தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நடிகர் ராமராஜனின் சாட்சி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நடிகர் ராமராஜனின் சாட்சி Empty நடிகர் ராமராஜனின் சாட்சி

Mon Nov 23, 2015 8:27 am
இவர் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சியை தொகுத்திருக்கிறேன்.
நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஓக்கூர். தந்தை ராமையா. நாடக நடிகர். தாயார் வெள்ளையம்மாள். ராமராஜனின் சகோதரர்கள் கருப்பையா, பாண்டி, சகோதரிகள் புஷ்ப வல்லி, வைராத்தாள். ராமராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் குமரேசன். ராமராஜன் பிறந்த ஒரு ஆண்டிலேயே சொந்த ஊரில் இருந்து மேலூருக்கு வந்து விட்டனர். இதனால், நடிகர் ராமராஜன் மேலூர் அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேலூர் அரசு கலை கல்லூரியில் பி.யூ.சி படித்தார்.
சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால், சென்னைக்குப் போக வேண்டும். சென்னையில் யாருடைய ஆதரவை நாடிச் செல்வது என்ற கேள்வி எழுந்து, தயக்கத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில், தங்கராஜ் என்ற நண்பர் மூலம் மேலூரில் 'ராஜா டூரிங் டாக்கீஸ்' என்ற திரையரங்கில் ராமராஜனுக்கு வேலை கிடைத்தது. அங்கு டிக்கெட் கிழித்து கொடுப்பது, கேஷியர் வேலை, மானேஜர் வேலை, படத்தை ஆப்பரேட் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்தார்.
இப்படி டிக்கெட் கிழிக்கும் வேளையில் இருந்து நடிகராகி, பின்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு ராமராஜன் அவர்கள் சமீபத்தில் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சியை உங்கள் முன் வைக்கிறேன்..
சாட்சி:


நான் பல நாட்களாக சாட்சி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் வர முடியவில்லை. நான் இங்கே இன்று வந்து நிற்கிறேன் என்றால் அது இயேசுவின் மிகபெரிய கிருபை.
உலகம் முழுவதும் இருக்கும் ஒரே இறைவன் இயேசு கிறிஸ்து மாத்திரமே... நான் பல முறை தொலைகாட்சியிலும், மற்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.. MBBS போன்று பல துறைகளில் சிறந்து விளங்குகிற மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பல வியாதிகளை இயேசுவின் கிருபையால் குணப்படுத்துவதை பார்த்து வியந்திருக்கிறேன்.. என்னடா... கரகாட்டகாரன் படத்தில் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடிகொண்டிருந்தவன் இங்கே கோவையில் சாட்சி சொல்லுகிறார் என்று.. வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம்.
நான் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்தேன். அங்கே உதவி டைரக்டர், டைரக்டர் பின் நடிகர் என்று வளர்ந்து பல திரைப்படங்களில் நடித்தேன். அனைத்து படங்களும் மிகபெரிய வெற்றியை கண்டது. எல்லோருக்கும் ராமராஜன் யார் என்று தெரிந்தது.


பின்பு அரசியலில் அறிமுகமாகி மாண்புமிகு அம்மா புரட்சிதலைவி ஜெயலலிதா மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனேன்.. இந்த பாதையில் வந்து கொண்டு இருந்த பொது எல்லோருக்கும் வரும் சோதனை போல எனக்கும் சோதனை வர ஆரம்பித்தது.
2010 ம் ஆண்டு ஓர் இடத்திற்கு என் காரில் சென்று கொண்டிருந்தேன். அந்நேரத்தில் மிகப்பெரிய கார் விபத்தில் மாட்டி கொண்டேன். அந்த கார் விபத்தில் என் நண்பர் அந்த இடத்திலேயே மரித்து விட்டார். என்னுடன் இருந்த இன்னொரு நண்பர் பால்தங்கராஜன் என்பவரும் இருந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 15 நாட்களாக சுய நினைவை இழந்து படுத்த படுக்கையாக இருந்தேன்.
அங்கு வந்த பலரும் என்னை பார்த்து இவர் பிழைப்பாரா, பேசுவாரா, பழைய நினைவுகள் வருமா என்று வருத்தப்பட்டனர். பால்தங்கராஜ் இயேசுவை வழிபட்டு கொண்டிருப்பவர். அவர் என்னை மருத்தவமனையில் முழுவதுமாக கவனித்து கொண்டார். சுயநினைவு திரும்பினவுடன் நான் புலம்ப ஆரம்பித்தேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..


இதை கவனித்த தங்கராஜ் அவர்கள் "தைரியமாக இருங்கள், ஒன்றும் ஆகாது. நான் ஓர் போதகரை அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு ஓர் போதகரை அழைத்து வந்தார். அந்த போதகர் என் தலையில் கை வைத்து ஜெபம் செய்தார். எனக்கு ஏசுவே நேராக வந்து என் தலையில் கைவைத்தது போல உணர்ந்தேன்.


நான் இன்று உங்கள் முன் நின்று பேசுகிறேன். பல இடங்களுக்கு போகிறேன் என்றால் அதற்கு இயேசு கிறிஸ்துவே காரணம். முன்பெல்லாம் ஓர் பிரச்சினை என்றால் பல கோவில்களுக்கு சென்று வருவோம். ஆனால் மனதார இயேசுவை நினைத்தால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். வாழ்க்கையில் நமக்கு பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நம்மோடு இருப்பவர் கர்த்தர் மாத்திரமே...
கர்த்தரை நம்பினோர் கைவிடப்படமாட்டார். பிரட்சினைகள் வரும்போது பல யோசனைகள் நம் மனதில் தோன்றி சஞ்சலப்படும். அந்நேரத்தில் ஆலயத்திற்குள் சென்று இயேசுவை உண்மையாய் வணங்குவோம் என்றால் தேவன் பதில் கொடுப்பார். நான் கதை சொல்லவில்லை. என் கண்முன் பார்த்த சம்பவங்கள் அது.
நான் நடிகர் செந்திலையும் அழைத்தேன். அவரும் பல நிலைகளில் கஷ்டப்பட்டு பல இடங்களுக்கு சென்று பிறகு இயேசுவை வணங்க ஆரம்பித்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று சாட்சி சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum