தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Empty டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு?

Thu Dec 17, 2015 4:34 pm
ஜெயஶ்ரீ கோபால் 
சர்க்கரை நோய் மருத்துவர்
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12aஹேமா, ஒரு சாப்பாட்டுப் பிரியை. அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தததும் பயந்துபோனார்.  இனிமேல்,  இனிப்பு, எண்ணெய், வறுவல் என எதையுமே தொடக் கூடாது  வெறும் சப்பாத்தி மட்டும் சாப்பிட்டால்தான் உயிர்வாழ முடியும் என நினைத்தார். விரும்பிய  உணவைச் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12b
இவரைப் போல பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு, என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்ற தெளிவு இல்லை. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும்முறை, என்ன வகை உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி, தெளிவாகப் பட்டியலிடுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஜெயஶ்ரீ கோபால்.
 சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, சுவையான உணவுகளுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டும் என எண்ணுவது தவறு. சீரான, சத்தான, உணவு அட்டவணையைக் கடைப்பிடித்
தாலே போதும். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

டயாபடீஸ் டயட்
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)சாப்பிடும் உணவு மூலமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம். ஒவ்வொரு உணவு பொருளுக்கும் கிளைசமிக் குறியீட்டு எண் உண்டு. அதாவது, சாப்பிடும் உணவுப்பொருள் எவ்வளவு நேரத்தில், எந்த அளவுக்குச் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கிறது, என்பதைக் குறிக்கும் குறியீட்டு எண். சர்க்கரை நோயாளிகள், இந்த கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாக உள்ள உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12c
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)அதிகம் பாலிஷ் செய்யப்படாத, நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை, குறைவான கிளைசமிக் குறியீட்டு எண் கொண்டவை.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12d
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)உயரத்துக்கு ஏற்ற சரியான எடை இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோளை எட்ட, எண்ணெய் மற்றும் இனிப்பான பொருட்களைக் குறைவாக, சீரான இடைவெளியில் எடுத்துக்கொள்ளலாம்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12e
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு டீஸ்பூன் சர்க்கரை, இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை மட்டும் உணவில் சேர்த்துகொள்ளலாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளான முறுக்கு, சமோசா, வடை, சிக்கன் 65, போண்டா போன்ற உணவுகளைக் அவசியம் தவிர்க்க வேண்டும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12f
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உருளை, சர்க்கரைவள்ளி  போன்ற கிழங்கு வகைகளை குறைவாகச் சாப்பிடலாம்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12g
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)லட்டு,ஜாங்கிரி முதலான இனிப்புகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், மைதாவால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தால், 10 நாட்களுக்கு ஒருமுறை, இதில் ஏதாவது ஒன்றை மட்டும் சிறிதளவு சாப்பிடலாம்.ஆனால், மனக்கட்டுப்பாடு அவசியம். 
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12h
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)அரிசி சாதத்தைவிட, காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகளுடன் உப்பு,எண்ணெய்,  ஆகியவற்றைக் குறைவாகச் சேர்த்துச் சமைப்பது நல்லது. தினமும், வெவ்வேறு காய்கறிகளை மூன்று நான்கு கப் அளவுக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12i
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)தினமும் உணவில் இரண்டு கப் பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, மாதுளம் பழம் போன்றவற்றை  அடிக்கடி  சாப்பிடலாம். பேரீச்சம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிடலாம். மா, பலா, வாழை, தர்பூசணி ஆகிய பழங்களை மிகக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தவிர்ப்பது நல்லது.   முழுப் பழமாக சாப்பிடவும். பழச்சாறாக  அருந்த வேண்டாம்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12j
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை எப்போதாவது சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12k
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)தினமும் காலை, மாலை வேளைகளில்  சர்க்கரை சேர்க்காத ஒரு கப் டீ அல்லது காபி அருந்தலாம்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12l
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)நார்ச்சத்து எந்த அளவுக்கு  முக்கியமோ, அதே அளவுக்கு மாவுச்சத்தும் முக்கியம். ஒரு நாளைக்கு ஏதாவது ஒருவேளை மட்டும் அரிசி சாதம் சாப்பிடவும். மற்ற இரண்டு வேளை, கோதுமை உப்புமா, கேழ்வரகு, கோதுமை சப்பாத்தி, கம்பு தோசை, கோதுமை பொங்கல், கம்பு அடை போன்ற, அரிசி வகையைத் தவிர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணலாம்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12m
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12mm
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)தினமும் ஒன்றிரண்டு கப் பால் அருந்தலாம். ஒரு கப்  தூய்மையான தயிர் சாப்பிடலாம். பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற டிரை ப்ரூட்ஸ் தினமும் 8 - 10 சாப்பிடவும். இதயத்துக்கு நல்லது. வேர்க்கடலை அளவாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12n
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)முட்டையின் வெள்ளைக்கரு போலவே மஞ்சள் கருவிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. மஞ்சள் கருவைச் சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவும் வாரம் மூன்று முறை முழு முட்டையும் சாப்பிடலாம். முட்டையில் பல்வேறு நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12o
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)அசைவ உணவை சாப்பிடலாம் தவறு இல்லை. ஆனால், சமைக்கும்போது, அதிக எண்ணெய், உப்பு, மசாலா சேர்க்காமல், வாரம் ஒரு முறை சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். ஆவியில் வேகவைத்த அசைவ உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்ளுங்கள். அசைவ உணவுகளில் உடலுக்குத் தேவையான புரதமும்சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிக அளவு கிடைக்கின்றன.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)உப்பு நிறைந்த உணவுகளான அப்பளம், வற்றல், ஊறுகாயை அறவே தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், இதய நோய்கள்  போன்றவை வராமல் தடுக்க, உப்பு குறைவாகச் சாப்பிடவேண்டும். தினமும் ஒன்றிரண்டு டீஸ்பூன் உப்பு மட்டுமே சமையலில் சேர்க்கவேண்டும். 
சாப்பிடும் முறை :
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டாம். சிறிதும் பெரிதுமாக, மொத்தம் ஆறு வேளைகளாகப் பிரித்துச்சாப்பிடவேண்டும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம். ஒவ்வொரு வேளையிலும் பசித்தால் தேவையான அளவு சாப்பிடவும். மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் எடுத்துக்கொள்பவர்கள்  பசி எடுக்காவிட்டாலும், குறைவாக குறிப்பிட்ட நேரத்துக்குச்  சாப்பிட வேண்டும். அப்போதுதான், உடலில் சர்க்கரை அளவு திடீரென குறைவதைத் தடுக்க முடியும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)உணவைக் கடித்து, சுவைத்து, அரைத்து, மெதுவாக  விழுங்க வேண்டும். ஒரு சப்பாத்தியைச் சாப்பிடுவதற்கு, குறைந்தபட்சம் 8-10 நிமிடங்கள் எடுத்துக்கொள்வது அவசியம். மதியம் உணவை அரை மணி நேரமாவது பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)சாப்பிட்டவுடன் உடனடியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, 10-15 நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? Red_Dot(9)ஒரே வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது போரடித்தால், விதவிதமான டிஷ் செய்து சாப்பிடுங்கள். ஒரு வாரத்துக்கு, என்னென்ன டிஷ் எப்போது செய்வது என்பதை, ஒரு அட்டவணையாகப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி, முடிந்தவரை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய் என்று முடங்கிவிடாமல் ஆரோக்கியமான உணவுகளைச் சுவைக்கத் தொடங்குங்கள். தினமும், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12p(1)
குறிப்பு: சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்த அட்டவணையைக் கடைப்பிடிக்கலாம்.


டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12r
ஜி.பூஜா, விருதுநகர்.
“எனக்கு, எந்த விஷயத்திலும், முதலில், நேர்மறை எண்ணங்கள் வருவது இல்லை. அப்படி நடந்துவிடுமோ. இப்படி ஆகிவிடுமோ எனத் தொடர்ந்து, எதிர்மறை எண்ணங்களே பெரும்பாலும் வருகின்றன. நான் என்ன செய்வது?”
டாக்டர் பி.பி. கண்ணன், 
மனநல மருத்துவர், சென்னை.
டயாபடீக் டயட் எது சரி... எது தப்பு? P12q“பொதுவாக எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது என்று சொல்பவர்களை பாசிட்டிவாகச் சிந்தியுங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், பாசிட்டிவ் எண்ணங்களை நினைக்க வேண்டும் என்று நினைத்தும்கூட,  உங்களால் முடியவில்லை என்றுதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று, புரிந்துகொள்ள முடிகிறது.
இனி நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த எதிர்மறை எண்ணங்கள் எத்தனை நாட்களாக இருக்கின்றன, இவற்றைத் தவிர்க்க முடிகிறதா, எவ்வளவு நேரம் இந்த எதிர்மறை எண்ணங்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றன என்பதைக் கவனித்து, குறித்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் மட்டும் வந்துவிட்டு செல்கிறதென்றால், அதை பற்றி கவலைப்படத் தேவை இல்லை. அதிக நேரமாக நெகட்டிவ் எண்ணங்கள் வந்து, உங்களுக்குத் தொல்லை கொடுத்தால்,  உடனே மருந்துவரை சந்திப்பது அவசியம்.
தொடக்க நிலையில் இருப்பவர்கள், உளவியல் சிகிச்சைகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும். மத்திய நிலையில் இருப்பவர்கள் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மருத்துவரின் வழிகாட்டுதலோடு, மாத்திரைகளைச் சாப்பிட்டு, குணமாகலாம். முற்றிய, இறுதி நிலையில் இருப்பவர்கள், இரண்டு ஆண்டுகளாவது மாத்திரைகளைச் சாப்பிட்டு, சிகிச்சையிலும் இருப்பது அவசியம். எந்த காரணங்களுக்காகவும் சிகிச்சையை பாதியில் நிறுத்தக் கூடாது. தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதால், பக்க விளைவுகள் வருமோ என்ற பயம் இருக்குமெனில், அதையும் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெற்றுக் கொள்வதே சரி.”
-பு.விவேக் ஆனந்த்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum