தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Mon Feb 11, 2013 9:10 pm
1. நிரந்திர கணக்கு எண் என்றால் என்ன?
நிரந்தர
கணக்கு எண் என்பது எண் மற்றும் எழுத்தாலான 10 இலக்கங்களைக் கொண்டு,
உறையிடப்பட்ட அட்டை வடிவத்தில் வருமானவரித் துறையால் வழங்கப்படுவதாகும் A
tநிரந்தர கணக்கு எண்ணுக்கு எடுத்துக்காட்டு - AABPS1205E.

{Section 139A(7) Expln (b) and(c)}

2. நிரந்தர கணக்கு எண் வைத்துக்கொள்வதின் அவசியம் என்ன?

வருமானவரித்
துறையோடு கொள்ளும் அனைத்து தொடர்புகளின் போதும் வருமான வரிக்கான கணக்கு
தாக்கலின் போதும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும். ஜனவரி
1, 2005 முதல், வருமானவரி துறைக்கு செலுத்தவேண்டிய அனைத்து
செலுத்தல்களுக்கான ஆவணங்களிலும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவது
கட்டயாமாக்கப்பட்டுள்ளது.
{Section 139A (5) (a) and (b)}

நேரடி
வரிக்கான மத்திய வாரியத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் நிதி சார்ந்த,
அசையா சொத்து அல்லது மோட்டார் வாகனம் வாங்குதல், விற்பனை செய்தல், ஓட்டல்
மற்றும் சிற்றுண்டிக்கு ரூ.25,000/- க்கும் அதிகமாக ரொக்கமாக செலுத்துதல்
அல்லது ஏதாவது அயல் நாட்டிற்கு பயணம் செய்தல் போன்ற பரிமாற்றங்களின்
அனைத்து ஆவணங்களிலும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தொலைபேசி அல்லது கைப்பேசி இணைப்பை பெறுவது போன்றவற்றிற்கும் நிரந்தர கணக்கு
எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைப்போல ரூ.50,000/-
க்கும் அதிகமாக வங்கியில் அல்லது அஞ்சல் நிலையத்தில் காலவைப்பு இட்டு
வைப்பதற்கு மற்றும் ரூ. 50,000க்கு அதிகமாக வங்கியில் ரொக்கமாக
செலுத்துவதற்கும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும்.
{ Section 139A (5) (c) read with Rule 114B}


3. மேற்கண்ட பரிமாற்றங்களில் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவதை வருமானவரித் துறை எவ்வாறு உறுதி செய்து கொள்ளும்?
நிதி
அல்லது பொருளாதார, சார்ந்த பரிமாற்றங்களின் போது, நேரடி வரிக்கான மத்திய
வாரியத்தால் அறிவிக்கப்பட்ட நபர்கள், ஆவணங்களைப் பெறவும், நிரந்தர கணக்கு
எண்ணை சரியாக குறிப்பிடுவதை உறுதிசெய்வதற்கும் சட்டப்படி பொறுப்பானவர்கள் .
{ Section139A (6)}

4. வருமானவரி தாக்கலின் போது நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமா?
ஆம், வருமானவரி தாக்கலில் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும்.

5. நிரந்தர கணக்கு எண்ணை, அதிகாரிகள் எவ்வாறு சரிப்பார்ப்பார்கள்?
வருமானவரித் துறையின் இணையதளத்தில் நிரந்தர கணக்கு எண்ணை சரி பார்ப்பதற்கான வசதி கிடைக்கிறது.

6. யார் நிரந்தர கணக்கு எண் வைத்திருக்க வேண்டும்?
i.
i. வருமானவரி செலுத்துபவர்கள் அல்லது மற்றவர்களின் சார்பாக வருமானவரி
தாக்கல் செய்யும் நபர்கள் நிரந்தர கணக்கு எண்ணை பெற்றிருக்க வேண்டும்.
{Section 139A (1) and (1A)}

ii.
நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டிய நிதி பரிமாற்றங்களில் ஈடுபட
விரும்பும் நபர்களும் கட்டாயம், நிரந்தர கணக்கு எண்ணை பெற்றிருக்க
வேண்டும்.
{ Section 139A (5) (c) read with Rule 114B}

iii.
எந்த நபர்களுக்கும், அவரின் கோரிக்கை அடிப்படையில் அல்லது தன்னிச்சையாக,
வருமானவரி அதிகாரிகள் நிரந்தர கணக்கு எண்ணை ஒதுக்கீடு செய்ய முடியும்.
{Section 139A (2) and (3)}

7. ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தர கணக்கு எண்ணை பெற அல்லது பயன்படுத்த முடியுமா?
ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தர கணக்கு எண்ணை பெறுவது அல்லது வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
{Section 139A (7)}

8. நிரந்தர கணக்கு பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
நிரந்தர
கணக்கு எண் சார்ந்த பணிகளை செம்மைபடுத்த, வருமானவரி அலுவலகம் இருக்கும்
நகரங்களில், யூடிஐ முதலீட்டாளர் சேவை மையங்களுக்கும் (UTI Investor
Services Ltd - UTIISL), டின் மையங்களிலிருந்து (TIN Facilitation Centers)
சேவைகளை அளிப்பதற்கு நேஷனல் செக்யுரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெட்
(என்எஸ்டீஎல்), வருமானவரித் துறை அங்கீகாரம் அளித்துள்ளது. நிரந்தர கணக்கு
எண் பெற விண்ணப்பிப்பவர்கள் வசதிக்காக, பெரு நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட
மையங்களை இவை நடத்தி வருகின்றன.


9. நிரந்தர கணக்கு எண் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? நிரந்தர கணக்கு எண் பெற வெள்ளை தாளில் விண்ணப்பிக்க முடியுமா?
நிரந்தர
கணக்கு எண் பெற படிவம் 49-A பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
வருமானவரித் துறை, யூடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டீஎல் இணையதளத்திலிருந்து
விண்ணப்பபடிவம்-49A ஐ பதிவிறக்கம் செய்தல், (www.utiisl.co.in" target="_blank" rel="nofollow">www.incometaxindia.gov.in,www.utiisl.co.in
or tin.nsdl.com), அச்செடுத்தல், நகலெடுத்தல் (A4 அளவைக்கொண்ட 70 ஜீஎஸ்எம்
தாளில்), அல்லது மற்ற வழிகளில் பெறலாம். நிரந்தர கணக்கு எண் சேவை மையங்கள்
மற்றும் டின் வசதி மையங்களிலும் விண்ணப்ப வடிவங்கள் கிடைக்கின்றன.


10. எங்கிருந்தும் பெறப்படும் படிவம் 49A –ஐ பயன்படுத்த முடியுமா?
ஆம்,
வருமானவரித் துறை நிரந்தர கணக்கு எண் சேவை மையம் மற்றும் டின் வசதி
மையங்களைத் தவிர்த்து மற்ற எந்த வகையிலிருந்தும் பெறப்பட்ட படிவம் 49A ஐ
விண்ணப்பிக்க பயன்படுத்தலாம். இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவம்-49A ஐ
பதிவிறக்கம் செய்தல், (www.utiisl.co.in" target="_blank" rel="nofollow">www.incometaxindia.gov.in,www.utiisl.co.in
or tin.nsdl.com), அச்செடுத்தல், நகலெடுத்தல் (A4 அளவைக்கொண்ட 70 ஜீஎஸ்எம்
தாளில்), அல்லது மற்ற வழிகளில் பெறலாம். நிரந்தர கணக்கு எண் சேவை மையங்கள்
மற்றும் டின் வசதி மையங்களிலும் விண்ணப்ப வடிவங்கள் கிடைக்கின்றன.


11. இணையம் மூலமாக நிரந்தர கணக்கு பெற விண்ணப்பிக்க முடியுமா?
ஆம்,
இணையம் மூலமாக புதிய நிரந்தர கணக்கு எண் பெற விண்ணப்பிக்க முடியும்.
முன்னரே இருக்கும் நிரந்தர கணக்கு எண்ணில் திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய
கோரிக்கை விடுத்தல் அல்லது புதிய நிரந்தர கணக்கு எண் அட்டைக்கான கோரிக்கை
ஆகியவற்றுக்காகவும் இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியும். மேலும் அதிக
விவரங்களை பெறுவதற்கு (www.tin-nsdl.com) –க்கு செல்லவும்.


12. நிரந்தர கணக்கு எண்ணை விரைவில் ( தட்கல் முறையில்) பெறுவது எப்படி?
இணையம்
மூலமாக நிரந்தர கணக்கு எண் பெற விண்ணப்பிக்கும் போது ‘முன்மொழிச்
செய்யப்பட்ட’ கடன் அட்டை வாயிலாக கட்டணம் செலுத்தினால், முன்னுரிமை
அடிப்படையில் நிரந்தர கணக்கு எண் ஒதுக்கப்பட்டு மின்னங்சல் மூலமாக
அறிவிக்கப்படும்.


13. வருமான வரி நிரந்தர கணக்கு எண் சேவை அல்லது டின் வசதியளிக்கும் மையத்தினை எவ்வாறு நான் கண்டுபிடிக்க முடியும்?
நகரங்களில்
இருக்கும் வருமானவரி நிரந்தர கணக்கு சேவை மையங்கள் அல்லது டின்
வசதியளிக்கும் மையங்கள் உள்ள இடத்தை உள்ளூர் வருமானவரி அலுவலகம்,
என்எஸ்டீஎல் அல்லது யூடிஐ / யூடிஐஐஎஸ்எல் அலுவலகங்கள், அல்லது வருமானவரித்
துறை (www.incometaxindia.gov.in), யூடிஐஐஎஸ்எல் (www.utiisl.co.in) அல்லது என்எஸ்டீஎல் (http://tin.nsdl.com) இணையதளங்களிலிருந்தும் பெற முடியும்.


14. வருமானவரி நிரந்தர கணக்கு சேவை மையங்கள் அல்லது டின் வசதியளிக்கும் மையங்களால் அளிக்கப்படும் சேவைகள் என்ன?
வருமானவரி
நிரந்தர கணக்கு எண் சேவை மையங்கள் அல்லது டின் வசதியளிக்கும் மையங்கள்,
நிரந்தர கணக்கு எண் விண்ணப்ப படிவங்களை (படிவம் 49A) அளிப்பது, 'Request
For New PAN Card Or/ And Changes In PAN Data', படிவங்களை பூர்த்தி
செய்வதற்கு விண்ணப்பதாரருக்கு துணை புரிவது, பூர்த்தி செய்யப்பட்ட
படிவங்களை பெற்று ஒப்புகைச் சீட்டு வழங்குவது போன்ற சேவைகளை அளிக்கின்றன.
வருமானவரித் துறையிடமிருந்து நிரந்தர கணக்கு எண் பெற்ற பிறகு யூடிஐஐஎஸ்எல்
அல்லது என்எஸ்டீஎல் எதுவாக இருந்தாலும், நிரந்தர கணக்கு எண் அட்டையை
அச்சடித்து விண்ணப்பதாரருக்கு வழங்கும்.


15. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத படிவம் 49A – வை நான் சமர்ப்பித்தால் என்னவாகும்?
முழுமையாக
பூர்த்திசெய்யப்படாத மற்றும் குறைபாடுள்ள எந்த நிரந்தர கணக்கு
விண்ணப்பங்களையும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் சேவை மையங்கள் அல்லது டின்
வசதியளிக்கும் மையங்கள் பெறாது. எப்படியாயினும், படிவம் 49A-வை சரியாக
பூர்த்தி செய்வதற்கு 'Request For New PAN Card Or/ And Changes In PAN
Data', விண்ணப்பதாரருக்கு இந்த மையங்கள் உதவி செய்யும்.


16. படிவம் 49A விண்ணப்பத்தோடு என்ன ஆவணங்கள் மற்றும் தகவல்களை சமர்பிக்க வேண்டும்?
a.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் சமீபத்தைய ஒரு வண்ணப் புகைப்படம் (அஞ்சல்தலை
அளவுள்ள, 3.5 சென்டிமீட்டர் X 2.5 சென்டிமீட்டர்) ஒட்டவேண்டும்.
b. விதி 114 – ல் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு ஆவணத்தை அடையாளம் மற்றும் முகவரிச் சான்றாக கண்டிப்பாக வழங்க வேண்டும் மற்றும்
c. வருமானவரித் துறையின் மதிப்பீட்டு அதிகாரியின் பணி மற்றும் குறியீட்டை படிவம் 49A-ல் குறிப்பிட வேண்டும்.


17.
சட்டப்படி வயதுக்கு வராதவர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்ப
விண்ணப்பதாரகள் உட்பட தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அடையாளச் சான்றாக எந்த
ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்?
பள்ளியை விலகல் சான்றிதழின் நகல் அல்லது
மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தின் பட்டம்
அல்லது வைப்பு கணக்கு அல்லது கடன் அட்டை அல்லது வங்கிக் கணக்கு அல்லது
குடிநீர் கட்டணம் அல்லது குடும்ப அட்டை அல்லது சொத்து மதிப்பீட்டின்
வரிக்கான ஆணை அல்லது கடவுச் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது
ஓட்டுனர் உரிமம் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர்
அல்லது நகராட்சி வார்டு உறுப்பினர் அல்லது அதிகாரபூர்வ அலுவலரால்
கையெழுத்து இடப்பட்ட அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பதாரர்
சட்டப்படி வயதுக்கு வராதவராக இருந்தால், அவரின் பாதுகாவலர் அல்லது
பெற்றோர்களின் மேற்கூறப்பட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று அடையாளச் சான்றாக
ஏற்றுக்கொள்ளப்படும் இந்து கூட்டு குடும்பத்தின் சார்பாக நிரந்தர கணக்கு
விண்ணப்பத்திற்காக சமர்ப் பிக்கபட்டிருந்தால் இந்து கூட்டு குடும்ப
கர்த்தாவின் மேற்கூறப்பட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று அடையாளச் சான்றாக
அளிக்க வேண்டும்.


18. சட்டப்படி வயதுக்கு வராதவர்கள் மற்றும்
இந்து கூட்டு குடும்ப விண்ணப்பதாரகள் உட்பட தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின்
முகவரிச் சான்றாக எந்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்?
மின் கட்டணம் அல்லது
தொலைபேசி கட்டண ரசீதின் நகல் அல்லது வைப்பு கணக்கு அல்லது கடன் அட்தை
அல்லது வங்கிக் கணக்கு அல்லது குடும்ப அட்டை அல்லது நிறுவனத் தலைவரின்
சான்றிதழ் அல்லது கடவுச் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது
சொத்து மதிப்பீட்டு வரிக்கான ஆணை அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது வாடகை
ரசீது அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது
நகராட்சி வார்டு உறுப்பினர் அல்லது அதிகாரபூர்வ அலுவலரால் கையெழுத்து
இடப்பட்ட முகவரிச் சான்றிதழ் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.
நிரந்தர
கணக்கு விண்ணப்பதாரர் சட்டப்படி வயதுக்கு வராதவராக இருக்கும் பட்சத்தில்,
சட்டப்படி வயதுக்கு வராதவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோர்களின்
மேற்கூறப்பட்ட ஆவணங்களில் ஏதாவதை ஒன்றை முகவரிச் சான்றாக அளிக்கவேண்டும்.
இந்து
கூட்டு குடும்பத்தின் சார்பாக நிரந்தர கணக்கு விண்ணப்பத்திற்காக சமர்ப்
பிக்கபட்டிருந்தால் இந்து கூட்டு குடும்ப கர்தாவின் மேற்கூறப்பட்ட
ஆவணங்களில் ஏதாவதை ஒன்று முகவரிச் சான்றாக அளிக்க வேண்டும்.


19. மற்ற விண்ணப்பதாரர்கள் முகவரி மற்றும் அடையாளச் சான்றாக என்ன ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்?
நிறுவனங்களின்
பதிவுதாரரால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழின் நகல் அல்லது தொழில் அமைப்பின்
பதிவுதாரரால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழின் நகல் கூட்டாண்மை
உரிமைப்பத்திரத்தின் நகல் அல்லது அறக்கட்டளை பத்திரத்தின் நகல் அல்லது
அறக்கட்டளை ஆணையாளாரால் வழங்கப்பட்ட பதிவு எண்ணின் சான்றிதழின் நகல் அல்லது
ஒப்பந்தத்தின் நகல் அல்லது கூட்டுறவு சொசைட்டியின் பதிவாளர் அல்லது அதற்கு
இணையான வேறு அதிகாரி அல்லது அந்நபரின் அடையாளம் மற்றும் முகவரியை
வைத்திருக்கும் மத்திய அல்லது மாநில அரசு துறையிலிருந்து பெறப்படும் மற்ற
ஏதாவது ஆவணங்களின் நகல்.


20. மதிப்பீடு செய்யும் அலுவலரின் குறியீட்டு எண்ணை” எவ்வாறு கண்டுபிடிப்பது?
நீங்கள்
வருமானவரி தாக்கல் செய்யும் வருமானவரி அலுவலகத்திலிருந்து மதிப்பீடு
செய்யும் அலுவலரின் குறியீட்டை பெறவேண்டும். வருமான வரிக்கான தாக்கல்
செய்திராத விண்ணப்பதாரர், வருமான வரி நிரந்தர கணக்கு எண் சேவை மையங்கள்
அல்லது டின் மையங்கள் அல்லது அதிகார எல்லைக்குள் இருக்கும் வருமானவரி
அலுவலகத்தின் உதவியால் மதிப்பீடு செய்யும் அலுவலரின் குறியீட்டை தேடலாம்.


21. நிரந்தர கணக்கு எண் விண்ணப்பத்திற்கு புகைப்படம் கட்டாயம் தேவையா?
விண்ணப்பதாரர் தனிநபராக இருந்தால் மட்டுமே புகைப்படம் கட்டாயம் தேவை.


22. கையெழுத்து இட இயலாத விண்ணப்பதாரருக்கான வழிகள் என்ன?
இம்மாதிரியான
நேரத்தில், படிவம் 49A – ல் விண்ணப்பதாரரின் இடதுகைப் பெருவிரலின் ரேகை
வைக்க வேண்டும் அல்லது 'Request For New PAN Card Or/ And Changes In PAN
Data' கையெழுத்துக்காக கூறியிருக்கும் இடத்தில், குற்றவியல் நீதிபதி அல்லது
நோட்டரி பப்ளிக் அல்லது அதிகாரப்பூர்வ அதிகாரிகளின் அலுவலக முத்திரையுடன்,
உண்மைக்கான உறுதியளிக்கும் விதமாக கையெழுத்து இட வேண்டும்.


23. பெண் வின்னப்பதாரருக்காக (திருமணமான / விவாகரத்துப்பெற்ற / விதவை உள்பட) தகப்பனாரின் பெயர் கட்டாயமா?
நிரந்தர
கணக்கு எண் விண்ணப்பம் (படிவம் 49A) பூர்த்தி செய்வதற்கு தகப்பனாரின்
பெயர் மட்டும் தேவைப்படுகிறது. பெண் விண்ணப்பதாரர்கள் திருமண நிலை எதுவாக
இருந்தாலும், தகப்பனாரின் பெயர் மட்டுமே கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்


24. 49A படிவத்தில் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிடவேண்டுமா?
தொலைபேசி எண் கட்டாயமாக தேவையில்லை, ஆனால் அளிக்கப்பட்டிருந்தால், விரைவாக தொடர்பு கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.


25.
அயல்நாட்டு இந்தியர் சார்பாக, சட்டப்படி வயதுக்கு வராதவர், செரியான மனநிலை
இல்லாதவர் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளவர்கள் ஆகியவர்கள் சார்பாக
யார் விண்ணப்பிக்க முடியும்?
வருமானவரிச் சட்டம் 1961 பிரிவு 160 கீழ்
அயல்நாட்டு இந்தியர், சட்டப்படி வயதுக்கு வராதவர், மனநிலை சரியில்லாதவர்
மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளவர்கள் மற்றும் இம்மாதிரியான வேறு
நபர்கள், வரி செலுத்துபவர்கள் பிரதிநிதி (Representative Assessee) மூலம்
விண்ணப்பிக்கலாம். இந்த தருணத்தில், பிரதிநிதி வரிசெலுத்துபவர்களால்
நிரந்தர கணக்கு எண்ணுக்காக விண்ணப்பிக்க முடியும்.


26. வருமான
வரித் துறைக்கு நான் விண்ணப்பம் செய்து விட்டேன் ஆனால் எனக்கு என்னுடைய
நிரந்தர கணக்கு எண் விண்ணப்பத்தின் நிலை தெரிய எண்-ண் செய்ய வேண்டும்?
ஆய்கர்
சம்பர்க் கேந்திர (ஏஎஸ்கே)-வை 0124-2438000 என்ற எண்ணில் (அல்லது
தில்லியிலிருந்து 95124-2438000) என்ற எண்ணில் தயவு செய்து தொடர்பு கொள்க. www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தை அடைந்து “உங்கள் நிரந்திர கணக்கு எண் பற்றி அறியுங்கள் 'know your PAN'.

27. வருமான வரி நிரந்தர கணக்கு எண் சேவை மையங்கள் அல்லது டின் வசதியளிக்கும் மையங்களுக்கு ஏதாவது கட்டணங்கள் செலுத்த வேண்டுமா?

ஒரு
நிரந்தர கணக்கு எண் விண்ணப்பத்திற்கு ரூ.85 + சேவை வரி வசூலிப்பதற்க்கான
அங்கீகாரத்தை யூடிஐஐஎஸ்எல் மற்றும் என்எஸ்டீஎல் ஆகியவை பெற்றிருக்கின்றன.
இந்த கட்டணத்தில் மாற்ற இயலா நிரந்தர கணக்கு எண் அட்டைக்கான செலவும்
உள்ளடங்கியது. இந்த தொகையை ரொக்கமாக வருமானவரி நிரந்தர கணக்கு எண் சேவை
மையத்தில் அல்லது டின் வசதியளிக்கும் மையத்தில் செலுத்தலாம்.


28. ஒரு நகரத்திலிருந்து வேறு நகரத்திற்கு நீங்கள் மாறி செல்லும் போது நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?
நிரந்தர
கணக்கு எண் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் மாற்ற முடியாத ஒரு நிரந்தர
எண்ணாக இருக்கிறது. முகவரி அல்லது நகரத்தை மாற்றுவதால், மதிப்பீட்டு
அலுவலரும் மாறலாம். ஆகையால் இந்த மாற்றங்களை கண்டிப்பாக வருமானவரித்
துறையின் நிரந்தர கணக்கு எண் தகவல் திரட்டில் திருத்தங்களுக்காக
அருகாமையில் இருக்கும் டின் வசதியளிக்கும் மையங்களுக்கு அல்லது வருமானவரி
நிரந்தர கணக்கு சேவை மையங்களுக்கு தகவல் அளிக்கவேண்டும். 'Request For New
PAN Card Or/ And Changes In PAN Data’ படிவத்தில் இதற்காக விண்ணப்பிக்க
முடியும்.


29. ஒரு மாதத்திற்கு முன்பு நான்
யூடிடிஎஸ்எல்/என்எஸ்டீஎல் மூலம் நிரந்தர கணக்கு எண் விண்ணப்பம்
செய்திருந்தேன். என்னுடைய வருமானவரி கணக்கு தாக்கலை செய்யவேண்டும் ஆனால்
என்னுடைய நிரந்தர கணக்கு அட்டையை இன்னும் நான் பெறவில்லை

ஆய்கர்
சம்பர்க் கேந்திரத்தை (ஏஎஸ்கே) 0124-2438000 என்ற எண்ணில் ( ல்லது
என்சிஆர்-லிருந்து 95124-2438000) என்ற எண்ணில் தயவு செய்து தொடர்பு கொள்க.
www.incometaxindia.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாக அல்லது pan@incometaxindia.gov.in. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக பெறலாம்.


30. வருமானவரித் துறையியால் முன்னேரே வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் அட்டைகள் செல்லதக்கத்தாக இருக்குமா?
வருமானவரித்
துறையால் ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் அட்டைகள்
தொடர்ந்து செல்லத்தக்கது. நிரந்தர கணக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நபர்களும்
மறுபடியும் நிரந்தர கணக்கு எண்ணுக்காக விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை.


31.
வருமானவரித் துறை எனக்கு நிரந்தர கணக்கு எண் அட்டையை வழங்கிவிட்டது: மாற்ற
இயலா பாதுகாப்பான அட்டையை புதிய அட்டையை நான் பெறமுடியுமா?
மாற்ற இயலா
பாதுகாப்பான புதிய நிரந்தர கணக்கு எண் அட்டையை பெறுவதற்கு 'Request For New
PAN Card Or/ And Changes In PAN Data' என்ற படிவத்தின் மூலமாக
விண்ணப்பத்தை வருமானவரி நிரந்தர கணக்கு எண் சேவை மையம் அல்லது டின்
மையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் முன்னரே நிரந்தர கணக்கு
அட்டை இருப்பதை குறிப்பிடவேண்டும் மற்றும் பழைய நிரந்தர கணக்கு எண் அட்டையை
சமர்ப்பிக்க வேண்டும். இதற்க்கான கட்டணமாக ரூ.60 + சேவை வரியுடன்
செலுத்தவேண்டும்.


32. நிரந்தர கணக்கு எண் பெற நான்
விண்ணப்பித்திருந்தேன், மற்றும் நிரந்தர கணக்கு எண் பெற்றுக்கொண்டேன்.
ஆனால் நிரந்தர கணக்கு எண் அட்டையை பெறவில்லை?
வருமானவரி நிரந்தர கணக்கு
எண் சேவை மையம் அல்லது டின் மையத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்
நிரந்தர கணக்கு எண்ணை 'Request For New PAN Card Or/ And Changes In PAN
Data' படிவத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.


34. நான் இன்று வரி கட்ட விரும்புகிறேன்: ஆனால் என்னிடம் நிரந்தர கணக்கு எண் இல்லை?
புதிய
நிரந்தர கணக்கு எண் ஒதுக்குவதற்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிறது.
எவ்வாறாயினும் இணையம் மூலமாக விண்ணப்பம் செய்து மற்றும் கடன் அட்டை மூலமாக
கட்டணம் செலுத்தியிருந்தால், 5 நாட்களில் பெறமுடியும். இதை மனதில் கொண்டு,
நிரந்தர கணக்கு எண்ணை பெறுவதற்கான வேலைகளை முன்னரே ஆரம்பிப்பது நல்லது.


35. நிரந்தர கணக்கு எண் விண்ணப்பம் சார்ந்த ஐயங்களுக்காக யாரை தொடர்பு கொள்ளவேண்டும்?
இம்மாதிரியான அனைத்து ஐயங்களுக்கும் தொடர்பு கொள்வதற்கு:

யூடிஐஐஎஸ்எல் மூலம்:
The Vice President
IT PAN Processing Centre,
UTI Investor Services Ltd
Plot No. 3, Sector - 11
CBD_ Belapur
Navi Mumbai-400 614
e-mail.- utiisl-gsd@mail.utiisl.co.in
Tel No. 022-27561690
Fax No. 022-27561706

என்எஸ்டீஎல் மூலம்:
The Vice President
Income Tax PAN Services Unit, NSDL
4th Floor, Trade World, A Wing
Kamala Mills Compound,
S. B. Marg, Lower Parel,
Mumbai-400 013
e-mail.- tininfo@nsdl.co.in
Tel No. 022-2499 4650
Fax No. 022-2495 0664

நன்றி: மத்திய அரசு, இந்தியா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty Re: நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Tue Feb 26, 2013 5:37 pm
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account
Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன்
முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில்
முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர
கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர்
தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும்
உள்ளது.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.

4. அதற்கு என்ன செலவாகும்?

இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோ க்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகு ம்.

5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது
(இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)

3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணை யங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
Cool தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின்
மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசி யம்.
10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்ய அவசியம்.
11)சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான
தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போ
து எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட
வேண் டும்.
மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு
செய்யும்போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம். இதற்காக, தற்போது
மைனர்களு க்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இதனால் அனைவரும்
அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு
பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். சிலர் இந்தச்
சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக்
கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம்
அடித்தும் வரு கின்றனர்.
“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப்
பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்
கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண் ணைச்
சமர்ப்பிப்பது கட்டாயமாக் கியுள்ளது.

மேலும், இந்தக் கார்டை
வாங்கி னால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டி யிருக்குமோ
என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந் துள்ளது. உண்மையில், பான் கார்டு
வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும்
வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு கட்டா
யமாக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:
வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான் றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை
http://www.utitsl.co.in/pan
(or)
www.tin-nsdl.com
(or)
www.incometaxindia.gov.in,
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான
வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும் இதைப்
பெறலாம்.
அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய

இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி 1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ் 2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ் 3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில் 5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு 6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது 7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட் 8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை 9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம் 10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தா ல், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போ துமா னவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணை யத்தளத்தை நாடலாம்.

சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது
வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவர ங்களை வருமான வரித்துறை
பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள்
ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும். அதைத் தெரிந்து கொள் வோம். உதாரணத்துக்கு
பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3
எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா
அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டாஎன்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல்
எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகு ம். இது 0001ல்
ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்து ம் வரிசை எண் தொடர்புடையதுதான்

மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு
முன்பு வரை விநியோகிக்க ப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம்.
எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய
புதிய லேமி னேட்கார்டை பெறவேண்டும் என விரும் பினால் மட்டும் புதிதாக விண்ண
ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான்
ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது
சேதமுற்றா லோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது
அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக்
கொள்வது புத்திசாலித்தனம்
--
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty Re: நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Sat Jun 29, 2013 8:53 am
பான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.
4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோ க்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகு ம்.
5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணை யங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.  தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசி யம்.
10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்ய அவசியம்.
11)சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போ து எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண் டும்.
மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம். இதற்காக, தற்போது மைனர்களு க்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வரு கின்றனர்.
“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண் ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக் கியுள்ளது.
மேலும், இந்தக் கார்டை வாங்கி னால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டி யிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந் துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு கட்டா யமாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:
வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான் றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை
http://www.utitsl.co.in/pan 
(or)
www.tin-nsdl.com
(or)
www.incometaxindia.gov.in,
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். 
அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறியஇதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம். விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி 1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ் 2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ் 3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில் 5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு 6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது 7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட் 8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை 9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம் 10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தா ல், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போ துமா னவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணை யத்தளத்தை நாடலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவர ங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும். அதைத் தெரிந்து கொள் வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டாஎன்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகு ம். இது 0001ல் ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்து ம் வரிசை எண் தொடர்புடையதுதான்
மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்க ப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமி னேட்கார்டை பெறவேண்டும் என விரும் பினால் மட்டும் புதிதாக விண்ண ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றா லோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்
Sponsored content

நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty Re: நிரந்திர கணக்கு எண் (Pan Card) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum