பெப்பர் சிக்கன் வறுவல்
Fri Jul 10, 2015 1:46 pm
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சிக்கன் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
பிறகு அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிக்கன் மசாலா பொடி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
பின்பு குக்கரை மூடி, மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கினால், பெப்பர் சிக்கன் வறுவல் ரெடி!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|