தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  Empty கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்

on Thu Jul 02, 2015 2:20 am
கட்டிட சுவர்களுக்கு சட்டை போடும் வேலையான கலவை மேற்பூச்சுக்கு பில்டர்ஸ்லைன் கட்டுமானத்துறை  அளிக்கும் 20 டிப்ஸ்கள் இதோ :

1. சுவர் மற்றும் கூரை தள பூச்சு வேலை தொடங்குவதற்கு முன்னர், ஆர்சிசி வேலை நடந்து முடிந்து போதியகால அவகாசம் ஆகியுள்ளதா? என்பதை உறுதி செய்தால் பூச்சு வேலையில் எதிர்பார்க்கப்படும் தரம் கிடைக்கும். அத்துடன் ஆர்சிசி யில் ஏற்படக்கூடிய விரிசல்களும் தவிர்க்கப்படும்.

2. சுவர்களை பூசத் தொடங்கும் முன்பு, இதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதா? என்பதை உறுதி செய்து கொள்ளவும். அதாவது சுவற்றில் உள்ள துளைகள் மற்றும் இடைவெளிகள் சீராக நிரப்பப்பட்டுள்ளதா? என்று பார்க்கவும். மின் இணைப்புக்காக போடப்படும் வயர் கொண்ட பைப் உள்ளே பதிக்கப்பட்டுள்ளதா? என்பதையும் பார்த்தறியவும். எந்த பைப்பும் சுவற்றைத் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதனையும் உறுதி செய்து கொள்ளவும்.

3. நீங்கள் பூசப்போவது தரைதள கூரை என்றால் ஏற்கனவே போடப்பட்டுள்ள தரைக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளவும். ஃபேன் ஹுக், கதவு மற்றும் ஜன்னல் கதவு, ஃபிரேம் போன்றவை ஏற்கனவே சரியான முறையில் பதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறியவும்.

4. தரைதள மண் பூச்சு லீன் கான்கிரீட் முறைப்படி செய்யப் பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே பூச்சு வேலைக்குத் தேவையான மரத்தால் ஆன கட்டமைப்புகளை நிர்மானிக்க வேண்டும்.

5. முதலில் பூச வேண்டியது கூரை தளம். அடுத்துதான் சுவர்களை பூசத் தொடங்க வேண்டும். சுவற்றின் மேற்பகுதியிலிருந்து கீழ்ப்பகுதி நோக்கி வரும்படியாக பூச்சு வேலை இருக்க வேண்டும்.

6. பன்னடுக்கு கட்டிட உள் பூச்சு வேலைகளை ஒவ்வொரு தளமாக செய்து வரவேண்டும். ஆனால் வெளிப்பூச்சு வேலை மேல் தளத்தில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் கொத்தனாரே சிறந்த பூச்சு வேலைக்காரர் என்பதை மறக்க வேண்டாம். கொத்தனார் சுவரை கட்டத் தொடங்கும் நிலையிலேயே அனைத்து இணைப்பு, அடைப்பு வேலைகளை நிறைவேற்றிவிட வேண்டும். பொதுவாக இப்படி செய்யப்படுவதில்லை.

7. இணைப்புகள் ஏற்படுத்த சுத்தி போன்ற மற்ற எந்த கருவியையும் பயன்படுத்த வேண்டாம். இவை கட்டுமான செங்கல்லின் ஓரத்தை பழுதடையச் செய்யும். 10 முதல் 12 மி.மீட்டர் ஆழமுள்ள இணைப்பு பகுதிகள் எவை என்பதை கணக்கிட்டு அல்லது கேட்டறியவும். இதன் மூலம் தனித்தனியாக உள்ள எல்லா பொருட்களுமே முழுவதுமாக நீக்கப்படுகின்றன.

8. பூச்சு வேலை தொடங்க 24 மணி நேரத்துக்கு முன்பிலிருந்தே பூசப்படவுள்ள சுவரில் ஈரப்பதம் இருத்தல் வேண்டும். சற்று அளவுக்கு அதிகமான ஈரப்பதத்தில் பூச்சு வேலை செய்தாலும் சுவற்றில் விரிசல்கள் விழக்கூடும்.

9. சுவற்றில் மின்வயர் சொருகுவது உள்ளிட்ட வேறு பல வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் பைப்புகளை சுவற்றை சார்ந்து நிறுத்த வேண்டாம். ஏனெனில் மேலிருந்து விழக்கூடிய கலவை மற்றும் பிற தூசிகள் உட்பகுதியில் நிறைந்து விட்டால் அதனை சுவற்றின் உள்ளே சொருகும் பட்சத்தில் அதன் முக்கிய பயன்பாட்டையே இழந்து விடும் நிலை ஏற்படும். பின்னாளில் இப்பகுதிகளில் பூசப்பட்ட நல்ல சுவர்பகுதி இடித்து மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். கட்டுநரின் வேலை மற்றும் பெயருக்கு பின்னடைவு ஏற்படுத்தும் இத்தகைய வேலையில் கூடுதல் கவனம் தேவை.

10. ஒன்பது அங்குல அகலம் கொண்ட கட்டிட சுவர்களின் ஒரு புறம் வழவழப்பாகவும் மறுபுறம் சொர சொரப்பாகவும் அதாவது கரடு முரடாக இருக்க வேண்டும். வழவழப்பான பகுதிக்கு அங்குல தடிமன் கொண்ட சிமெண்ட் கலவைப் பூச்சும் சொரசொரப்பான பகுதி பூச்சின் தடிமன் 3/4 அங்குலமாக இருத்தல் வேண்டும். ஒரு வேளை சுவற்றின் தடிமன் 13.5 அங்குலமாக இருந்தால் அதன் இரு புறங்களுமே வழவழப்பாக இருக்கும்படி பூச்சு வேலை செய்யப்பட வேண்டும். 9 அங்குல தடிமன் கொண்ட சுவரின் உட்புறம் 3/4 அங்குல தடிமன் சிமெண்ட் கலவைப் பூச்சும், வெளிப்புறம் 1 அங்குலப் பூச்சும் தேவைப்படும்.

11. கூரை தள கான்கிரீட் சற்று கடினமாக இருப்பின் சிறிய சுத்தியல் மற்றும் உளி கொண்டு போதிய இடைவெளி விட்டு மெதுவாக செதுக்கி எடுக்கவும். ஆனால், கான்கிரீட்டின் உள்ளே இருக்கும் ஸ்டீல் (இரும்பு) பாதிக்காத வகையில் அதாவது சுத்தியின் அடியால் பழுதுபட்டு விடாத நிலையில் செதுக்குவது அவசியமாகும். இவ்வகை மெல்லிய செதுக்கலால் கான்கிரீட் மற்றும் கலவை பூச்சு இடையிலான இறுக்கம் வலுப்பெறும்.

12. வழவழப்பான பகுதியாக கான்கிரீட்டின் மேல்பூச்சு இருக்க வேண்டும். 1:2 என்ற அளவில் சிமெண்ட் கலவை இருத்தல் வேண்டும். குறிப்பாக கூரைதள பூச்சு இப்படி அமைவது அவசியம். மேலும் கான்கிரீட் மீது பூசப்படும் எண்ணெய்ப் பூச்சு முழுவதுமாக அகற்றப் பட்ட பின்னர்தான், சிமெண்ட் கலவை பூச்சு செய்யப்பட வேண்டும்.இல்லையென்றால் சிமெண்ட் பூச்சு விரைவில் உதிர்ந்து விழும். ஃபிரேம்டு ஸ்ட்ரக்ச்சர் கட்டுமானத்தில் சுவரைச் சுற்றியுள்ள பீம்கள் மற்றும் காலம்கள் அமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், சுவர் சாய்ந்து விழுந்து விடும். சுவற்றின் மேற்படியும் பீமும் பக்கவாட்டில் காலமும் இருப்பதே சரியான கட்டுமானமுறை. இவை அனைத்தும் இணைக்கப்படும் முறையிலான பூச்சு வேலையே சுவற்றின் கட்டுமானத்தையும், இருப்பையும் இறுத்தி நிற்கச் செய்யும். அப்படி இல்லாத பட்சத்தில்தான் சுவற்றிலும், அதன் இணைப்பு பகுதிகளிலும் விரிசல்விழும். மேலும் பீம், காலம் மற்றும் ஆர்சிசி ஆகிய எல்லாவற்றுக்குமே ஒரே அளவிலான காரைப் பூச்சு செய்யப்படுவதால்தான் இப்படி வலியுறுத்தப்படுகிறது.

13. சமீபகால கட்டுமானத்தில் ரசாயன கலவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கான்கிரீட் மீது இக்கலவை கட்டுமானத்தில் கியூரிங் எனும் நடைமுறையாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கான்கிரீட் பலமடைவதுடன், கான்கிரீட் மீது ஈரப்பதம் தங்காமல் தடுக்கிறது. ரசாயன கலவை பூசப்பட்ட பின் தேவையான நீர்ப் பொழிவு தேவையில்லை. பூச்சு வேலை தொடங்கும் முன் கியூரிங் ரசாயனக் கலவை நீக்கப்பட்டதா? என்பதை நினைவில் கொள்ளவும். இப்படி செய்யப்படாவிட்டால் கூரை தளம் மீது சிமெண்ட் கலவை பூச்சு ஒட்டாது என்பது கவனிக்கத்தக்கது.

14. பூச்சு வேலை தொடங்கும் முன் கொத்தனார், தான் பூசப் போகும் சுவற்றின் 4 புறங்களிலும் ஆதார குறிகளை இட வேண்டும். ஒவ்வொரு சுவற்றுக்கும் 3 அடி வரையில் செங்குத்தான இடைவெளி விடப்பட வேண்டும். சுவற்றின் உயரம் 12 அடியைத் தாண்டும் போது ஆதாரக் குறியீடு (அடையாளம்) 8 மு 3’கிரிட் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி கொத்தனார் அதனை தவிர்த்தாலும், கட்டிட மேலாளராக உள்ள பொறியாளர் இதனை வலியுறுத்த வேண்டும். இந்த ஆதார அல்லது அடையாளக் குறிகள்தான் சுவற்றின் பூச்சை சம அளவில் இருக்கச் செய்யும். மரத்தால் ஆன செங்குத்தான ஓரங்கள் கொண்ட மட்டப்
பலகை கொண்டு இரு குறிகள் இடையிலான பூச்சு வேலையின் சம அளவு உறுதி செய்யப்பட வேண்டும். சதுர வடிவம் கொண்ட முழு செங்குத்தான மட்டப்பலகை கொண்டு பூச்சு தடிமன் அளவை சரி பார்க்க வேண்டும்.

15. பூச்சு வேலைக்கு ஒரே பிராண்ட் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகளவில் அதனை பயன்படுத்துவதே நல்லது. சிமெண்ட் காரையில் தண்ணீரின் தொடர் கலப்பினை சரியான பிராண்டில் தொடரும்போதுதான் சிமெண்ட் கலவை பூச்சின் நிறம் 
மாறாது.

16. பூச்சு வேலை சிறப்பாக இருக்க வேண்டுமானால் பெரும்பாலும் மரத்தால் ஆன செவ்வக மட்டப் பலகைதான் பயன்படுத்த வேண்டும். இரும்பால் ஆன மட்டப் பலகையால் சில சமயம் சுவற்றில் கீறல்கள் விழ வழி வகுக்கும். (மரத்தால் செய்யப்பட்ட 112 மு 4 அங்குல அளவு கொண்ட செவ்வக மட்டப் பலகையே பெரும்பாலும் பயன் படுத்தப்படுகிறது).

17. வழவழப்பான மணலை விட சொர சொரப்பான மணல் 30% அளவில் கலவையில் இடம் பெறச் செய்ய வேண்டும். முழுவதும் சொர சொரப்பான மண லாக இல்லாமலும், வழவழப்பான மணலாக இருப்பதாலும் பூச்சு வேலை திருப்திகரமாக அமையும். அத்துடன் வேலையை எளிதாக்கும். வட்ட அல்லது நேர்க்கோடு கொண்ட குறிகள் தெரியும்படியான பூச்சு வேலை ஏற்கத்தக்கதல்ல. இவை சுவற்றில் தெரியும் போது சுவற்றின் அழகு கெட்டு விடும்.

18. பூச்சு வேலைக்கு இப்போது தனியாக ஆற்று மணலை விற் கிறார்கள். இது தவிர, செயற்கை மணல் அல்லது உருவாக்கப்பட்ட மணலை பூச்சு வேலைக்கு பயன் படுத்துவது சிறந்தது.

19. பூச்சு வேலையின் போது சிதறும், உரியும் கலவையை பிளாஸ்டிக் உறைகளின் மீது விழும்படி செய்து, அதை மறுஉபயோகம் செய்து கொள்வர். அவ்வாறு செய்யும் போது அவற்றுள் பிற பொருட்கள் விழாதவாறு, கலந்து விடாதவாறு பார்த்துக் கொள்வது முக்கியம்,

20. பொறியாளரின் அறிவுறுத்தலின்படி, தரமான தண்ணீரால் குறிப்பிட்ட நாட்கள் சுவர்கள் கலவை பூசப்பட்ட பிறகு கியூரிங் செய்யப்பட வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  Empty Re: கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்

on Thu Jul 02, 2015 2:31 am
கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  11141724_945947895470081_1349888361607225773_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  Empty Re: கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்

on Thu Jul 02, 2015 2:39 am
பூச்சு வேலைகளை எளிதாக்கும் ஸ்ப்ரே பிளாஸ்டரிங் !

உங்கள் கட்டடத்தின் பூச்சு வேலைகளை எப்படிச் செய்து முடிக்கிறீர்கள்? கொத்தனார்கள் கொல்லத்துக் கரண்டியால் கலவையை அள்ளிச் சுவரில் அடித்து மட்டப் பலகையால் தேய்த்து விடும் முறையைத்தான் பின்பற்றிக் கொண்டு இருக்கிறீர்களா?
இந்த வேலையை இயந்திர மயமாக்கலாம். கையாள்வதற்குக் கடினமான கான்கிரீட் கலவையையே எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல பம்ப்புகள் வந்துவிட்டன. பூச்சுக் கலவை எம்மாத்திரம்? பூச்சுக் கலவையை ஹோஸ் பைப்கள் வழியாகத் தெளிக்கலாம். இதை எளிதாகச் செய்து முடிக்க இயந்திரங்கள் கிடைக்கின்றன. பல பேர் செய்யக் கூடிய வேலைகளை ஓரிருவரே செய்துவிடலாம். வேகத்திற்கு வேகம். சிக்கனத்திற்குச் சிக்கனம்.
கட்டடங்களின் உள், வெளிப் பூச்சு வேலைகளை இயந்திரம் கொண்டு எளிதாகச் செய்து முடித்துவிடலாம். தேவைப்படும் இடங்களுக்கு எளிதாகக் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் சக்கரங்களுடன் அமைக்கப்படும் இயந்திரங்கள் கிடைக்கின்றன. 
கூடுதல் விவரங்களுக்கு:

FAIRMATE CHEMICALS LIMITED
8/1, “Sai Sudha”, Arunoday Society , Alkapuri, 
Vadodara - 7 , Tel. : +91 265 2358173-74, 2331193
Fax : +91 265 2338733 , Email : sales@fairmate.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  Empty Re: கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்

on Thu Jul 02, 2015 2:44 am
கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  11037459_925815230816681_3321539393978826961_n

ஸ்பீடு வேலைகளுக்கு ஸ்ப்ரேயிட் கான்கிரீட்
--------------------------------------------------------------------------------

கட்டுமானத்துறையின் வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்கள்தான் என்று நினைத்தால் தவறு. அதிவிரைவாகக் கட்டி முடிக்கப்படும் கட்டிடங்களையும் கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு கைகாட்ட லாம். அப்படி வெகு வேகமாக கட்டுமானப் பணிகள் முடிக்க வேண்டுமெனில், புதிய கட்டுமான முறைகள், அதி நவீன கட்டுமானஉபகரணங்கள் இவற்றுடன் அதி வேகமாகபணிகளை முடிக்க வல்ல கட்டுமான பொருட் களும் கையாளப்பட வேண்டும்.

அவற்றுள் ஸ்பிரேடு கான்கிரீட் (Sprayed Concrete) என்பது அதிநவீன உபகரணத்துடன் கூடிய புதிய கட்டுமான முறையாகும். ஸ்பிரே என்றால் தெளித்தல். கான்கிரீட்டை தெளிக்கும் முறைதான் ஸ்பிரேடு கான்கிரீட் முறை என்று அழைக்கிறார்கள். 
கான்கிரீட் போடுவது என்றால், கலவை போடுவது, அதனை சென்டரிங் செய்யப்பட்ட இடத்தில் கொண்டு போய் கொட்டுவது, பின்னர் அந்த கலவையை வைப்ரேட்டர்களைக் கொண்டு காம்பாக்டிங் செய்வது இந்த முறைதான் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் நேரம், பணியாளர் எண்ணிக்கை போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால், இந்த முறையைவிட வேகமாக செயல்பட வல்ல வேறொரு முறையை நோக்கித்தான் நமது எண்ணங்கள் இருக்கும். அப்படி விரைவாகவும் அதேநேரம் உறுதியாகவும் கான்கிரீட்களைப் போடுவற்கான நவீன முறைதான் ஸ்பிரேடு கான்கிரீட்.

இதற்கு தேவை மூன்றே விதமான எளிமையான விஷக்ஷயங்கள்தான். ஒன்று கான்கிரீட் கலவை, இரண்டு இதற்கான மனித சக்தி, மூன்றாவது தெளிப்பான் இயந்திரம். இம்மூன்றின் ஒருங்கிணைப்பில் அமைவதுதான் நமது கட்டுமானத்தின் ஸ்பிரேடு கான்கிரீட்டின் தரமும் உறுதியும். 

இன்றைய வேகமான வாழ்க்கையில், வாகனப் பெருக்கமும், குறைவான இட வசதியும் நிலத்திற்கடியில் சுரங்கம் தோண்டி பாதை அமைத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சுரங்கப் பாதை கட்டுமானங்களுக்கு வழக்கமான கான்கிரீட் தொழிற்நுட்பங்கள் கைகொடுக்காது. எனவேதான் ஸ்பிரேடு கான்கிரீட் தொழிற்நுட்பம் இதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 
ஸ்பிரேடு கான்கிரீட் தொழிற்நுட்பம் 3 பிரிவுகளை உள்ளடக்கியது. 

அவையாவன 
1. கான்கிரீட்டை ஸ்பிரே செய்யும் முறை 
2. ஸ்பிரேடு கான்கிரீட்டிற்கான பொருட்கள்
3. ஸ்பிரேடு கான்கிரீட்டிற்கான சிஸ்டம்.

இந்த மூன்று அம்சங்களுமே இத் தொழிற்நுட்பத்தின் அடிப்படைகள். இதில் ஸ்பிரேடு கான்கிரீட் கலவைக்கான பொருட் கள் இந்த கான்கிரீட் எங்கு பயன்படப் போகிறது என்பதைப் பொறுத்து மாறும். ஸ்பிரேடு கான்கிரீட் பயன்பாட்டிற்கு வந்த வருடம் 1914. ஆனால் தற்போதுதான் நவீன கட்டுமானத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

ஸ்பிரேடு கான்கிரீட் செயல்முறைகளில் இரண்டு வகைகள் உள்ளன. 
1. டிரை ப்ராஸஸ் ஸ்பிரேடு கான்கிரீட் ((Dry Process Sprayed Concrete) ) 
2. வெட் ப்ராஸஸ் ஸ்பிரேடு கான்கிரீட் (Wet Process Sprayed Concrete)

கான்கிரீட் கலவை தயாரிக்கப்பட்டு முறையான வாகனங்களின் மூலம் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஸ்பிரேடு கான்கிரீட் இயந்திரத்திற்கு மாற்றப்படுகிறது. பின்னர் நாசில் (Nozzle) வைத்து, உயர் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பைப் மூலம் சக்தி வாய்ந்த மோட்டாரின் உதவியால் கான்கிரீட் கலவை சென்ட்ரிங் செய்யப்பட்ட பரப்பின் மீது பாய்ச்சப்பட்டு காம்பாக்டிங் செய்யப்படுகிறது. இப்படி பாய்ச்சப்படும் கான்கிரீட்டை அடர்வான மற்றும் ஈரமான கான்கிரீட், அடர்த்தி குறைந்த மற்றும் உலர்வான கான்கிரீட், அடர்த்தி குறைந்த ஈரமான கான்கிரீட் என பல வகைகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு வகை கலவைக்கும் ஏற்றவாறு பரப்பும் முறைகள் மாறுபடும். எந்திரத்தின் பிரக்ஷஷர் ஸ்பீடை அதிகரித்தால் அதிக உயரம் வரை கூட கான்கிரீட்டை பாய்ச்ச முடியும். அதே போல் எந்த வடிவத்திற்கும், ஏன் நேர் மேல் தளத்திற்கும் கூட இந்த கான்கிரீட்டை பாய்ச்சி சமன் செய்திட முடியும். 
பலவகையான கட்டுமானப் பணிகளுக்கு இந்த ஸ்பிரேடு கான்கிரீட்டை பயன்படுத்தலாம். கான்கிரீட் ரிப்பேர்கள் செய்வதற்கு, நிலத்தடி சுரங்கப்பாதை மற்றும் சுரங்கம் சம்பந்தமான வேலைகளில் இதன் உபயோகம் அபரிமிதமானது. 

இந்த கான்கிரீட்டின் ஒட்டும் தன்மையினால் எத்தகைய வடிவ பரப்பிலும் பயன்படுத்தலாம். மேடு பள்ளமான சீரில்லாத பரப்புகளில் கூட பயன்படுத்தலாம்.கான்கிரீட்டின் தடிமானத்தை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்
இத்தகைய சிறப்புத் தன்மைகள் மட்டுமல்ல ஸ்பிரேடு கான்கிரீட் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தித் தருகிறது. குறைந்த தொழிலாளர்களே தேவைப்படுவதால் மிகவும் சிக்கனமான முறையும் கூட. ஆனால் இதன் வெற்றிக்கு முக்கியமான இரண்டு காரணிகளை நாம் மறந்துவிடக்கூடாது. ஒன்று இதற்கான இயந்திரவியல் தொழிற்நுட்பம், மற்றொன்று திறமையான பணியாளர்கள். இந்த இரண்டும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால்தான் தரமான கட்டுமானம் சாத்தியம்.
Sponsored content

கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்  Empty Re: கட்டிட சுவர்களுக்கு மேற்பூச்சுக்கு 20 டிப்ஸ்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum