தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சிலுவையில் 7 வார்த்தைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிலுவையில் 7 வார்த்தைகள் Empty சிலுவையில் 7 வார்த்தைகள்

Fri Apr 03, 2015 6:52 am
சிலுவையில் 7 வார்த்தைகள் 603738_1613265575562241_370376008611872704_n

இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசின ஏழு வார்த்தைகள்

1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34) :- 

ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி, இவர்களது இருதயத்தைக் கடினப்படுத்தி, இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் கொடூரமாகச் சிலுவையில் அறைய மாட்டார்கள். ஆகவே தான் இயேசு, ‘இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்துவிட்டார்கள்’ என்று சொல்லி மன்னிக்கிறார். அது மட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனு வர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவைச் சிலுவையில் பலியாக்கக் கடவுள் சித்தம் கொண்டிருந்தார். ஆகவேதான் இந்தச் சம்பவம் நடந்தது.

2 “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43) :- 

இரண்டு திருடர்களுக்கிடையே இயேசு சிலுவையில் தொங்கினார். அதில் ஒருவன் இந்த நல்லவருக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து, அவர் யார் என்பதையும், இது ஏன் அவருக்குச் சம்பவித்தது என்பதையும் புரிந்துகொண்டு, அவனது மரணத் தறுவாயில் மனம் திரும்புகிறான். இன்னொருவனோ, வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தது மட்டுமல்லாமல், சாகும்போதும் திருந்தாமல் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டு, “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்” என்று இகழ்ந்து பேசி, மேலும் குற்றம் செய்கிறான். இதைக் கண்ட அடுத்தவன் இவனைக் கடிந்துகொண்டு, “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்கிறான். அது மட்டுமல்லாமல், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று இயேசுவிடம் கூறினான். இப்படி தன்னுடைய வாழ்க்கையில் திருந்தும்படியாக அவனுக்குக் கொடுக்கப்பட்ட அந்தக் கடைசி வாய்ப்பை இவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். பாவ மன்னிப்பைப் பெற்று, மோட்சத்திற்குத் தகுதியுள்ளவனாகி விட்டான். இன்னொருவனோ, அவனுக்கு மரணத் தறுவாயில் கொடுக்கப்பட்ட இறுதி வாய்ப்பையும்கூடத் தவற விட்டுவிட்டான். இன்றைக்கும் மனிதர்கள் இப்படி இரண்டு விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு மனிதர்கள் மூலம் காண முடிகிறது. 

3 “இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27) :- 

இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான். மேலும், சிலுவையின் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன், “உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போம்” என்று தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு அறிவித்திருந்தார். இதெல்லாம் அறிந்தவளாகத்தான் இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள். ஆகவேதான் அவள் மார்பில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு, ஒப்பாரி வைக்கவில்லை. இயேசுவும் இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், அந்த வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத் தேவையானதைச் செய்தார். சிலுவையில் தொங்கும்போதுகூட, “உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற கட்டளையின்படி தன் தாயை யோவானிடத்தில் ஒப்படைத்தார். இது இயேசு கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

4 “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46) :- இதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம்:-

இயேசு ஏன் இப்படி மிகுந்த சத்தமிட்டுக் கதற வேண்டும் என்றும், கடவுளுடைய சித்தத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு மரிக்க வேண்டியதுதானே என்று சிலர் கூறுகிறார்கள். உலகத்தில் எவரும் இதுவரை இப்படிப்பட்ட ஓர் கோர மரணத்தை அனுபவித்ததில்லை, அனுபவிக்கப் போவதுமில்லை. உலகத்தின் பாவம் முழுவதும் அவர்மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது. அந்தப் பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக் கொண்டார். இது எவருமே அறிந்திராத சொல்லொண்ணா வேதனையை அவருக்குத் தந்தது. மேலும் இவர் நித்திய நித்தியமாக கடவுளோடுகூட இருந்த தேவகுமாரன். ஆனால், இவர் மனுக் குலத்தின் பாவத்தை சுமந்தபோது, பாவத்தை நோக்கிப் பார்க்கக்கூடாத சுத்தக் கண்களை உடைய தேவன் இவரிடத்தில் இருந்து தமது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று. இது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப் பெரிய வேதனையை இவருக்கு உண்டாக்கிற்று. ஆனால் இதன் மூலம் மனுக் குலத்திற்கு மிகப் பெரிய நன்மைகளும் உண்டாயிருக்கிறது. கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத் தத்தங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்குத் தத்தம் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குத் தத்தம்தான். நம்மில் ஒருவரையும் கடவுள் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால்தான், இந்த ஒருவர் மீது நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமத்தி, இவரைச் சிலுவையில் அதன் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல் இருப்பதற்காகவே கடவுள் இயேசுவைச் சிலுவையில் கைவிட்டார். தாங்கிக்கொள்ள முடியாத இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறினார். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத காரணத்தினால்தான் சிலர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரால் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று கேட்கிறார்கள்.

5 “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28) :- 

வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார். பழைய ஏற்பாட்டிலே “என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது” (சங்கீதம் 22:15), “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) என்று சிலுவையைக் குறித்து ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க வாங்கிக்கொண்டது நம்மீது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.

6 “முடிந்தது” (யோவான் 19:30) :- 

கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் காட்ட ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள். அதாவது, இந்தக் காலத்தில் ரசீதுகளில் ‘PAID’ என்று முத்திரை குத்துவதுபோல, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஆகவே இயேசு சிலுவையில் தொங்கின போது ‘முடிந்தது’ என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது. ‘முடிந்தது’ என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள் அடங்கியிருக்கின்றன.

(i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது. 
(ii) பழைய ஏற்பாட்டில் அவருடைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை தீர்க்கதரிசன காரியங்களும் நிறைவேறி முடிந்தது. 
(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது. 
(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது. 
(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது. (vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

7 “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) :-

இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அதாவது, அவர்கள் அவரைக் கொலை செய்ததினால் அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவாதிபதி. ஜீவனைக் கொடுக்கிறவர். அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக்கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். பொதுவாகச் சிலுவையில் மரிப்ப வர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை தொங்குமாம். ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார். இவர்கள் சாகடித்ததால் அவர் சாகவில்லை. அவரே தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதை இது காட்டுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் கடவுள் காலகாலமாய்த் திட்டமிட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பித்த ஒரு சரித்திரச் சம்பவம் என்பதை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்ப்பது அவசியம்.


நன்றி: விசுவாத்தில் வாழ்க்கை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிலுவையில் 7 வார்த்தைகள் Empty Re: சிலுவையில் 7 வார்த்தைகள்

Fri Apr 03, 2015 11:00 pm
இன்று புனித வெள்ளி என்பதால் இந்த பதிவு
இயேசு கிறிஸ்துவுக்காக யாரும் அழ வேண்டியதில்லை
அதற்க்கு பதிலாக சந்தோசபடுங்கள் அவருக்கு (இயேசு கிறிஸ்து) நன்றி செலுத்துங்கள்
ஏனென்றால்
அவர் மரிக்கவில்லை என்றால் நமக்கு பிதாவாகிய தேவனுக்கு முன்பாக வாழ்வு இல்லாதிருந்திருக்கும் .....
நாம் இழந்த அடையாளத்தை மீட்டார் 
நாம் இழந்த அதிகாரத்தை மீட்டார்
நாம் இழந்த மகிமையை மீட்டார்
நாம் இழந்த மேன்மையை மீட்டார் 
நாம் இழந்த வல்லமையை மீட்டார்
நாம் இழந்த வாழ்வை மீட்டார்
நாம் இழந்த சமாதனத்தை மீட்டார்
நாம் இழந்த சந்தோசத்தை மீட்டார்
நாம் இழந்த நோயற்ற வாழ்வை மீட்டார் 
நாம் இழந்த ஐசுவரியன்களை மீட்டார்
நாம் இழந்த அறிவை மீட்டார்
நாம் இழந்த ஞானத்தை மீட்டார் 
இப்படி ஏராளமானவைகளை மீட்டார்
ஆனந்த கண்ணீர் விடுங்கள் <<>> சோக கண்ணீர் விடாதீர்கள் ........ சோக கண்ணீர் விடாதீர்கள் . சோக கண்ணீர் விடாதீர்கள் .
ஆனந்தத்தை கொண்டாடுங்கள் >>>>>>>>>>>சத்தியத்தை அறிந்துள்ளீர்கள் கிறிஸ்துவின் ஆவிஉடையோரே......
இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி உமக்கு துதிகள் செலுத்துகிறோம் ...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிலுவையில் 7 வார்த்தைகள் Empty Re: சிலுவையில் 7 வார்த்தைகள்

Fri Apr 03, 2015 11:06 pm
சிலுவையில் 7 வார்த்தைகள் 11026800_875800092476088_3561845152948060000_n

1. இயேசு மரித்தார் என்று அறிந்து கொண்டுதான், அவரின் சரீரத்தை, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பிடம் ரோம ஆளுநர் பிலாத்து ஒப்புவித்தான் (மாற்15:43, 44,45; மத்27:58; யோ19:31-34).

2. இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள்: “இயேசுவை மரிக்கவிடாமலே அல்லா அவரை வானத்திற்கு எடுத்துக்கொண்டார்” என்று. கொல்லும்படியாகவே இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க, அவரை அல்லா எடுத்துக்கொண்டு போயிருந்தால் அந்த விபரம் ரோம சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டுமல்லவா? இல்லையே!

3. சரித்திரப் பூர்வமாகவும், வேதம் மூலமாகவும், இஸ்லாமியரின் கருத்துக்கு ஆதாரமே இல்லை. ஒரு சில இஸ்லாமியரின் கருத்து: “இயேசுவுக்குப் பதிலாக அவரைப்போன்ற இன்னொருவர் தான் சிலுவையிலறையப்பட்டார்” என்று பொய்ச்செய்தியை பரப்புவது காவல்துறையில்-அதுவும் விசேஷமாய் உளவு துறையில் பேர்போன ரோம சர்க்காருக்கு இந்த ஆதாரமில்லாத செய்தி மரியாதைக் குறைவைத்தான் உண்டாக்கும். மேலும், எந்த யூதர்கள் அவரை சிலுவையிலறைந்து கொல்ல நினைத்தார்களோ, அதே யூதர்களே பிலாத்துவின் ஒப்புதலோடு அவரின் கல்லறையை முத்திரைபோட்டு காவல் காத்தார்கள் (மத்27:62-66) என்பதை இன்றுவரை யூதர்கள் யாரும் மறுக்கவில்லை என்பதால் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்பது உண்மை யிலும் உண்மையே! மேலும், நாத்திகர்களும் இயேசு மரித்தார் என்பதை ஏற்கிறார்கள்; மறுக்கவில்லை.

3. இயேசுவின் இறுதி மூச்சுவரைக்குமல்லாமல் மரித்த இயேசுவை சிலுவையில் இருந்து இறக்கும்வரைக்கும் யூதத்தலைவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போயிருக்க வாய்ப்புக்கள் இல்லை.

4. இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் இல்லை என்று போதிக்கும் இஸ்லாமியரின் குரான் அத்தியாயம் 19:33ம் வசனத்தில், குழந்தை இயேசு பேசிய வார்த்தையைப் பாருங்கள்: "நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும்நாளிலும் என்மீது ஸலாம் இருக்கிறது''. இயேசுவே இப்படிச் சொன்னாரென்று குரானிலே எழுதி வைத்துவிட்டு, அதை மறைத்துப் பேசுவது எவ்வளவு பெரிய பாவம்? சிந்தியுங்கள்.

5. இயேசு அல்லாவின் வார்த்தை என்றும் (குரான் 3:39; 3:45; 4:71),
அவர் அல்லாவின் உயிர் என்றும் (குரான்4:171; 21:91;66:12) சொல்லியிருக்க இவர் நிச்சயமாய் தேவனென்றும், தான் சொன்னபடியே மரித்து, உயிர்த்தார் என்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் தெளிவாய் விளங்கிக்கொள்கிறோம். மரணத்தை, தேவனைத்தவிர வேறுயாரும் ஜெயிக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை. ஆமென்.

6. மேலும், குரான் 4:159ல் "வேதமுடை யோரில் ஒவ்வொரு வரும், அவர் மரணிப்பதற்குமுன், அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள்'' என்று உள்ளதால், வேதத்தில் யோவான் 5:39ல் சொன்னபடி வேத வாக்கியங்களை ஆராய் ந்து பார்ப்போர் ஒவ்வொருவரும் இயேசுவின் மரணத்திற்கு முன் கண்டிப்பாய் நம்புவார்கள் எனப் பொருள் தருகிறது. எனவே இயேசு மரித்தார் என்று குரானிலும் உள்ளதை நாம் அறிகிறோம்.

7. எந்த யூதர்கள் அவரை சிலுவையிலறைந்து கொல்ல நினைத்தார்களோ, அதே யூதர்களே பிலாத்துவின் ஒப்புதலோடு அவரின் கல்லறையை முத்திரைபோட்டு காவல் காத்தார்கள் (மத்27:62-66) என்பதை இன்றுவரை யூதர்கள் யாரும் மறுக்கவில்லை என்பதால் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்பது உண்மை யிலும் உண்மையே! மேலும், நாத்திகர்களும் இயேசு மரித்தார் என்பதை ஏற்கிறார்கள்; மறுக்கவில்லை.

இறுதியாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணிக்கவில்லை என்று சொல்வது சாத்தானின் உச்சக்கட்ட பொய் ஆகும்

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து காலையில் இருந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்
உங்கள் சகோதரன் பால் பிரபாகர் - பெங்களூர்.
Sponsored content

சிலுவையில் 7 வார்த்தைகள் Empty Re: சிலுவையில் 7 வார்த்தைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum