தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் Empty இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

Fri May 27, 2016 3:02 pm
நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
             'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவ கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. எந்த வித தயார்படுத்தலும் இல்லாமல் நுழைவுத் தேர்வை எப்படி எழுதுவது என, பிளஸ் 2 மாணவர்கள் தவித்தனர்.

இதையடுத்து, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, இந்த ஆண்டு மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடத்த விலக்கு அளித்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

ஏற்கனவே, மே, 1ம் தேதி நீட் தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இந்த தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.

நுழைவுத் தேர்வுக்கு விலக்கு பெற்ற மாநிலங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளின் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர, இந்த தேர்வை எழுத வேண்டாம்.

அதே நேரம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

ஜூன், 21 வரை ஆன்லைனில், http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 24ல் தேர்வு நடக்கும். மே, 1ம் தேதி தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவோமா என, சந்தேகத்தில் உள்ளவர்களும்; மே, 1ம் தேதி தேர்வில் பதிவு பெற்று, எழுதாதவர்களும் கூட இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஆங்கிலம் மற்றும்
இந்தியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


முதல் நாள் 6,000 விண்ணப்பம் 

விண்ணப்பம் வினியோகம் துவங்கிய முதல் நாளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 6,123 பேர் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்றனர்.

'நீட்' என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தியே, மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. மத்திய அரசு, ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வந்ததால், சிக்கல் தீர்ந்தது.

இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்ககம், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், சென்னை பல் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை துவக்கியது. எப்போது சிக்கல் தீரும் என, காத்திருந்த மாணவ, மாணவியர் விண்ணப்பம் வாங்க ஆர்வமுடன் குவிந்தனர். நேற்று முதல் நாளில், 6,123 பேர் விண்ணப்பங்கள் பெற்றனர்.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''கடந்த ஆண்டில், 33 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றனர். இந்த ஆண்டில், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. ஜூன், 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்,'' என்றார்.



எம்.பி.பி.எஸ்., இடங்கள் திடீர் குறைப்பு

தமிழகத்தில், கடந்த ஆண்டில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளின், 2,665 இடங்கள்; எட்டு தனியார் கல்லுாரிகளில், 1,010 இடங்கள்; இ.எஸ்.ஐ., கல்லுாரி யில், 100 இடங்கள் என, மொத்தம், 3,765 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு, முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 20ம் தேதி நடக்க உள்ளது.

* மதுரை அரசு கல்லுாரியில், 155 இடங்கள் இருந்தன. எம்.சி.ஐ., ஆய்வு நடத்தி, ஐந்து இடங்களை குறைத்து விட்டது

* அதேபோல், இன்னும் இரண்டு தனியார் கல்லுாரிகளுக்கு, எம்.சி.ஐ., அனுமதி தராததால், தனி யார் கல்லுாரிகளில், 250 இடங்கள் குறைந்துள்ளன. மொத்த இடங்களில், 255 குறைந்து, 3,510 இடங்களே உள்ளன.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், சுயநிதி கல்லுாரிகளுக்கான இடங்கள் அதிகம் குறைந்துள்ளன. கவுன்சிலிங் நடக்கும் முன், விடுபட்ட இடங்களுக்கு அனுமதி கிடைக்கவிட்டால், சுயநிதி கல்லுாரிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்
அதிகரிக்கும்,'' என்றார்.


Last edited by சார்லஸ் mc on Fri May 27, 2016 3:16 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் Empty Re: இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

Fri May 27, 2016 3:14 pm
மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. நமது நாட்டில் சில மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்தது. 

ஆனால் வட மாநிலங்களில் பொது நுழைவுத் தேர்வு(சிஇடி) முறை இருந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றமானது, இனி தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் அது வரும் கல்வியாண்டிலேயே அமலாக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தது.

 இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இனி மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வழி என்ற நிலை உருவாகியுள்ளது. 

2016-17-ம் கல்வியாண்டில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.

 இதுதொடர்பாக மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : 

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வரை நீட் தேர்வு மட்டுமே இனி ஒரே வழி. இல்லாவிட்டால் மருத்துவப் படிப்புகளில் ஏழை, எளிய மக்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் சேர முடியாத நிலை ஏற்படும்.

 நீட் தேர்வு சிபிஎஸ்இ நிர்வாகம் நடத்துகிறது. மேலும் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்காக தனியாக மெரிட் பட்டியல் தயாராகும். 

அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கைக மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் Empty Re: இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

Sat May 28, 2016 7:43 am
இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் 20160527145522
Sponsored content

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் Empty Re: இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum