தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
குழந்தையை பேணுதல் (0 மாதம் முதல் 5 வயது வரை) Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

குழந்தையை பேணுதல் (0 மாதம் முதல் 5 வயது வரை) Empty குழந்தையை பேணுதல் (0 மாதம் முதல் 5 வயது வரை)

Sun Feb 02, 2014 6:27 am
இந்தக் கட்டுரை, என் அம்மா, பாட்டி போன்றவர் கூறியதை எல்லாம் குறித்து வைத்து கொண்டு, பின்பற்றிய என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் ஏதும் தவறு / சந்தேகம் / improvements / suggestions இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

குழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதத்திருக்கும் உண்டான குறிப்புக்களை தருகிறேன். இன்று ஒன்று முதல் ஆறு மாதம் வரையான பேணும் முறைகள். இது ஓரளவுக்கு guideline என்றே எடுத்துக்கொள்ளவும்.

அந்தந்த ஊரின் தட்பவெட்பம், மற்றும் குழந்தையின் உடல் நலம், தாயின் instinct (உள்ளுணர்வு) போன்றவை குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
==============================
மூன்று மாதம் முதல் ஐந்து வயது வரை, குழந்தை சரியான ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் பெறுமாறு கவனித்துப் பேணுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகிறது. இதனால் குழந்தை சரியான படி வளர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதில்தானே நமக்கும் peace of mind கிடைக்கிறது. குழந்தைகள் அதிகம் நோயுராமல் இருந்தாலே அவர்கள் நன்கு வளர்வார்கள்.

அதற்காக ஜுரம், ஜலதோஷம் கூட வராமலோ, பல் முளைக்கும் போது dysentry ஆவதையோ நம்மால் தடுக்க முடியாது. அது இயற்கை. இதனால் நோய் எதிர்ப்பு குழந்தையின் உடலில் அதிகரிக்கும். குழந்தைக்கு இந்தமாதிரி நேரங்களில் உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனைக்கு தக்கவாறு மருத்துவம் கொடுத்தால், மீண்டும் பழையபடி ஆரோக்கியம் அடைவார்கள்.

ஆறு மாதம் வரை போட்டால் போட்டபடியே கிடக்கிறதே குழந்தை என்று அலட்சியமாக நினைக்க முடியாது. அதே போல குழந்தைதானே என்று நினைத்து, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு முன் இஷ்டப்படி நடந்து கொள்வது அதன் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.

குடும்ப சூழ்நிலை, தாயின் மனநிலை முதல் தட்பவெட்பம் வரை ஒவ்வொரு விஷயமும் குழந்தை தாயின் வயிற்றில் உருவானதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும், குழந்தைகளைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வுல்கள் பலவாக இருந்தாலும், இன்று மிகக் குறைவான செலவிலேயே, சாதாரண இந்திய குடும்பத்தில் வழக்கமாக இருக்கும் உணவுப் பழக்கங்களை பின்பற்றியே, அதை ஒழுங்கு செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதைப் பார்க்கலாம்.

====================================
பிறந்த / கைக் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து அளிப்பது எப்படி?
தாய்ப்பால் மிக அவசியம். பிறந்த அன்றிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வயது வரை, முடிந்தால் இரண்டு வயது வரைக் கொடுப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திஅதிகமாகிறது. ஆரோக்கியம் நிறைந்த குழந்தையாக இருக்கிறது. பாலூட்டும் தாய், ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை, பூண்டு, மீன், கோதுமை அடிப்படையிலான உணவுகள், பால், தயிர், மோர் ஆகியவற்றை உண்பதால்அதிகம் பால் சுரக்கும். அரிசி, வாயு உண்டாகும், காய்கறிகள் (உருளை, சேனை போன்ற) மொச்சை, பயறு, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும், ஊறுகாய், உப்புகரிக்கும் பண்டங்கள் சாப்பிடாமல் இருப்பதாலும் பால் வற்றாமல் இருக்கும். பாலூட்டும்தாய் காரமான மற்றும் மாமிச வகை உணவுகள் அல்லது வாயு பதார்த்தங்களைசாப்பிடுவதால் குழந்தைக்கு ஆஸ்துமா, ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைக்குஜெரிக்கும் சக்தி (செரிமானம்) குறைந்து நாக்கு வெள்ளை படிந்து, மலஜலம் கழிப்பதிலும்அசௌகரியம் ஏற்படுகிறது. சரியான உணவு உண்பதால், தாயும் உடல் எடை அதிகரிக்காமல்பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைக்கு பத்து வயது வரை, செரிமானம் மற்றும் மல-ஜலம்கழிக்கும் பழக்கங்கள் சீராக இருந்தாலே, நோய் ஏற்படாமல் காக்க முடியும். "யாகாவாரயினும் நா காக்க" என்பது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.
குழந்தையை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள், காலை வெய்யில் படுமாறு ஒரு அரை மணிநேரம் கிடத்தி வைக்கவும். அப்படி போடும் போது, உடம்பில் டாபர் லால் தேல் அல்லது ஆலிவ் / கடுகு / நல்லெண்ணெய் தடவி, தலை உச்சியிலும் தொப்புளிலும், பிறப்புறுப்பிலும் சிறிது விளக்கெண்ணை தடவி (சும்மா தொட்டு தடவினால் போதுமானது) நல்ல துவைத்த காட்டன் வேஷ்டி அல்லது மல் துணியை கீழே போட்டு அதன் மேல் போடவும். வெறும் தரையில் யாருமே படுக்கக் கூடாது. வெய்யிலில் இருப்பதால் வைட்டமின் டி கிடைக்கிறது. (குளிர் நாட்களிலும், மழை நாட்களிலும் விளக்கெண்ணை உபயோகிக்க வேண்டாம்).
குழந்தைக்கு nappy (huggies போன்றவை) உபயோகப்படுத்தினால், இரவில் மட்டுமேஉபயோகிக்கவும். குளிப்பாட்டிய பின் சிறிது நேரம் மல் துணியால் ஆனஜட்டி உபயோகிக்கவும். அல்லது இப்படத்தில் கொடுத்த படி தைத்துவைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். இதனால் nappy rash வருவதை தவிர்க்கலாம்.
தினமும் குழந்தையைக் குளிப்பாட்டவும். குளிப்பாட்டிய உடனேயே நன்குநெஞ்சு/முதுகுபகுதிகளை உடனே துடைக்கவும். எப்போதும், முகத்திலும் தொப்புள் மற்றும்பிறப்புறுப்புப்பகுதிகளில் talcum powder போட வேண்டாம். அவசியம் என்றால் மட்டும், சிறிதுவிரலில்தொட்டு முகத்தில் தடவி விடவும். இதனால் சுவாசக் குழாயில் பவுடர் போவது தவிர்க்கலாம். சாயந்திர நேரங்களில் நல்ல சுத்தமான டர்கீ டவலை மிதமான வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உடலை நன்கு துடைத்து விடுங்கள்.
கைக் குழந்தையாக இருந்தாலும் அதுவும் ஒரு மனிதப் பிறவிதான். நம்மைப் போன்றே எல்லா உணர்வுகளும் நிறைந்தது. அதுக்கு ஒன்னும் தெரியாது என்று மட்டும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்கள் உணர்வுகளை உங்கள் விரல்கள் (தொடுதல்) மூலம் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை குழந்தைகள்.

பொறுமை இல்லாத தாய்மார்கள் / creche / care takers / ஆயாக்களுக்கு - யாரும்தான் இப்போ பக்கத்தில இல்லையே.யாருக்குத் தெரியப் போகிறது என்று உங்கள் அலட்சியம், உங்களுக்கு சம்பளம் ஈட்டும் தொழிலுக்கு வஞ்சனை மட்டும் இல்லை, ஒரு குழந்தையின் அன்பையும், எதிர்காலத்தையும் shatter செய்து பார்க்கிறீர்கள். இதனால் இழப்பு கடைசியில் உங்களுக்குத்தான் என்பதையும் உணர்ந்து, குழந்தைக்காக செய்யும் சிறிய வேலையையும் முழு ஈடுபாடோடு செய்தால், நீங்கள் குழந்தையோடு அதிகம் போராட வேண்டியிருக்காது.

நன்றி: தமிழ் மணம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum