மொழி பெயர்ப்பாளர் பணிக்கான எஸ்.எஸ்.சி. தேர்வு
Tue Apr 12, 2016 5:31 am
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மத்திய அரசுத் துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கான தேர்வை அறிவித்து உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்படும் ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், சீனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை அறிவித்து உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு 19-6-2016 அன்று நடைபெற உள்ளது.
இந்த தேர்வை எழுதி பணி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 1-1-2016 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
இந்தி மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு மொழியில் பட்டம் பெற்றவர்கள், மற்ற மொழியை ஒரு பாடமாக தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் அல்லது மாற்று மொழியில் பட்டப்படிப்பும், ஒரு மொழியில் முதுகலை படிப்பும் படித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு சம்பந்தமான படிப்புகளை படித்தவர்களுக்கும் பணி உள்ளது. இளங்கலை மொழிப்பாடம் பயின்றவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் புகைப்படம் மற்றும் கையப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பார்ட் -1 விண்ணப்ப படிவம் 28-4-2016-ந் தேதிக்குள்ளும், பார்ட் - 2 விண்ணப்ப படிவம் 30-4-2016-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விரிவான விவரங்களை http://ssconline.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|