தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பெர்ஃப்யூம் (perfume) பிரியரா நீங்கள் ...????? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பெர்ஃப்யூம் (perfume) பிரியரா நீங்கள் ...????? Empty பெர்ஃப்யூம் (perfume) பிரியரா நீங்கள் ...?????

Sat Nov 01, 2014 6:41 pm
பெர்ஃப்யூமை எப்படி எவ்வளவு பயன்படுத்த வேண்டும்...!!

வாசனை திரவியங்களானது நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை என்பதால்,வாசனை திரவியங்களை பயன்படுத்தும் நபர்கள் எப்போதும் வாசனை உடலில் இருக்கவேண்டும் என நினைத்து டென்சனாகி, அளவாக பயன்படுத்த வேண்டிய வாசனை திரவியத்தையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

இதனால் உடலில் இருந்து பெர்ஃப்யூம் நறுமணமானது நீண்ட நேரம் வீசும்.ஆனால், அதே சமயம் கடுமையான தலைவலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, உங்கள் அருகில் வருபவர்கள் உங்கள் மீது வீசும் அதிகப்படியான நறுமணத்தினால் அருகில் வராமலேயே சென்று விடுவார்.

பெர்ஃப்யூம் மணம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவும், பெர்ஃப்யூமை அளவாக பயன்படுத்துவது எப்படி என்பதற்க்கான எளிய வழிமுறைகள் கீழே :

ஆடை அணியும் முன்பே பெர்ஃப்யூம் அடியுங்கள். பொதுவாக அனைவரும் குளித்து முடித்து, ஆடை அணிந்து, தலை சீவி விட்டு, இறுதியில் கிளம்பும் போது தான் பெர்ஃப்யூம் போட்டு செல்வோம். ஆனால் உங்கள் பெர்ஃப்யூம் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமானால், ஆடை அணியும் முன்பே பெர்ஃப்யூம் அடியுங்கள். இப்படி ஈரமாக இருக்கும் போதே பெர்ஃப்யூம் அடித்தால், வாசனையானது நீண்ட நேரம் இருக்கும்.

முதலில் பெர்ஃப்யூம் நீண்ட நேரம் இருக்க வேண்டுமானால், சரியான இடத்தில் அந்த வாசனை திரவியத்தை அடிக்க வேண்டும். அதிலும் எப்போதும் லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்படியான இடத்தில் அடிக்க வேண்டும். உதாரணமாக, அக்குள், கழுத்து, கைகளில் மடங்கும் இடம் போன்ற இடங்களில் அடித்தால், வாசனை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? 

அப்படியானால் நீங்கள் சந்தோஷப்படலாம். ஏனெனில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பெர்ஃப்யூம் அடித்தால், அவர்களின் உடலில் அந்த வாசனையானது நீண்ட நேரம் நிலைத்து இருக்குமாம். ஒருவேளை உங்களுக்கு உலர்ந்த சருமம் என்றால், மாய்ஸ்சுரைசர் தடவிய பின் பெர்ஃப்யூம் அடித்துக் கொள்ளுங்கள். இதனால் நீண்ட நேரம் பெர்ஃப்யூம் வாசனை இருக்கும்.

சிலர் பெர்ஃப்யூம் அடித்த பின்னர் தேய்த்துக் கொள்வார்கள். ஆனால் அப்படி தேய்த்துக் கொள்வதால், வாசனை திரவியத்தில் உள்ள மூலக்கூறுகளானது உடைந்து, எளிதில் காற்றில் கரைந்துவிடும். ஆகவே வாசனை திரவியத்தைப் பயன்படுத்திய பின்னர் தேய்க்க வேண்டாம்

பொதுவாக பெர்ஃப்யூம் அடிக்கும் போது 6 இன்ச் இடைவெளி விட்டு அடிக்க வேண்டும் என்று அந்த பாட்டிலிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஆகவே அதன் படி செய்து, மேற்குறிப்பிட்டுள்ளதை மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் நீண்ட நேரம் பெர்ஃப்யூம் வாசனையானது நிலைத்திருக்கும்...!!!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum