கிறிஸ்மஸ் கேக்
Wed Feb 03, 2016 10:46 am
தேவையான பொருட்கள்
வெண்ணெய்………………. 200 கிராம்
சர்க்கரை…………………….. 190 கிராம்
முட்டை………………………. 4
மைதா………………………… 200 கிராம்
கேக் மசாலா……………….. 1தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்…………… 1தேக்கரண்டி
கேரமல்……………………… 2 மேஜைக்கரண்டி
இன்ஸ்டன்ட் காப்பி……… 1-1/2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ்…………. 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு…………. 1 பெரிய பழம்
உலர்ந்த கேக் பழங்கள்….. 350 கிராம்
பொடித்த பாதாம்…………. 1 மேஜைக்கரண்டி
பிராந்தி அல்லது ரம்……… 4 மேஜைக்கரண்டி
[கேரமல் செய்முறை: 3 மேஜைக்கரண்டி சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, குறைந்தத் தணலில் வைக்கவும். அது நிறம் மாறும்போது, 1/4 கப் தண்ணீர் விட்டுக் கலந்து இறக்கவும்]
கேக் செய்முறை
உலர்ந்த பழங்கள்… காய்ந்த திராட்சை, ஆரஞ்சு பீல், செரி, டூட்டி புரூட்டி, இவைகளைப் பொடியாக வெட்டி, 3 மேஜைக்கரண்டி ரம்மில் ஊறவைக்கவும். பல நாட்கள் வைக்கலாம். கேக் செய்யும் முன் இதில் பொடித்த பாதாமைக் கலக்கவும். வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு கலக்கவும். பிறகு ஒவ்வொரு முட்டையாக உடைத்து, ஊற்றி அடிக்கவும். மாவுடன் கேக் மசாலா, பேக்கிங் பவுடர் கலந்து சலிக்கவும். அத்துடன் ஊறவைத்துள்ள பழங்களைக் கலக்கவும். அடித்த முட்டைக் கலவையில் காப்பி, வெனிலா, எலுமிச்சைச் சாறு, கேரமல் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக மாவுடன் கலந்துள்ள பழங்களைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை வெண்ணை தடவிய பட்டர் பேப்பர் போட்ட 8 அங்குல வட்ட டின் (அ) 7 அங்குல சதுர டின்னில் கொட்டி, 170 டிகிரியில் 40-50 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு ஆறியபின் எடுத்து ஒரு கேக் கம்பியால் குத்தி, 1 மேஜைக்கரண்டி ரம்மைக் குத்திய ஓட்டைகளில் ஊற்றி, பட்டர் பேப்பரில் சுற்றி, பின்பு அலுமினியம் பேப்பரில் சுற்றி வைக்கவும். குளிர்ச்சியான இடத்தில் (குளிர் சாதனப் பெட்டியில் அல்ல) வைக்கவும். கிறிஸ்மஸ் காலையில் திறந்து, வெட்டி, பரிமாறவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|