விண்டோஸ் 7ல் புதிய ஹார்ட் டிஸ்க் பார்ட்டிசன் (Hard Disk Partition) உருவாக்குவது எப்படி?
Tue May 20, 2014 9:11 am
கேள்வி: நான் விண்டோஸ் 7 இயக்க முறைமை கொண்ட எச்.பி. மடிக்கணினி பயன்படுத்துகிறேன். அதில் C,
D என இரு ஹார்ட் டிஸ்க் பார்ட்டிசன்கள் (Hard Disk Partition) உள்ளன. நான் மேலும் ஒரு பார்டிசனை உருவாக்க விரும்புகிறேன். அதை எப்படி அமைப்பது என்று தயவு செய்து கூறவும்.
-வெங்கடேஸ்வரன்
பதில்: பெரும்பாலும் நாம் புதிதாக மடிக்கணினி வாங்கும் போது அதில் தயாரிப்பாளர்கள் ஒரே ஒரு ஹார்ட் டிஸ்க் பார்ட்டிசன் (Hard Disk Partition) மட்டுமே வைத்திருப்பர். நாம் வசதியான இயக்கங்களுக்காகவும், தகவல் இழப்பைத் தவிர்க்கவும் ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிசன்களை வைத்திருக்க விரும்புவோம். விண்டோஸ் 7ல் நாம் 3 பார்ட்டிசன்கள் வரை உருவாக்கிக்கொள்ளலாம். வன் தட்டுகளை (Hard Disk) நிர்வகிக்க விண்டோஸ் தன்னுள் Disk Management என்ற வசதியைக் கொண்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நாம் புதிய பார்ட்டிசன்களை உருவாக்கலாம். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.
1. Winkey + R அழுத்தி ரன் (Run) பெட்டியைத் திறந்து அதில் diskmgmt.msc என்று டைப் செய்து என்டர் பொத்தானை அழுத்தவும் (பார்க்க: படம் 1). உடனே Disk Management விண்டோ திறக்கும்.
படம் 1
2. Disk Management விண்டோவில் தற்போது கணிப்பொறியில் உள்ள பார்ட்டிசன்களின் விவரங்கள் இருக்கும். அதில் நீங்கள் பிரிக்க விரும்பும் டிரைவைத் (Drive) தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக நீங்கள் C டிரைவைப் இரண்டாக பிரிக்க விரும்பினால் அதன் மீது மவுஸ் கர்சரை (Cursor) வைத்து வலது கிளிக் (Right Click) செய்து Shrink Volume ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும் (பார்க்க: படம் 2).
படம் 2
3. அடுத்து திறக்கும் பெட்டியில் Enter the amount of space to shrink in MB என்ற பெட்டியில் தங்கள் புதிதாக பிரிக்க விரும்பும் பார்ட்டிசனின் மெமரி அளவை MB யில் கொடுத்து Shrink கிளிக் செய்யவும்.
4. சிறிது நேரத்தில் Unallocated என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் ஒதுக்கிய நினைவக (Memory) அளவு தனியாக இருக்கும். அதில் வலது கிளிக் செய்து New simple volume தேர்ந்தெடுக்கவும் (பார்க்க: படம் 3).
படம் 2
4. அடுத்து வரும் வரவேற்பு செய்தியைப் படித்துவிட்டு Next அழுத்தி அடுத்த பக்கத்திற்கு செல்லவும். இந்தப் பக்கத்தில் நீங்கள் புதிதாக உருவாக்க விரும்பும் பார்ட்டிசனின் மெமரி அளவைக் கொடுத்து Next அழுத்தவும்.
குறிப்பு: நீங்கள் கொடுக்கும் மெமரி அளவு பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச MB அளவைக் (Maximum disk space) காட்டிலும் குறைவாகவும் குறைந்தபட்ச MB அளவைக் (Minimum disk space) காட்டிலும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
5. அடுத்த பெட்டியில் உங்களது புதிய பார்டிசனுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் எழுத்தைத் தேர்வு செய்து Next அழுத்தவும்.
6. அடுத்த பெட்டியில் தாங்கள் விரும்பும் ஃபைல் சிஸ்டம் (File system) மற்றும் பார்டிசன் பெயர் (Label) கொடுத்து Next அழுத்தி விவரங்களை ஒரு முறை சரிபார்த்த பின்பு Finish அழுத்தவும்.
அவ்வளவு தான். நீங்கள் தெரிவு செய்த பெயரில், அளவில் ஒரு புதிய வன் தட்டு பிரிவு (Hard disk partition) உருவாகி உங்கள் பயனுக்காகக் காத்திருக்கும். My Computer ஐத் திறந்து உறுதி செய்து கொள்ளவும்.
கணிப்பொறி சார்ந்த உங்களது சந்தேகங்கள் & கேள்விகளுக்கு அணுகவும்: kanippori@yahoo.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|