தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
30 வகை சட்னி , துவையல் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:04 pm
30 வகை சட்னி , துவையல் Wrap
''சூடான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா,30 வகை சட்னி , துவையல் P105தேவாமிர்தம்!'' என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள், இந்த எலெக்ட்ரானிக் யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் திருப்தி செய்ய உதவுவதோடு... டிபனுக்கு தொட்டுக்கொள்ள வித்தியாசமான சட்னிகளை வழங்கவும் '30 வகை சட்னி - துவையல் ரெசிபி’களுடன் களம் இறங்கும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்,
''சுவையில் அசத்தும் இந்த ரெசிபிகளை... ஜீரண சக்தியை அதிகரிக்கும், நினைவாற்றலை வளர்க்கும், சத்துக்கள்மிக்க பொருட்களையும் சேர்த்து தயாரித்துள்ளேன்'' என்கிறார் உற்சாகம் பொங்க!  
குறிப்பு: காரம் குறைவாக இருப்பதை விரும்புபவர்கள், மிளகாயின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம்.


பச்சைப்பயறு துவையல்
தேவையானவை: பச்சைப்பயறு - அரை கப், பூண்டு - ஒரு பல், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 1
செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.


எள் துவையல்
தேவையானவை: கறுப்பு எள் - அரை கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 2
செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
எள், இரும்புச்சத்து மிக்கது.


வல்லாரை சட்னி
தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல்,  - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 3
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.  


சீரக துவையல்
தேவையானவை: சீரகம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 4
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.
இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:04 pm
பீர்க்கங்காய் தோல் துவையல்
தேவையானவை: பீர்க்கங்காய் தோல் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 5
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து துவையலுடன் சேர்க்கலாம்.


வல்லாரை துவையல்
தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கப், பூண்டு - 2 பல், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 6
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி... உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.


பிரண்டை துவையல்
தேவையானவை: நார் நீக்கி, துண்டுகளாக்கிய பிரண்டை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, புளி - கோலி அளவு, பூண்டு - 2 பல், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 7
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து (உப்பு நீங்கலாக) வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பிரண்டை எலும்புக்கு பலம் தரும். பசியின்மை, வாய்க்கசப்பு போக்கும்.


புளி துவையல்
தேவையானவை: புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - கால் கப், தனியா - 2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  
30 வகை சட்னி , துவையல் 9
செய்முறை: காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா மூன்றையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான துவையல் தயார்!


கத்திரி துவையல்
தேவையானவை: பெரிய கத்தரிக்காய் - ஒன்று, புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 10
செய்முறை: கத்திரிக்காயின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, தணலில் சுட்டு தோல் உரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை வதக்கி, ஆறியதும் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும் (மையாக அரைக்க வேண்டாம்). நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:05 pm
பருப்பு துவையல்
தேவையானவை:  கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 11
செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி... கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து... பருப்புகள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.


வேப்பம்பூ துவையல்
தேவையானவை: வேப்பம்பூ - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), வெல்லம் - சிறிய துண்டு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 12
செய்முறை: வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் இதனுடன் உளுத்தம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இதில் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
வேப்பம்பூ, வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.


கொள்ளு துவையல்
தேவையானவை: கொள்ளு - அரை கப், பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 13
செய்முறை: சுத்தம் செய்த கொள்ளு, மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் (உப்பு தவிர) வெறும் வாணலியில் வறுத்து பின்னர் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்தால்... கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


வதக்கிய தேங்காய் துவையல்
தேவையானவை:  தேங்காய் துருவல் - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை.  
30 வகை சட்னி , துவையல் 14
செய்முறை: தேங்காய் துருவலை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து வைக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும்.
இந்த துவையலை சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். தேங்காயை வதக்கி இருப்பதால், பயணத்தின்போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.


கதம்பத் துவையல்
தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3,  பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 15
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைக்கவும்.
கஞ்சி, மோர் சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:05 pm
எள் சட்னி
தேவையானவை: வெள்ளை எள் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 16
செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.


இஞ்சி சட்னி
தேவையானவை: சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 17
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.
இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.


பாம்பே சட்னி
தேவையானவை: பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 5, பொட்டுக்கடலை மாவு - மூன்று டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 18
செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பொட்டுக்கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்து வரும்போது, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


சௌசௌ சட்னி
தேவையானவை: சிறிய சௌசௌ, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பச்சை மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 19
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சௌசௌ சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.


முள்ளங்கி சட்னி
தேவையானவை: முள்ளங்கி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - விரல் நீளத் துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 20
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் முள்ளங்கி, இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்களைக் கூட இந்த சட்னி கவரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:05 pm
கேரட் சட்னி
தேவையானவை: கேரட் - 2, வெங்காயம் - ஒன்று, புளி - கோலி அளவு, பச்சை மிளகாய் - 5, பூண்டு - 2 பல், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 21
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.


ஆப்பிள் சட்னி
தேவையானவை: காய் வெட்டாக உள்ள புளிப்பு ஆப்பிள், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 22
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலையை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த  சட்னியுடன் சேர்க்கவும்.


முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: துருவிய கோஸ் - அரை கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 23
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... துருவிய கோஸ், நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.


தக்காளி  புதினா சட்னி
தேவையானவை: தக்காளி - 2, புதினா - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பெரிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 24
செய்முறை: தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம்.


கத்திரி  உருளை சட்னி
தேவையானவை: கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு - (சிறியது), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 25
செய்முறை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்தால்... இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற கத்திரி - உருளை சட்னி ரெடி.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:06 pm
தூதுவளை துவையல்
தேவையானவை:  தூதுவளை இலை - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6, புளி - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 26
செய்முறை: தூதுவளை இலையை முள் நீக்கி சுத்தம் செய்யவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, தூதுவளை இலையை வதக்கவும். சிறிது வதங்கியதும் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
இது, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட ஏற்றது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும். தொண்டைக் கட்டு குணமாகும்.


தனியா சட்னி
தேவையானவை:  தனியா - கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 27
செய்முறை: வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி


பெரிய நெல்லி சட்னி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.
30 வகை சட்னி , துவையல் 28
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.


கோவைக்காய் சட்னி
தேவையானவை:  கோவைக்காய் - 12, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 29
செய்முறை:  கோவைக்காய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.


சுரைக்காய் சட்னி
தேவையானவை: சுரைக்காய் (நறுக்கியது) - கால் கப், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 30
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.
நீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Sat Jun 20, 2015 10:06 pm
புடலங்காய் சட்னி
தேவையானவை:  புடலங்காய் துண்டுகள் - அரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம் - ஒன்று, புளி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை சட்னி , துவையல் 31
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, புடலங்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்த்தால்... புடலங்காய் சட்னி ரெடி!
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி


30 வகை சட்னி , துவையல் Kitchan-rani-aஆச்சி கிச்சன் ராணி
க்ராப் மசாலா
தேவையானவை: நண்டு (க்ராப்) - அரை கிலோ (சுத்தம் செய்யவும்), வாழைக்காய், தக்காளி - தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 25 கிராம், பச்சை மிளகாய் (சிறியது) - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, சோம்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று, ஆச்சி குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் - கால் மூடி, மிளகு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு.
30 வகை சட்னி , துவையல் Kitchanraniசெய்முறை: வாழைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.  தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த நண்டுடன் ஆச்சி குழம்பு மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி...  சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்க்கவும். பின்பு வாழைக்காயை சேர்த்து ஒன்றிரண்டு  நிமிடம் வதக்கவும். இதனுடன் பிசிறி வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி. நன்கு கொதிக்கவிடவும். இது கிரேவி பதத்துக்கு வந்தவுடன் இறக்கினால்... க்ராப் மசாலா தயார்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சூப்பர் காம்பினேஷன்.
- வி.கிருஷ்ணவேணி, ஓசூர்
படம்: ஆ.முத்துக்குமார்
Sponsored content

30 வகை சட்னி , துவையல் Empty Re: 30 வகை சட்னி , துவையல்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum