதக அம்சம். மூத்தக் குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஏற்றதாக இந்த முதலீடு இருக்கிறது.

*  பணப் பலன் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்

எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கு கட்டப்படும் பிரீமியம் மற்றும் ஆதாயத்துக்கு வரி இல்லை. எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியத்தின் ஒரு பகுதி, இன்ஷூரன்ஸ் கவரேஜ்க்கும் எடுத்துக் கொள்ளப்படுவதால் மொத்தத்தில் சுமார் 5- 6% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம். 

யூலிப் பாலிசிகளை பொருத்த வரையில், 2010 செப்டம்பருக்கு பிறகு ஐ.ஆர்.டி.ஏ பல அதிரடி மாற்றங்களை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக மேற்கொண்டிருக்கிறது. ஏஜென்ட்களுக்கான கமிஷன் கணிசமாக குறைப்பு, லைஃப் கவரேஜ் அதிகரிப்பு, சரண்டர் கட்டணம் குறைப்பு போன்றவற்றால் யூலிப் முன்னை விட சிறந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. 

பாலிசி தொகையில் பிரீமியம் 20%க்கு மேல் இருந்தால் வரிச் சலுகை இல்லை. எனவே, ஒற்றை பிரீமியத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது, முழு பிரீமியத்துக்கும் வரிச் சலுகை கிடைப்பது போல் கவனியுங்கள். 

*  தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி)

மத்திய அரசின் இந்தப் சேமிப்பு பத்திரத்தில் செய்யப்படும் முதலீட்டு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி ஆண்டுக்கு 8.4% கிடைக்கும். இது ஆறு ஆண்டு திட்டம். 
பாதுகாப்பான முதலீடு. அதே நேரத்தில், வட்டிக்கு வரி இருக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் இதில் முதலீடு செய்யலாம்..!

*  பென்சன் திட்டங்கள்

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொண்டுள்ள பென்சன் திட்டங்களின் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு இந்த வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டங்களில் நிபந்தனைக்கு உட்பட்டு முதிர்வு தொகைக்கு (33%&க்கு வரி இல்லை) வரி கட்ட வேண்டும். பென்சன் தொகைக்கு வரி உண்டு என்பது பாதகமான அம்சம்.
பி.எஃப். திட்ட சேரும் வசதியில்லாத சுய தொழில் செய்பவர்கள் மற்றும் கூடுதல் பென்சன் தேவை என்று திட்டமிடுபவர்களுக்கு..!

*  தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்

மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம், (9%, 5 ஆண்டு), தபால் அலுவலக டைம் டெபாசிட் (7.5%, 5 ஆண்டு) போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உண்டு.

* இ.எல்.எஸ்.எஸ்

பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு வரி விலக்கு இருக்கிறது. 
மாதம் தோறும் குறைந்தது 500 ரூபாய் கூட இதில் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. இதில், வருமானம் என்பது பங்கு சந்தையில் செயல்பாட்டை பொறுத்திருக்கிறது. 
மூன்றாண்டு கால லாக் இன் பிரீயட், டிவிடெண்டு, வருமானத்துக்கு வரி இல்லை போன்றவை சாதகமான அம்சங்கள். நீண்ட காலத்தில் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள் ஏற்றது இது..!

* பங்கு முதலீடு..!

நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நிறுவனங்களின் பங்குகளை ஐ.பி.ஓ. போது பங்குகளை வாங்கினால், அதற்கும் வரிச் சலுகை இருக்கிறது. இதை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது. டிவிடெண்ட்க்கு வரி கிடையாது. 
80 சி  செலவு

* டேர்ம் இன்ஷூரன்ஸ் 

இந்த ஆயுள் காப்பீடு பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும். இடையில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் மட்டும் இழப்பீடு கிடைக்கும். முதிர்வு தொகை எதுவும் கிடையாது. பிரீமியத்து வரிச் சலுகை உண்டு. 

* வீட்டுக் கடன் அசலை திரும்பச் செலுத்துதல்

குடியிருப்பு வசதிக்காக வாங்கிய வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை இருக்கிறது.

* கல்விக் கட்டணம்

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கான கல்விக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இரு பிள்ளைகளுக்குதான் சலுகை உண்டு. 
மேற்கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து ஓர் நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. (இந்தத் தொகை 2014-15 ம் ஆண்டில் 1.5 லட்சம் ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டது)

இதர முதலீடுகள்:

* உள்கட்டமைப்பு பாண்ட்கள்

இன்ஃப்ராஸ்ரக்சர் பாண்ட்களில் ரூ. 20,000 வரை செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி சுமார் 8%. வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும். ஐந்தாண்டு திட்டம். (இப்போது இது நடைமுறையில் இல்லை)

இதர செலவுகள்

வீட்டு வாடகை - 10 (13 ஏ)
குடியிருக்கும் வீட்டுக்கு கொடுக்கும் வாடகைக்கு வரி விலக்கு இருக்கிறது. மொத்த சம்பளத்தில் 10%&க்கு மேல் வாடகையாக கொடுத்திருக்க வேண்டும். மேலும், வசிக்கும் நகரம், பணியாளர் பெறும் வீட்டு வாடகை படி ஆகியவற்றை பொறுத்து கழிவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடமிருந்து ரசீது பெறுவதும், அவரின் பான் எண்ணை குறிப்பிடுவதும் அவசியம்.

* 80 டி- மருத்துவக் காப்பீடு

மெடிக்கிளையம் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் ஆண்டுக்கு ரூ 15,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ 20,000) வரை வரி வரி விலக்கு இருக்கிறது. பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை பெற முடியும். இந்த வகையில் ரூ. 35,000- 40,000க்கு வரிச் சலுகை பெற முடியும். 

* 80 யூ - உடல் ஊனமுற்றவர்கள் 

வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ. 50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ. 1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. 

* 80 டி.டி-  மருத்துவச் சிகிச்சைக்கான செலவு

வரி கட்டுபவரை சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவமனை செலவில் ரூ 50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ. 1,00,000) வரை வருமான வரி விலக்கு இருக்கிறது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் அவசியம்.

* 80 டி.டி.பி -  தீவிர நோய்களுக்கான சிகிச்சை
கேன்சர், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு செய்யப்படும் மருத்துவ செலவில் அதிகபட்சம் ரூ. 40,000 ( மூத்த குடிமக்களுக்கு ரூ. 60,000) வரி விலக்கு உள்ளது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் தேவை.

* 80 இ கல்விக் கடன் 


வரிகட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வரிச் சலுகை. அசலுக்கு வரிச் சலுகை கிடையாது.


*  24 பிரிவு - வீட்டுக் கடனுக்கான வட்டி

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதில், வட்டியில் ஒரு நிதி ஆண்டில் ரூ 1.5 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு.

வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வது முக்கியம்..! அதே நேரத்தில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான அளவுக்கு லைஃப் மற்றும் மெடிக்க்ளைம் பாலிசிகள் எடுத்தது போக மீதமுள்ள தொகையை மட்டுமே முதலீடு செய்யுங்கள். அப்போது தேவையை பொறுத்து முதலீட்டு காலத்தை, அதாவது லாக் இன் பிரீயட்டை கவனியுங்கள். கூடவே எவ்வளவு வருமானம், வருமானத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறதா என்பதை பாருங்கள்.ந்

சூப்பர் டிபஸ்கள்

* இன்ஷூரன்ஸூக்கு டேர்ம் பிளானை எடுத்து விட்டு மீதித் தொகையை இதர வரிச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது லாபமாக இருக்கும்.

* துணைவி/துணைவருடன் சேர்ந்து கூட்டாக கடன் வாங்கி, தனித் தனியாக வரி விலக்கு கோரினால் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும்.

* கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் போது, இரு பிள்ளைகள் என்றால் ஒருவருக்கு தந்தையும், இன்னோருவருக்கு தாயும் வரிச் சலுகை பெறலாம். 

2011- 12 - ம் ஆண்டு பட்ஜெட் எப்படி

வரிச் சேமிப்பு எவ்வளவு?

விவரம் வரிச் சேமிப்பு

59 வயது வரையிலான ஆண்கள் ரூ. 2,060

59 வயது வரையிலான பெண்கள் -
60 முதல் 64 வயதான ஆண்கள் ரூ. 9,270

60 முதல் 64 வயதான பெண்கள் ரூ. 6,180

65 முதல் 79 வயதான அனைவருக்கும் ரூ.2,060

80 வயதுக்கு மேலான அனைவருக்கும் ரூ. 26,780


வருமான வரி எவ்வளவு? *

பொதுப் பிரிவினர்

வருமான வரம்பு ரூ. வரி %

1,80,000 லட்சம் வரை இல்லை

1,80,001 முதல் 5 லட்சம் வரை 10 %

5,00,001 முதல் 8 லட்சம் வரை 20 %

8,00,001 மேல் 30%

பெண்கள்


வருமான வரம்பு ரூ. வருமான வரி %

1.90 லட்சம் வரை இல்லை

1,90,001 முதல் 5 லட்சம் வரை 10 %

5,00,001 முதல் 8 லட்சம் வரை 20 %
8,00,001 மேல் 30 %


மூத்த குடிமக்கள்
(60 முதல் 80 வயது வரை)

வருமான வரம்பு ரூ வருமான வரி %

2.50 லட்சம் வரை இல்லை

2,50,001 முதல் 5 லட்சம் வரை 10 %

5,00,001 முதல் 8 லட்சம் வரை 20 %

8,00,001 மேல் 30 %

மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயது மேல்)

வருமான வரம்பு ரூ. வருமான வரி %

5 லட்சம் வரை இல்லை

5,00,001 முதல் 8 லட்சம் வரை 20 %

8,00,001 மேல் 30 %

* வரித் தொகைக்கு, கல்வித் தீர்வை 3% உண்டு.

நன்றி : சி.சரவணன், நாணயம் விகடன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum