#வாழ்வின்_யதார்த்தம்
Sat Jan 31, 2015 11:58 pm
உயரப் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமானியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார்.
”நான் சிறுவனா யிருந்த போது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப் பேன். ஆகாயத்தில் விமானங்கள் பறந்தால் அண்ணாந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு நாள், விமானியாக வேண்டும் என்று கனவு காண்பேன்” என்றார்.
துள்ளிக் குதித்தார் துணை விமானி. ”நினைத்ததை முடித்து விட்டீர்கள். இப்போது சந்தோஷம்தானே” என்றார்.
‘இல்லை’ என்றார் தலைமை விமானி. ”இப்போது விமானத்தில் இருந்து கீழே பார்க்கும்போதெல்லாம், அந்தக் குளக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாதா என்று யோசிக்கிறேன்”.
பலருக்கு முன்னாலும் மலைபோல் நிற்கிற பிரச்சினை இதுதான்.
குறிப்பிட்ட இடமொன்றை சிரமப்பட்டு எட்டுவது. இந்த இடம் எனக்குப் பொருந்தவில்லையென்று தலையை முட்டுவது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|